இந்த சீரியல் இப்போதுதான் சுவாரஸ்யமா போகுது - ரசிகர்களை கொஞ்சம் கொஞ்சமாக கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By Arun · 12/5/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் இருப்பது “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலின் முதல் பாகம் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. கடந்த ஆண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் நிறைவடைந்தது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. இரண்டாவது சீசனில் அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும், முதல் சீசனில் அண்ணனாக நடித்த ஸ்டாலின் தற்போது அப்பாவாக நடிக்கிறார். ஸ்டாலினுக்கு மனைவியாக நிரோஷா நடிக்கிறார். மேலும், இவர்களுடைய மகன்களாக விஜே கதிர், வசந்த், ஆகாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த சீரியலில் புது முகங்கள் சில பேர் இருந்தாலும், பழைய முகங்களும் இருக்கிறார்கள். சீரியலில் தந்தை பாண்டியனுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். பாண்டியன் பிள்ளைகளை தன்னுடைய கட்டுக்கோப்பில் வளர்த்து வருகிறார். இதனால் இவர் பெருமிதமாக இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இப்படி இருக்கும் நிலையில் பாண்டியனின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மகன்களுக்கு எதிர்பாராத விதமாக திருமணம் நடந்து விடுகிறது. இதனால் பாண்டியன் ரொம்பவே மனம் உடைந்து விடுகிறார். அதோடு மூத்த மகன் சரவணனுக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் வீட்டில் எல்லோருமே அவருக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அதோடு முன்பை விட கடந்த சில வாரங்களாகவே சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. ஒரு வழியாக சரவணனுக்கு சம்மந்தம் பேசி முடிக்கப்படுகிறது.

https://www.youtube.com/watch?v=OeFdGmEpm40

சீரியல் கதை:

தங்க மயிலை தான் சரவணன் திருமணம் செய்ய இருக்கிறார். தாங்கள் வசதியான குடும்பம் என்று பொய் சொல்லி தங்கமயில் வீட்டில் திருமணம் செய்ய இருக்கிறார்கள் . திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த திருமணத்தில் தங்க மயிலுக்கு சரவணனை முழுமையாக பிடிக்கவில்லை என்றாலும் தன் அம்மா, அப்பா கட்டாயத்திற்கு சம்மதிக்கிறார். பிரம்மாண்டமாக வித்தியாசமாக திருமணத்தை நடத்த இருக்கிறார்கள்.

தங்கமயில்-சரவணன் திருமணம்:

கடந்த வாரம் எபிசோட்டில் திருமணத்திற்கான வேலைகளில் பாண்டியன் குடும்பம் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது. அந்த வகையில் எல்லோருமே திருமணத்திற்கான துணிகளை எடுக்க கடைக்கு சென்று இருக்கிறார்கள். அப்போது எதிர்பாராத விதமாக கல்யாண துணிக்கு மட்டும் மூன்று லட்சத்திற்கு மேல் தாண்டி விடுகிறது. இதை பார்த்து பாண்டியன் அதிர்ச்சி அடைந்து விடுகிறார். பின் மொத்த கல்யாண செலவையும் இணைத்து பாண்டியன் பயந்து கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம், தங்கமயில் உண்மையை எல்லாம் சொல்லிவிடலாம் என்று சொல்கிறார்.

சீரியல் ப்ரோமோ:

அதைக் கேட்டு அவருடைய அம்மா, உன்னுடைய கல்யாணம் நின்று விடும் அமைதியாக இரு என்று மிரட்டுகிறார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், கடனை திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் கல்யாணத்தை நடத்த விடமாட்டோம் என்று கடன்காரர்கள் தங்கமயிலின் அம்மா, அப்பாவிடம் சண்டை போடுகிறார்கள். அவர்கள் எவ்வளவோ சமாதானம் செய்தும் கடன் கொடுத்தவர்கள் அந்த இடத்தை விட்டு நகராமல் அங்கேயே தங்கி விடுகிறார்கள். அந்த சமயம் பாண்டியன் வீட்டில் இருந்து எல்லோரும் இறங்குகிறார்கள். இதை பார்த்து தங்கமயில் கல்யாணம் நிற்க போகிறது என்று உள்ளே அழுது கொண்டு புலம்புகிறார். இனி வரும் நாட்களில் தங்கமயில் வீட்டின் உண்மை நிலவரம் மாப்பிள்ளை வீட்டிற்கு தெரிய வருமா? சரவணன்- தங்கமயில் திருமணம் நடக்குமா? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full