தங்கமயிலின் மண்டையை கழுவும் பாக்கியம், சரவணன் கொடுத்த வாக்குறுதி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கதிர், காந்திமதி இடம் பிரச்சனை செய்வது போலவே பேசிக் கொண்டிருந்தார். கதிரின் குரலை கேட்டு முத்துவேல் குடும்பத்தில் உள்ள எல்லோருமே வெளியே வந்துவிட்டார்கள். காந்திமதிக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது சக்திவேல், தான் செய்த தவறுக்கு காந்திமதி இடம் மன்னிப்பு கேட்டு வீட்டிற்கு அழைத்தார். பாண்டியன், கோமதி வேண்டாம் என்று தடுத்தார்கள். ஒரு கட்டத்தில் சக்திவேல் காந்திமதியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். ஒரு வழியாக காந்திமதி தன்னுடைய மகன்கள் வீட்டிற்கு செல்லவே முடிவெடுத்தார். இதை பார்த்து முத்துவேலுக்கு சந்தோசமாக இருக்கிறது. கோமதி, கதிரை பார்த்து பயங்கரமாக கோபப்பட்டார்.
கோமதி, எதற்காக இப்படி என் அம்மாவை பேசினாய்? என்று கேட்டார். பாண்டியன், ராஜி எல்லோருமே கதிரை திட்டிக் கொண்டிருந்தார்கள். உடனே கதிர், தெரு முனையில் முத்துவேல் மாமாவை பார்த்து உன் அம்மாவை பார்த்துக் கொள்ளக்கூட துப்பில்லையா என்று அவமானப்படுத்தினார்கள். அதற்காகத்தான் நான் அப்படி செய்தேன் என்றார். கோமதி, நீ என்ன காரணம் சொன்னாலும் நீ செய்தது தவறு. எதுவாக இருந்தாலும் நீ எங்களிடம் சொல்லி இருக்கணும் என்று சொல்லி திட்டி விட்டு சென்றார். பின் ராஜி, நீ எதுவாக இருந்தாலும் அப்பத்தாவை அப்படி பேசி இருக்கக் கூடாது என்று சண்டை போட்டார். ஆனால், கதிர் அதைப்பற்றி எதுவும் கண்டு கொள்ளவில்லை.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இன்னொரு பக்கம் சக்திவேல், இதுதான் சந்தர்ப்பம் என்று கதிரை திட்டுக் கொண்டிருந்தார். முத்துவேல், நம்முடைய அம்மா வீட்டிற்கு வந்துவிட்டார். தேவையில்லாமல் எதையும் பேச வேண்டாம் என்றார். சக்திவேல், மாப்பிள்ளை மீது ரொம்பவே அண்ணன் கரிசனம் பட்டார். எப்படியாவது இவர்களை சேர விடக்கூடாது பிரிக்க வேண்டும் என்று தன் மகனிடம் திட்டம் போட்டுக் கொண்டிருந்தார். அதற்குப்பின் கோர்ட்டில் விவாகரத்து கேஸ் நடப்பதால் கோமதி- பாண்டியன் இருவரும் சரவணனிடம் பேசி இருந்தார்கள். பாண்டியன், எதுவாக இருந்தாலும் யோசித்து முடிவு எடு, அவசரப்படாதே என்றார். சரவணன், அதை எதையுமே கண்டு கொள்ளவில்லை அமைதியாக இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காந்திமதி, கதிரை தப்பா நினைக்காதே. அவன் தெரியாமல் பேசிவிட்டார் என்று சொல்கிறார். முத்துவேல், எனக்காக தான் கதிர் அப்படி நடந்து கொண்டான். நான் எல்லோரிடமும் அவமானப்பட்டதால் தான் கதிர் உங்களை இங்கு அனுப்பி வைத்தார் என்று சொல்கிறார். இதை கேட்டு காந்திமதிக்கு சந்தோஷமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில் எல்லோருமே சரவணன் விவாகரத்து விஷயமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கோமதிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. ஆனால், தங்கமயில் மீண்டும் வீட்டிற்கு வர வேண்டாம் என்பது போலவே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் பாக்கியம், நீ குழந்தையை காரணமாக வைத்து விவாகரத்து வேண்டாம் என்று சொல். எப்படியாவது இந்த வாய்ப்பை விட்டு விடாதே என்று தங்கமயிலிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதற்குப்பின் கோவிலில் சரவணன்- அஞ்சலி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அஞ்சலி, நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வு தான் எனக்கு வேண்டும் என்று எமோஷனலாக பேசுகிறார். சரவணன், என்ன நடந்தாலும் நான் இனிமேல் தங்க மயிலுடன் சேர்ந்து வரமாட்டேன். ஒருமுறை உன்னை ரொம்ப காயப்படுத்தி விட்டேன். இனிமேலும் உன்னை காயப்படுத்த மாட்டேன். நான் உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று மீண்டும் மீண்டும் உத்தரவாதம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.