கோமதியை அவமானப்படுத்திய மலரின் மாமனார், கொந்தளிக்கும் செந்தில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 12/5/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சுரேஷுக்காக மதி சமைத்துக் கொடுத்தார். சுரேஷும் ஆச்சரியத்துடனே சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வந்த மலரின் மாமியார், மதி வேலை செய்வதை வியந்து போய் பாராட்டினார். இருந்தாலும் மதி அதை கண்டுகொள்ளாமல் அங்கிருந்து சென்று விட்டார். இன்னொரு பக்கம் ஆபரேஷன் நினைத்து முத்துவேல் ரொம்பவே பயந்து கொண்டிருந்தார். கதிர் அவருக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார். அதற்குப்பின் இருவரும் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்பினார்கள்.

ரேவதி, தங்கராஜ் இடம் அவுட்டிங் செல்வதை பற்றி கேட்டார். தங்கராஜ் எனக்கு அதில் விருப்பமில்லை என்றார். ரேவதி, குழந்தைகளுக்காக போகலாம். நாங்கள் மட்டும் போகிறோம் என்றார். இதை கேட்டு தங்கராஜ் கோபப்பட்டார். இன்னொரு பக்கம் வீட்டில் மலர் பம்பரமாக வேலை செய்து கொண்டிருந்தார். எல்லோருமே அவுட்டிங் செல்வதற்காக ரெடியானார்கள். ஆனால், மலர் மட்டும்தான் எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தார். அப்போது மலரின் மாமியார், இன்னும் ரெடியாகவில்லையா? என்று திட்டினார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

உடனே மலர் சீக்கிரமாக ரெடியாகி வந்து விட்டார். பின் எல்லோருமே கிளம்பி போனார்கள். பஸ் ஒரு இடத்தில் நின்று கொண்டிருக்கும் போது அங்கு கதிர் இளநீர் குடித்து கொண்டு இருந்தார். அதை ராஜி பார்த்து விட்டார். கதிரை பார்த்தவுடன் ராஜி, மீனாவிடம் சொன்னார். ஆனால், மீனா நம்பவில்லை. அதோடு கதிர், ராஜியை பார்க்கவில்லை. உடனே பஸ் எடுத்து விட்டார்கள். ராஜி, கதிரை பற்றி யோசித்துக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் முத்துவேல் ஆபரேஷன் நினைத்து ரொம்பவே பயந்து கொண்டிருந்தார். கதிர் அவருக்கு ஆறுதல் சொல்லுகிறார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தீம் பார்கில் கோமதி குடும்பம், மலரின் குடும்பம் வந்து விடுகிறார்கள். எல்லோருமே ஜாலியாக விளையாட போகலாம் என்று நினைக்கிறார்கள். அப்போது மலரின் மாமனார், மாமியார் இருவரும் எல்லோரும் சென்று விட்டால் எங்களுக்கு தேவையானதை யார் செய்வார்கள் என்று சொல்கிறார்கள். இதனால் மலர், பாக்கியராஜ் இருவருமே அங்கே இருந்து விடுகிறார்கள். மற்றவர்கள் மட்டும் போய் விளையாட போகிறார்கள். பின் மலருக்கு மாற்றி மாற்றி மாமனார்-மாமியார் இருவரும் வேலை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து கோமதிக்கு கடுப்பாகிறது. இருந்தாலும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

அப்போது வந்த மதி, உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் வீட்டிலேயே இருக்க வேண்டியதுதானே, எதற்கு இவர்களையும் கஷ்டப்படுத்துகிறீர்கள் என்று எதிர்த்து பேசுகிறார். இதனால் கோபப்பட்டு மலரின் மாமனார், மாமியார் இருவரும் மதியை திட்டுகிறார்கள். ஒரு கட்டத்தில் கோமதி, மதி பேசுவது சரிதான். எதற்காக இப்படி வேலை வாங்குகிறீர்கள் என்று கேட்கிறார். கோபத்தில் மலரின் மாமனார்-மாமியார், கோமதியை அவமரியாதையாக பேசி விடுகிறார். இதனால் கோமதி ரொம்பவே மனமடைந்து விடுகிறார். அந்த சமயம் பார்த்து செந்தில் அங்கு வருகிறார். செந்தில் இடம் நடந்ததை எல்லாம் கோமதி சொல்கிறார். பின் மீனா-செந்தில், மலரின் மாமனாரிடம் சண்டை வாங்குகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full