காந்திமதியின் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம், பழனி சொன்ன வார்த்தை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோமதி, தன் அம்மாவின் பிறந்தநாளுக்கு பரிசு கொடுக்க புடவை, வளையல் என்று வாங்கி வைத்து இருந்தார். அதற்கு பின் வீட்டில் எல்லோருமே தயாராகி இருந்தார்கள். கோமதி, கோவிலில் பிறந்த நாளில் எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்று பயந்து கொண்டிருந்தார். பாண்டியன், கோயிலுக்கு சென்று பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வந்துவிடலாம் என்றார். அதனால் வீட்டில் உள்ள எல்லோருமே சரி என்றார்கள்.
நேற்று எபிசோட்டில் முத்துவேல் குடும்பத்தில் எல்லோருமே கோயிலுக்கு வந்து விட்டார்கள். அப்போது காந்திமதி, தன் மகன்கள் வைத்திருக்கும் பேனரை பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் பாண்டியன் குடும்பத்தினர் வைத்திருக்கும் பேனரை பார்த்து சக்திவேல் பயங்கரமாக கோபப்பட்டு கத்துகிறார். குமாரிடம் சொல்லி அந்த பேனரை கிழித்து போட சொன்னார். உடனே காந்திமதி, கோயிலில் எந்த பிரச்சனையும் செய்து சண்டை போட மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்து கொடுத்து உள்ளீர்கள். தயவு செய்து அமைதியாக இருங்கள் இல்லை என்றால் நான் இப்படியே வீட்டிற்கு போகிறேன் என்றார்.
சீரியல் ட்ராக்:
முத்துவேல், சக்திவேலை திட்டி அமைதியாக்குகிறார். அதற்குப்பின் பிறந்தநாள் விழாவிற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. அப்போது காந்திமதி, கோமதி வந்துவிடட்டும் என்றார். இதை கேட்டு சக்திவேல் திட்டிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் கோயிலுக்கு வெளியில் பாண்டியன் குடும்பத்தில் எல்லோருமே வந்து விட்டார்கள். அப்போது பாண்டியன், எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது. யார் என்ன சொன்னாலும் சண்டை போடக்கூடாது என்று தன் மகன்களிடம் அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். இன்றைய எபிசோட் இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன் குடும்பத்தில் எல்லோருமே கோவிலுக்குள் செல்கிறார்கள். அவர்களை பார்த்து சக்திவேல் முறைத்துக் கொண்டிருக்கிறார். கோமதி தன்னுடைய அம்மாவிடம் பேச வரும்போது சக்திவேல், காந்திமதியை அழைத்துக் கொண்டு செல்கிறார். பின் எல்லோருமே சேர்ந்து கோயிலில் சாமி கும்பிடுகிறார்கள். அப்போது பழனிக்கு சாமி வந்துவிடுகிறது.
பழனி, எல்லோருமே குடும்பமாக ஒன்றாக சேர்ந்து என்னை பார்க்க வந்தது சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு எந்த குறையும் இல்லை. இதே மாதிரி வருடம் வருடம் என்னை பார்க்க குடும்பமாக சேர்ந்து வாருங்கள் என்று சொல்கிறார். இதை கேட்டு சக்திவேலுக்கு பயங்கர கோபம் வருகிறது. பழனிவேலை கண்ட மணிக்கு திட்டுகிறார். உடனே எல்லோருமே சக்திவேலை தடுத்து நிறுத்துகிறார்கள். அதற்குப்பின் பிறந்தநாள் விழாவில் சக்திவேல் தன்னுடைய அம்மாவிற்கு 12 பவுனில் தங்கச் செயின் போடுவதாக பெருமையாக பேசுகிறார். இது எல்லாம் ஓரமாக நின்று பாண்டியன் குடும்பம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.