குமாரின் வாழ்கைக்காக காந்திமதி எடுத்த முடிவு, சந்தோஷத்தில் தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில் வேலையெல்லாம் முடித்துவிட்டு தன்னுடைய வீட்டுக்கு வந்தார். அப்போது வேலை பார்க்கும் விஷயத்தைப் பற்றி பாக்கியத்திடம் சொன்னார். ஆனால், பாக்கியம் வழக்கம் போல தங்க மயில் மனதை காயப்படுத்தும் மாதிரி பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டிற்கு வந்தார். கோமதி, பாண்டியனை கவனிக்காமல் தன்னுடைய பிள்ளைகளுக்கு மட்டும் பார்த்து பார்த்து கவனித்தார். இதை பார்த்து பாண்டியனுக்கு கோபம் வந்தது.
அரசி வெளியே இருப்பதை பார்த்து குமார் எமோஷனல் ஆனார். அப்போது அப்பத்தா, தேவையில்லாத யோசனை வேண்டாம் என்றார். அப்போது குமார், நான் அரசியை கடத்தி சென்றது தவறுதான். இருந்தாலும் அரசியை தான் நான் காதலிக்கிறேன். ஆனால், அந்த கல்யாணம் நடக்காது. என் மனதில் அரசி மட்டும்தான் இருக்கிறார் என்று சொல்லி விட்டார். அப்பத்தாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இன்னொரு பக்கம் கோமதி தன்னுடைய பிள்ளைகளுக்கு மட்டும் எல்லா வேலையும் செய்து கொண்டிருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பாண்டியன் வந்து நின்றுமே கோமதி டீ கொடுக்கவில்லை, சாப்பாடு கொடுக்கவில்லை. அதனால் பாண்டியன் பயங்கரமாக கோபப்பட்டார். ராஜி, அரசி வேலை செய்ய வந்தாலுமே கோமதி திட்டி அவர்களை தடுத்து விட்டார். பின் சரவணன் தன் அப்பாவிற்காக டீ போட்டு கொடுக்கிறார். ஆனால், அதை குடிக்க முடியவில்லை. பாண்டியன் கிளம்பி விட்டார். இதையெல்லாம் பார்த்து கோமதிக்கு கஷ்டமாக இருந்தாலும் தன் கணவர் தன்னிடம் பேச வேண்டும் என்று செய்து கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தங்கமயில் சாப்பிட போகும் போது பாக்கியம் திட்டுகிறார். இதனால் தங்கமயில் சாப்பிடாமலே வேலைக்கு சென்று விடுகிறார். பின் தங்கமயில் வேலை செய்யும் இடத்தில் சமைப்பதற்கு ஆள் வரவில்லை என்று மீனாவின் தோழி புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது தங்கமயில், நானே சமைக்கிறேன் என்று சொல்கிறார். இதனால் மீனாவின் தோழி, நான் மொத்தமாக உனக்கு 17 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருகிறேன். எல்லா வேலையும் உன்னால் செய்ய முடியுமா? என்று கேட்கிறார். தங்கமயில், சரி என்று சொல்கிறார். பின் இந்த விஷயத்தை மீனாவிடம் சொல்லி தங்கமயில் ரொம்பவே சந்தோஷப்படுகிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் மீனா- கோமதி இருவரும் பாண்டியனை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து ராஜி-கதிர் கிளம்புகிறார்கள். இவர்கள் இருவரும் சந்தோஷமாக இருப்பதை பார்த்து காந்திமதி சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் காந்திமதி, கோயிலுக்கு போகிறார். அங்கு பெண் வீட்டாரை காந்திமதி வர வைக்கிறார். அப்போது காந்திமதி, குமார்- அரசி விஷயத்தை பற்றி சொல்கிறார். அதுமட்டுமில்லாமல் குமார் இன்னும் அரசியை காதலிப்பதாகவும் அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கப் போவதாகவும் சொல்கிறார். இதைக் கேட்டு பெண் வீட்டார் ஷாக் ஆகிறார்கள். பின் காந்திமதி, இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லி கேட்கிறார். அவர்கள் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.