தங்கமயிலை மோசமாக நடத்தும் பாக்கியம், முன்னாள் காதலியுடன் கடலை போடும் சரவணன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் செந்தில், என்னிடம் ஆவது நீ உண்மையை சொல்லி இருக்கலாம் என்றார். மீனா, உங்களுக்கு உண்மை தெரிந்தது என்றால் மாமா உங்களை சும்மா விட்டிருக்க மாட்டார் என்று சொல்வதால் செந்தில் அமைதியாகி விட்டார். அதற்குப்பின் கோமதி, பாண்டியனுக்காக சமைத்து வைத்து சாப்பிட கூப்பிட்டார். ஆனால், கோபத்தில் பாண்டியன் சாப்பிடவில்லை. கோமதி, இனிமேல் நான் இவரிடம் போய் நிற்கப் போவதில்லை. இருந்தாலும் இவர் பேச வேண்டும் என்று பூஜை ஒன்று ஏற்பாடு செய்திருக்கிறேன். அது செய்யப்போகிறேன் என்று சரவணனிடம் புலம்பினார்.
சரவணன் கோயிலுக்கு சென்றிருந்தார். அங்கு சரவணன் முன்னாள் காதலி அஞ்சலியும் வந்திருக்கிறார். சரவணன், அஞ்சலி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து ஷாக் ஆனார்கள். பின் சரவணன், அஞ்சலியிடம் திருமண வாழ்க்கையை பற்றி விசாரித்தார். அஞ்சலி, நான் என் அம்மா வீட்டில் தான் இருக்கிறேன். அதை பற்றி பேசாதே என்றார். ஆனால், சரவணன் தன்னுடைய திருமண வாழ்க்கையை பற்றி எதுவுமே சொல்லவில்லை. இன்னொரு பக்கம் செந்தில்- மீனா இருவரும் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
கோமதி, மீனாவிடம் போன் செய்து விசாரித்தார். அதற்குப்பின் தங்கமயில், மீனாவிற்கு ஃபோன் செய்தார். அதை பார்த்து செந்தில், உண்மை எது என்னவென்று புரியாமல் மீனாவை கண்டமேனிக்கு நடுரோட்டிலேயே திட்டி விட்டு சென்றார். இன்னொரு பக்கம் கதிர்- ராஜி இருவரும் சந்தோஷமாக கோச்சிங் சென்டருக்கு போனார்கள். அப்போது கதிருக்கு போன் செய்த கோமதி, ராஜி நல்லபடியாக பார்த்துக்கொள். அவள் மீது கோபப்படாதே. உன் அப்பா போல் இருக்காதே என்றெல்லாம் அறிவுரை செய்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கதிர்-ராஜு இருவரும் மொத்த குடும்பத்திற்குமே துணி எடுக்கிறார்கள். பின் இருவருமே சென்னையில் இருந்து கிளம்ப தயாராகிறார்கள். இன்னொரு பக்கம் அஞ்சலி, சரவணனுக்கு மெசேஜ் செய்கிறார். சரவணன், பதில் ரிப்ளை செய்கிறார். பின் இருவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஃபோனில் பேசிக் கொள்கிறார்கள். அதற்குப்பின் பாண்டியன் வீட்டில் எல்லோருமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். கோமதி பரிமாற வருவதற்குள் பாண்டியன் சாப்பாட்டை எடுத்து வைத்துக் கொள்கிறார்.
சீரியல் ட்ராக்:
பழனி கோமதிக்காக சப்போர்ட் செய்து பேசுகிறார். இதனால் கோபப்பட்ட பாண்டியன், பழனியை திட்டு விடுகிறார். இன்னொரு பக்கம் தங்கமயிலை அவருடைய தங்கை வற்புறுத்தி சாப்பிட அழைத்து வருகிறார்.
பாக்கியம், மாமியார் வீட்டில் வாழத்துப்பில்லை. இங்க மூணு பேருக்கு சமைக்கவே வழியில்லை. இதில் இன்னொரு ஆளுக்கு சேர்த்து சமைக்கணுமா? ஒழுங்கு மரியாதையாக உன் மாமியார் வீட்டிற்கு போகும்
வழியை பார் என்று மோசமாக பேசி விடுகிறார். இதனால் தங்கமயில் மனமுடைந்து சாப்பிடாமல் அங்கிருந்து சென்று விடுகிறார். பின் தன் கணவருக்கு வாய்ஸ் மெசேஜ் பேசி அனுப்புகிறார்.