கோமதி வீட்டுக்கு சாப்பிட போக சொல்லும் காந்திமதி, முத்துவேல் சொன்ன வார்த்தை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சக்திவேல், ராஜு வீட்டிற்கு வந்ததை பற்றி சொல்லி புலம்பி கொண்டிருந்தார். அவர்கள் கஷ்டத்தில் இருக்கும்போது உதவியது உண்மைதான். ஆனால், அதற்காக அவர்கள் செய்த துரோகத்தை மறக்க முடியாது. எப்போதுமே ராஜி மீது கோபமாக இருக்கும் படி என் அண்ணனை வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஏதாவது செய்யணும் என்று மீண்டும் சதி திட்டம் போட்டார். பின் ராஜி, தன்னுடைய அம்மா வீட்டில் நடந்தது எல்லாம் கோமதி, மீனாவிடம் சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டார். தன் அண்ணன்களை வீட்டிற்கு வரவைக்க கோமதி, ராஜி நினைத்தார்கள்.
தங்கமயில், பாண்டியன் கடைக்கு வந்து மன்னிப்பு கேட்டார். கோபத்தில் சரவணன், தங்க மயிலை திட்டி வெளியே போக சொன்னார். ஆனால், தங்கமயில் கேட்கவே இல்லை. அங்கேயே கடைக்கு முன்பே நின்று அழுது கொண்டிருந்தார். அப்போது வந்த பாண்டியன், எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக் கொள்ளலாம். நீ கிளம்புமா என்று சொல்லி ஆட்டோவை வரவைத்து தங்கமயிலை அங்கிருந்து அனுப்பி வைத்தார். இன்னொரு பக்கம் ராஜி, கோமதியை கட்டாயப்படுத்தி தன்னுடைய அம்மா வீட்டிற்கு அழைத்து வந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
வீட்டில் எல்லோருமே உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள். வடிவு, மாரி இருவரும் கோமதியை சந்தோஷமாக வரவேற்றார்கள். ஆனால், முத்துவேல்- சக்திவேல் மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள். பின் கோமதி, வீட்டிற்கு சாப்பிட வர சொல்லி தன்னுடைய அண்ணன்களை அழைத்தார். கோபத்தில் சக்திவேல், கஷ்டத்தில் இருந்தவர்களுக்கு உதவி செய்தோம். அவ்வளவுதான் மத்தபடி எந்த சொந்தமும் கொண்டாட தேவையில்லை. ஒழுங்கு மரியாதையோ வீட்டை விட்டு வெளியே போ என்று அவமானப்படுத்தினார். முத்துவேல், சக்திவேல் சொன்னது தான் சரி என்று கோமதியை வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். அவமானத்தில் கோமதி அழுது கொண்டே மன்னிப்பு கேட்டு நின்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோமதி, நான் இங்கு வந்தது தவறு தான். என்னை மன்னித்து விடுங்கள் என்று அழுது கொண்டே வெளியே வருகிறார்.. இதை பார்த்த பாண்டியன் கோபப்பட்டு என்ன நடந்தது என்று விசாரிக்கிறார். அப்போது கோமதி, தன் அண்ணன்கள் சொன்னதை சொல்லாமல் நான் சாப்பிட அவர்களை வீட்டிற்கு அழைத்தேன் என்று மட்டும் சொல்லி விடுகிறார். இதனால் பாண்டியன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் காந்திமதி, கோமதி வீட்டிற்கு சாப்பிட போக சொல்லி தன் மகன்களிடம் கெஞ்சுகிறார்.
சீரியல் ட்ராக்:
சக்திவேல் வழக்கம் போல பாண்டியன் குடும்பத்தை மோசமாக பேசிக் கொண்டிருக்கிறார். முத்துவேல் போக முடியாது என்று மறுக்கிறார். இதனால் காந்திமதி எமோஷனலாக பேசி அவர்கள் இருவரையும் கோமதி வீட்டிற்கு சாப்பிட போக ஒத்துக் கொள்ள வைக்கிறார். அதற்குப்பின் இந்த தகவலை பழனி, கோமதியிடம் சொல்கிறார். இதை கேட்டு கோமதி தலைக்கால் புரியாமல் சந்தோஷத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.