நகை விஷயத்தில் அழுது ட்ராமா போடும் பாக்கியம், உண்மையை சொல்வாரா மீனா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ராஜி- கதிர் இருவரும் தங்கமயில் செய்த துரோகத்தை நினைத்து எமோஷனலாக பேசி அழுது கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் சரவணன், தன் குடும்பத்தை போலீஸ் கைது செய்து சித்திரவதை செய்வதை போல கனவு கண்டு கத்தினார். பழனி, சரவணனுக்கு தைரியம் சொல்லி தூங்க வைத்தார். இன்னொரு பக்கம் கோமதி, அரசி எல்லோருமே போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததை நினைத்து புலம்பினார்கள். பாண்டியன் இதை எல்லாம் பார்த்து வருத்தப்பட்டார்.
கோமதி, அரசிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு பாண்டியன் வந்தார். அதற்கு பின் பாண்டியனுக்கு தூக்கம் வரவில்லை. பின் பாண்டியன் எல்லோருக்கும் டீ போட்டு கொடுத்தார். ராஜி, நானே செய்து கொள்கிறேன் என்று தடுத்துமே பாண்டியன் கேட்க வில்லை. பாண்டியன் வேலைக்கு கிளம்பி வரும்போது
முத்துவேல் எதிரே நின்றார். முத்துவேல்-பாண்டியன் இருவரும் வாய் திறந்து பேசாமல் கண் மூலமாக பேசி கொண்டார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
கோமதி தான் செய்த தவறை உணர்ந்து பழனியிடம் மன்னிப்பு கேட்டு எமோஷனலாக பேசி இருந்தார். பின் ராஜி, தன் அப்பாவிடம் கொடுக்க சொல்லி இரண்டு கடிதத்தை பழனியிடம் கொடுத்தார். வீட்டிற்கு வந்த பழனியிடம் காந்திமதி, கோமதி குடும்பத்தை பற்றி எல்லாம் விசாரித்தார். அதற்குப்பின் பழனி, ராஜி கொடுத்த கடிதத்தை தன்னுடைய அண்ணன்கள் இடம் கொடுத்தார். முத்துவேல் அந்த கடிதத்தை பிரித்து படித்தார். ராஜி எமோஷனலாக தன் அப்பாவிற்கு நன்றி சொல்லி எழுதி இருந்தார். இன்னொரு பக்கம் சக்திவேலும், ராஜி எழுதிய கடிதத்தை பார்த்து ரொம்பவே அழுதார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் போலீஸ் ஸ்டேஷனில் நகையை ஒப்படைக்க செல்வதால் செந்தில்,
நான் கடையை பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வாருங்கள் என்று சொல்கிறார். அதற்குப் பின் எல்லோரும் கிளம்பி போலீஸ் ஸ்டேஷன் செல்கிறார்கள். அங்கு நகைகளை எல்லாம் மீனா எடுத்துக் கொடுக்கிறார். பாக்கியா, நகைகளை பார்த்து இது கருத்து விட்டது. இதெல்லாம் எங்களுடைய நகையில்லை. கவரிங் நகை என்று அழுது ட்ராமா செய்கிறார். பாண்டியன், கோமதி இருவருக்கும் ஒன்றுமே புரியவில்லை. போலீஸ், இது எப்படி நடந்தது? என்ன ஆச்சு? என்று கேட்கிறார்.
சீரியல் ட்ராக்:
பாக்கியா, நாங்கள் என்பது பவுன் நகை போட்டோம். ஆனால், எல்லாமே கவரிங் ஆக இருக்கிறது. இவர்கள் பையனுக்கு கவர்மெண்ட் வேலை வாங்குவதற்கும், கார் போட்டு தருவதற்கும் எங்களுடைய நகையை வைத்து தான் செய்திருக்கிறார்கள் என்பது இப்பதான் புரிகிறது என்று புது ட்ராமா போடுகிறார். இதையெல்லாம் பார்த்து கோபப்பட்ட மீனா, நீங்கள் உண்மையாகவே என்பது பவுன் நகை போட்டீர்களா? அவர்கள் சொல்வதெல்லாம் பொய். என்பது பவுன் நகை அவர்கள் போடவில்லை. எட்டுப் பவன் தான் உண்மை. இந்த விஷயம் தாலி பிரித்து கோர்க்கும் விழாவின் போது தெரிந்தது என்று சொல்கிறார். இதைக் கேட்டு கோமதி ஷாக் ஆகிறார்.