காந்திமதியின் ஆசைப்படி இரண்டு குடும்பங்களும் ஒன்று சேருமா? விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 19/10/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் செந்தில், தன் அப்பா கொடுத்த பணத்தை பற்றி கேட்டார். மீனா, தர முடியாது. எதுவாக இருந்தாலும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்றெல்லாம் திட்டிக் கொண்டிருந்தார். பின் வழக்கம் போல் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி சண்டை நடந்தது. இன்னொரு பக்கம் கோமதி, தன்னுடைய அம்மாவின் 75 வது பிறந்த நாளை பற்றி சொன்னார். பாண்டியன், பிறந்தநாளுக்கு செல்வதற்கு ஒத்துக்கொண்டார்.

இன்னொரு பக்கம் பழனிக்கு கால் வலி என்பதால் சரவணன் மருந்து தேய்த்து காலை அமுத்தி விட்டுக் கொண்டிருந்தார். அப்போது வந்த சுகன்யா, சரவணனை திட்டிவிட்டு பழனியை அழைத்துக்கொண்டு சென்றார். பின் தங்கமயில், விஉன் மாமாவிற்கு சேவகம் செய்து கொண்டு இருப்பீர்களா? நான் இந்த வீட்டில் ஒரு மனுசியாக இருப்பதே தெரியவில்லையா? எதற்காக என்னை கல்யாணம் செய்தீர்கள்? என்றெல்லாம் கேட்டார். இதனால் கோபப்பட்ட சரவணன், அதுதான் எனக்கும் தெரியவில்லை. தயவு செய்து கிளம்பி உன் அம்மா வீட்டிற்கு போ என்றெல்லாம் திட்டினார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

கதிர்-ராஜி இருவருமே அப்பத்தாவின் பிறந்தநாளை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கதிர், தாத்தா- அப்பத்தா பற்றி எல்லாம் ராஜியிடம் கேட்டு தெரிந்து கொண்டார். மறுநாள் காலையில் அப்பத்தாவின் பிறந்தநாளுக்காக பாண்டியன் எல்லோரிடமும் பேசி இருந்தார். அப்போ பாண்டியன், அப்பத்தாவின் பிறந்தநாளுக்கு அன்னதானம் போடலாம். எந்த பிரச்சனையும் வரக்கூடாது. யாருடைய மனசும் கஷ்டப்படக்கூடாது என்றார். ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்துவிடலாம் என்றார். இதையெல்லாம் கேட்ட சுகன்யா, உடனே ஓடி வந்து சக்திவேலிடம் வத்தி வைத்தார்.

சீரியல் ட்ராக்:

இதை கேட்டு சக்திவேல் பயங்கரமாக கோபப்பட்டு பாண்டியனிடம் சண்டை போட தயாரானார். வீட்டில் உள்ள எல்லோருமே தடுத்தும் கேட்கவில்லை. பின் முத்துவேல் தடுத்து நிறுத்தி, கோயிலுக்கு பாண்டியன் வீட்டிலுமே வரட்டும். அன்னதானம் போடட்டும். எந்த பிரச்சனையும் செய்ய வேண்டாம். இது நம் அம்மாவினுடைய ஆசை. அது நிறைவேறட்டும் என்று சொல்கிறார். சக்திவேல் கோபப்பட்டு வீட்டில் உள்ள எல்லோரிடமும் சண்டை வாங்கி இருந்தார். முத்துவேல், அம்மாவின் பிறந்த நாளில் எந்த பிரச்சினையும் நடக்கக்கூடாது. அமைதியாக இரு என்று சொல்வதால் அங்கிருந்து சக்திவேல் கிளம்பி விட்டார்.

https://www.youtube.com/watch?v=mWUnfnpaKo8

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் காந்திமதியின் பிறந்தநாளுக்கு கோயிலில் பேனர், பட்டாசு, ஆட்டம் பாட்டம் என்று பாண்டியன் குடும்பத்தினர் செய்திருக்கிறார்கள். அதை பார்த்து அப்பத்தா ரொம்ப சந்தோஷப்படுகிறார். பின் காந்திமதி, கோமதி குடும்பத்தினர் சந்தோஷமாக இருக்கிறார்கள். எதுவும் சொல்லாதீர்கள் என்று தன் மகனிடம் கெஞ்சி கேட்கிறார். பின் சக்திவேல் பெருமைக்காகவே தன் அம்மாவிற்கு செயின் போடுகிறார். கோமதியும் தன் அம்மாவிற்கு வளையல் போட்டு பரிசெல்லாம் கொடுக்கிறார். பாண்டியன் குடும்பமாக சேர்ந்து போட்டோ எல்லாம் எடுத்துக் கொள்கிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full