சக்தி வலையில் சிக்கிய அரசி, சரவணனிடம் மாட்டிக்கொள்வாரா தங்கமயில்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' பழனி- சுகன்யா இருவரும் ரூமில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சுகன்யா, எனக்கு இங்கு இருக்கவே பிடிக்கவில்லை. ரூம் ரொம்ப சின்னதாக இருக்கிறது. எல்லோருக்கும் என்னால் சமைத்து கொட்ட முடியாது. நான் அடிக்கடி என்னுடைய அக்கா வீட்டுக்கு போவேன். என்னை வெளியில் கூட்டிட்டு போக வேண்டும். நான் சொல்வதை தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று பயங்கரமாக ஆர்டர் போட்டார். இது எல்லாம் பார்த்து பழனி ரொம்பவே ஷாக் ஆகி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
மறுநாள் காலையில் சுகன்யா, பாண்டியன் வீட்டு ஆட்கள் முன்பு நல்லவள் போல வேஷம் போட்டு வீட்டு வேலை எல்லாம் இழுத்து போட்டு செய்தார். இதை பார்த்து பாண்டியனுக்கு சந்தோசமாக இருந்தது. ஆனால், பழனி தான் உள்ளுக்குள் பயப்பட்டார். அந்த சமயம் பார்த்து மீனாவிற்கு அவருடைய அம்மா போன் செய்து, அப்பாவிற்கு நெஞ்சுவலி வந்து விட்டது. ஹாஸ்பிடல் இருக்கிறோம் என்று சொன்னார். இதனால் மீனா ரொம்பவே பதறி போய் ஹாஸ்பிடலுக்கு போனார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோடில் ஹாஸ்பிடலில் மீனாவின் அப்பாவிற்கு சின்ன ஆபரேஷன் செய்தால் குணமாகிவிடும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்கள். இன்னொரு பக்கம் பாண்டியனுக்கு போன் செய்த செந்தில், மீனாவின் அப்பா நலமாக இருப்பதை சொன்னார். இதுதான் சந்தர்ப்பம் என்று தங்கமயில் வேலைக்கு போவதை முடக்கு போட்டார். உடனே பாண்டியன், நீ வேலைக்கு கிளம்பு. இது ஒரு பெரிய விஷயம் இல்லை என்று சொன்னார். தங்கமயிலுக்கு என்ன சொல்வது செய்வதென்றே புரியவில்லை.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் அரசி, கல்லூரிக்கு போகும்போது யாருக்கும் தெரியாமல் சக்திக்கு பாய் சொல்லிவிட்டு சொன்னார். இதையெல்லாம் சுகன்யா பார்த்துவிட்டு சக்தியின் அப்பாவிடம் பேசி இருந்தார். அவர்கள் ஏதோ சொல்லி சமாளித்தார்கள். அப்போது சுகன்யா, பாண்டியனை பழிவாங்க நானும் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று சொன்னவுடன் அவர்கள் இருவருமே ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். அதற்குப்பின் ஹாஸ்பிடலில் மீனாவின் அப்பா கண்விழித்து விட்டார். அப்போது செந்தில், மீனாவின் அப்பாவிடம் பேச, அவர் அமைதியாக இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சரவணன், தங்கமயிலை வேலைக்கு அழைத்து செல்கிறார். என்ன செய்வது என்று புரியாமல் தங்கமயில் தவிக்கிறார். பின் தங்கமயில், இது தான் வேலை செய்யும் இடம் என்று ஒரு பில்டிங்கை காண்பித்து தங்கமயில் இறங்கி கொள்கிறார். அங்கு இருக்கும் வாட்ச் மேனிடம் இந்த வேலை இருக்குமா? என்று தங்கமயில் கேட்க, உடனே அவர் அதெல்லாம் கிடையாது கிளம்பு என்று மிரட்டி அனுப்பி விடுகிறார். பின் எங்கு செல்வது என்று புரியாமல் ஏதோ ஒரு இடத்தில் உட்கார்ந்து தங்கமயில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
அங்கு இருப்பவர்கள் தங்கமயிலை ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள். அதனால் என்ன நடக்குமோ? என்று தங்கமயில் இருக்கிறார். இன்னொரு பக்கம் அரசி, சக்தியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது சக்தி, தன்னுடைய காதலைப் பற்றி கேட்க, அரசி ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். பின் சக்தியின் காதலை ஏற்றுக்கொண்டு அரசி சிரித்து விட்டு செல்கிறார். அரசி தன் வலையில் விழுந்ததை நினைத்து சக்தி சந்தோஷப்படுகிறார். கடைசியில் சரவணன், தங்கமயிலுக்கு போன் செய்து நான் வேலை செய்யும் இடத்திற்கு வருகிறேன் என்று சொன்னவுடன் தங்கமயில் ரொம்பவே பதறுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.