கதிரை அசிங்கப்படுத்தியதால் குமாரை வெளுத்து வாங்கிய ராஜி, அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 25/11/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பழனி, பாண்டியனும் கோமதியும் தன்னை புரிந்து கொள்ளாததை பற்றி சொல்லி அழுதார். இதுதான் சந்தர்ப்பம் என்று சுகன்யா, பாண்டியன் குடும்பத்தை பற்றி மோசமாக பேசி இருந்தார். முத்துவேல், இனி உன் கடை வியாபாரத்தையும் குடும்பத்தையும் பார் என்று அறிவுரை எல்லாம் சொன்னார். இன்னொரு பக்கம் கோமதி, பழனி தனக்கு துரோகம் செய்துவிட்டான் என்று நினைத்து ரொம்பவே அழுது புலம்பி கொண்டிருந்தார். மீனா-ராஜி இருவருமே அப்படியெல்லாம் இருக்காது என்று பழனிக்கு சப்போர்ட்டாக பேச பார்த்தார்கள். ஆனால், கோமதி கேட்கவில்லை.

சரவணன், பழனி கடை ஆரம்பித்ததையும் வீட்டில் பாண்டியன் கோபப்பட்டு சண்டை போட்டதுமே சொன்னார். இதனால் கோபப்பட்ட செந்தில், பழனியின் கடைக்கு வந்தார். அப்போது சரவணன்- பழனி இருவருமே கடை ஆரம்பித்ததை பற்றி பழனியிடம் கேட்டார்கள். கோபத்தில் செந்தில் ரொம்ப மோசமாக பழனியை பேசி விட்டார். இதனால் கொந்தளித்த பழனி, ஆமாம் திட்டம் போட்டு தான் செய்தேன். என்னை ஒதுக்கிய குடும்பம் எனக்கும் வேண்டாம் என்றெல்லாம் பதிலுக்கு பதில் பேசி விட்டார். இதனால் ஆத்திரமடைந்து சரவணன்- செந்தில் இருவருமே அங்கிருந்து சென்றார்கள். இதையெல்லாம் பார்த்து சக்திவேல் ரொம்பவே சந்தோஷப்பட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இன்னொரு பக்கம் காந்திமதி, இது எங்களுக்கே தெரியாத நடந்த விஷயம் என்று தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். ஆனால், கோமதி கேட்கவில்லை. ருத்ர தாண்டவம் ஆடுகிறார். வடிவு, மாரி இருவருமே பழனியை திட்டியதற்காக கோமதி குடும்பத்தை திட்டினார்கள். உடனே கொந்தளித்த மீனா, நீங்கள் பண்ணது நியாயமா? நீங்கள் செய்து தான் துரோகம். நீங்கள் மூத்த மருமகளாக இப்படி கேவலமாக செய்வீர்களா? என்றெல்லாம் வெளுத்து வாங்கினார். இதைக் கேட்டு முத்துவேல் குடும்பம் ஆடி போகிறது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பழனியின் கடைக்கு கதிர் சென்று விசாரித்துக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் வந்த குமார், கதிரை மோசமாக பேசி திட்டுகிறார். பழனி எவ்வளவு தடுத்துமே குமார் கேட்கவில்லை. ஆனால் கதிர் எதுவும் பிரச்சினை வேண்டாம் என்று அமைதியாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் குமார், கதிரை அடித்து வெளியே தள்ளுகிறார். இதையெல்லாம் சுகன்யா வீடியோவாக எடுத்து ராஜிக்கு அனுப்பி விடுகிறார். பின் பழனி, குமார் தடுத்து கதிரை அங்கிருந்து அனுப்பி விடுகிறார். இன்னொரு பக்கம் இதை அறிந்த ராஜி கோபத்தில் குமார் சட்டை பிடித்து சண்டை வாங்குகிறார்.

சீரியல் ட்ராக்:

பின் இரண்டு வீட்டிலும் என்ன நடந்தது? என்று விசாரிக்கிறார்கள். ராஜி, கதிரை குமார் அடித்த விஷயத்தை எல்லாம் சொல்கிறார். இதனால் கோபத்தில் ராஜி, கோமதி இருவருமே சண்டைக்கு போகிறார்கள். மாரி, வடிவு பதில் கொடுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அங்கு வந்த கதிர்,ராஜியை சமாதானம் செய்து உள்ளே சென்று விடுகிறார். அதற்குப் பின் மீனா, ராஜி தன்னிடம் ஒழுங்காக பேசாததை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து கதிர்- ராஜி இருவருமே வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது மீனா, ராஜியிடம் மன்னிப்பு கேட்கிறார்.பதிலுக்கு ராஜியும் மன்னிப்பு கேட்டு இருவரும் சேர்ந்து விடுகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full