குமாரின் நிலைமையை நினைத்து வருத்தப்படும் அரசி, வேதனையில் தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் தங்கமயில் கர்ப்பமாக இருப்பதால் கேக் வெட்டி குடும்பமே சந்தோஷமாக கொண்டாடினார்கள். அதற்கு பின் ரூமில் சரவணன், தங்க மயிலுக்கு மல்லி பூ வாங்கி தந்தார். பின் இருவருமே குழந்தையை பற்றி ரொம்ப எமோஷனலாக பேசினார்கள். மறுநாள் காலையில் தங்கமயிலின் செக்கப்பிற்காக சரவணன் குடும்பத்தில் கிளம்பினார்கள். குழந்தையை பார்க்கும் ஆர்வத்தில் சரவணன் ரொம்பவே எதிர்பார்த்து இருந்தார். ஹாஸ்பிடலுக்கு தங்கமயில் அம்மா, கோமதி, ராஜி, கதிர் எல்லோருமே சென்றிருந்தார்கள்.
டாக்டர், தங்கமயில் கர்ப்பமாகவே இல்லை. அது சில கிட்டில் இப்படித்தான் தவறான ரிசல்ட் வரும் என்றார். இதை கேட்டவுடன் சரவணன் ஆடிப் போனார். கோமதி, தங்கமயில் அம்மா எல்லோருமே ரொம்பவே வருத்தப்பட்டார்கள். தங்கமயில் ஹாஸ்பிடல் என்று கூட பார்க்காமல் கதறி அழுதார். வேதனையில் சரவணன் அங்கு இருந்து கோபமாக சென்று விட்டார். உண்மை அறிந்து வீட்டில் உள்ள எல்லோரும் வருத்தப்பட்டார்கள். பின் வீட்டிற்கு வந்த தங்கமயில் அழுது கொண்டே இருந்தார். சரவணன், தங்கமயில் இடம் பேசாமல் வேலைக்கு கிளம்பி விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
சரவணன் தேம்பி தேம்பி அழுதார். பாண்டியன், ஹாஸ்பிடலில் என்ன சொன்னார்கள்? என்றார். உடனே கதிர் நடந்ததை எல்லாம் சொன்னார். பின் பாண்டியன், சரவணனுக்கு ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் விஷயம் தெரிந்து வீட்டிற்கு வந்த மீனா, தங்கமயிலுக்கு ஆறுதல் சொன்னார். வீட்டில் உள்ள எல்லோருமே குழந்தை நினைத்து ரொம்பவே எமோஷனலாக அழுது பேசிக்கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் பாண்டியன், தங்கமயிலுக்கு அறிவுரை சொன்னார். இருந்தாலுமே சரவணன்-தங்கமயில் மனமுடைந்து அழுது கொண்டே இருந்தார். இன்னொரு பக்கம் இந்த விஷயத்தை சுகன்யா, குமார் வீட்டில் சொன்னார். இதை கேட்டு சக்திவேல் ரொம்பவே சந்தோஷமாக இருந்தார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் சரவணன் வீட்டிற்கு வரவில்லை என்று கோமதி கவலையில் இருந்தார். பின் வீட்டிற்கு வந்த சரவணன் இடம் செந்தில், கதிர் இருவரும் ஆறுதலாக பேசி இருந்தார்கள். பின் ரூமிற்கு சென்ற சரவணனிடம் தங்கமயில் ரொம்ப எமோஷனலாக அழுது பேசி இருந்தார். கோபத்தில் சரவணன், நீ பொய் பேசுவது என்ன புதுசா? குழந்தை விஷயத்தில் கூட என்னை பொய் சொல்லி ஏமாற்றி விட்டாயே. உன்னை நான் மன்னிக்கவே மாட்டேன். இனி நீ யாரோ நான் யாரோ என்று ரொம்ப மோசமாக திட்டி இருந்தார். இதையெல்லாம் கேட்டு உடைந்து போன தங்கமயில் எவ்வளவோ எடுத்து சொல்லி புரிய வைத்தார். ஆனால், சரவணன் கேட்கவே இல்லை.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வீட்டில் தங்கமயில் எதார்த்தமாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கோமதி, நீ வெளியில் போகாதே, குழந்தையை பற்றி கேட்டு கஷ்டப்படுத்துவார்கள் என்கிறார். இதை கேட்டு தங்கமயில் வருத்தப்படுகிறார். இன்னொரு பக்கம் குமார் திண்ணையில் படுத்து கொண்டிருக்கிறார், இதை பார்த்த குமாரின் குடும்பத்தினர் ரொம்பவே கஷ்டப்படுகிறார்கள். இது எல்லாம் பார்த்த அரசிக்குமே சங்கடமாக இருக்கிறது. பின் குமாரை சந்தித்த அரசி, நீ தேவை இல்லாமல் பழிவாங்கும் எண்ணத்தை விடு. நான் நன்றாக தான் இருக்கிறேன்.
சீரியல் ட்ராக்:
என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள். நீ இப்படி இருப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்றெல்லாம் பேசுகிறார். இதைக் கேட்டு குமாருமே எமோஷனல் ஆகிறார். அந்த சமயம் வந்த சக்திவேல், ராஜியை திட்டி என் மகன் மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்க சொல் என்று அனுப்பி விடுகிறார். அதற்குப்பின் தங்கமயில், தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று சரவணன் சொன்னதை சொல்கிறார். இதைக் கேட்ட தங்கமயில் அம்மா, நீ தான் உன் கணவனை கைக்குள் வைக்க வேண்டும். தயவு செய்து இங்கு வந்து விடாதே என்று சொல்வதால் ரொம்ப வேதனையில் தங்கமயில் அழுகிறார். பின் தங்கமயில், சரவணன் போன் எடுக்கவில்லை என்று கடைக்குப் போகிறார். பின் சரவணன், தங்கமயில் திட்டி அங்கிருந்து அனுப்பி விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.