பழனியை வெளுத்து வாங்கும் சுகன்யா, உண்மையை அறிந்தாரா சரவணன்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 24/2/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சரவணன், தங்கமயிலை வேலைக்கு அழைத்து சென்றார். என்ன செய்வது என்று புரியாமல் தங்கமயில் தவித்தார். பின் தங்கமயில், இது தான் வேலை செய்யும் இடம் என்று ஒரு பில்டிங்கை காண்பித்து தங்கமயில் இறங்கி கொண்டார். அங்கு இருக்கும் வாட்ச் மேனிடம் இந்த வேலை இருக்குமா? என்று தங்கமயில் கேட்க, உடனே அவர் அதெல்லாம் கிடையாது கிளம்பு என்று விரட்டி விட்டார். பின் எங்கு செல்வது என்று புரியாமல் ஏதோ ஒரு இடத்தில் உட்கார்ந்து தங்கமயில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அங்கு இருப்பவர்கள் தங்கமயிலை ஒரு மாதிரியாக பார்க்க, அவர் ரொம்ப பயந்தார். இன்னொரு பக்கம் அரசி, சக்தியிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது சக்தி, தன்னுடைய காதலைப் பற்றி கேட்க, அரசி ஏதேதோ சொல்லி சமாளித்தார். பின் சக்தியின் காதலை ஏற்றுக்கொண்டு அரசி சிரித்து விட்டு சென்றார். அரசி தன் வலையில் விழுந்ததை நினைத்து சக்தி சந்தோஷப்பட்டார். கடைசியில் சரவணன், தங்கமயிலுக்கு போன் செய்து நான் வேலை செய்யும் இடத்திற்கு வருகிறேன் என்று சொன்னவுடன் தங்கமயில் ரொம்பவே பதறி போனார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

மேலும், சரவணன் வருவதற்குள் தங்கமயில் தான் வேலை செய்வதாக சொல்லும் இடத்திற்கு வந்து விட்டார். ஒரு வழியாக சரவணன் இடம் இருந்து தங்கமயில் தப்பித்து விட்டார். இன்னொரு பக்கம் மளிகை கடையில் தூங்காததால் பழனி தூங்கி தூங்கி விழுந்தார். இதனால் பாண்டியன் அவரை திட்டி வீட்டுக்கு போக சொன்னார். அந்த சமயம் பார்த்து போன் செய்த சுகன்யா, என்னை ஏன் தனியாக விட்டுப் போனீர்கள். உங்களை திருமணம் செய்திருக்க கூடாது என்று வழக்கம் போல பழனியை திட்ட ஆரம்பித்து விட்டார்.

கடந்த வாரம் எபிசோட்:

இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் மீனாவின் அப்பாவை பார்க்க பாண்டியன் வந்தார். பின் கதிர் ஹாஸ்பிடலுக்கு வந்ததால் மீனா, அவர் அம்மா இருவருமே வீட்டிற்கு சென்று விட்டார்கள். செந்திலும் தன் மாமனாரின் நிலை நினைத்து கதிரிடம் வருத்தப்பட்டு பேசி இருந்தார். அதற்குப்பின் வீட்டில் பாண்டியன், அரசி இடம் நீ கோயிலுக்கு போனியா? யாரிடம் பேசிக் கொண்டிருந்தாய்? என்று கேட்டதற்கு, அவர் ரொம்ப பயந்து விட்டார். பின் அரசி, ஏதோ சொல்லி சமாளிக்க, கோமதி கோபப்பட்டு அரசியை திட்டி இருந்தார். ஆனால், கடைசிவரை அரசி உண்மையை சொல்லவே இல்லை.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில் ரூமுக்குள் பழனி வந்த உடனே சுகன்யா தாண்டவம் ஆடுகிறார். ஏன் வீட்டிற்கு வரவில்லை? கல்யாணம் ஆக்கி எத்தனை நாள் ஆகுது? எதற்காக இப்படி பண்ணுகிறீர்கள் என்று பழனியை வறுத்தெடுக்கிறார். ஆனால், பழனியால் எதுவுமே பேச முடியவில்லை அமைதியாக இருக்கிறார். அதற்கு பின் தூங்கும்போது பழனி குறட்டை விடுகிறார். இதனால் கோபப்பட்ட சுகன்யா பழனியை திட்டி எழுப்பி விடுகிறார். இதையெல்லாம் வெளியே வந்த சரவணன் கேட்டு வருத்தப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் பழனி இரவு முழுவதும் தூங்காமல் கண் முழித்துக் கொண்டே இருக்கிறார். இன்னொரு பக்கம் கதிர் ஹாஸ்பிடலில் இருப்பதால் ராஜி போன் செய்து நலம் விசாரிக்கிறார். இருவருமே ரொம்ப நேரமாக பேசுகிறார்கள். மறுநாள் கடையில் பழனி தூங்கிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்தவுடன் பாண்டியன் திட்டுகிறார். அதற்குப்பின் செந்தில், பழனியை அழைத்துக்கொண்டு வெளியே வருகிறார். அப்போது வந்த சரவணன், உங்களுக்கும் அத்தைக்கும் என்ன பிரச்சனை? என்ன நடக்கிறது? என்று வெளிப்படையாக கேட்டவுடன் பழனி ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full