தன் அண்ணன்களிடம் சண்டைக்கு போன கோமதி, மீனா கொடுத்த ஐடியா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ராஜி-கதிர் இருவரும் சென்னைக்கு கிளம்பினார்கள். போகும் வழியில் ராஜிக்கு தேவையான எல்லா தேவைகளையும் கதிர் செய்து தந்தார். பின் இருவரும் சென்னைக்கு சென்று விட்டார்கள். அங்கு ஒரு ஹோட்டலில் இருவரும் தங்கினார்கள். கதிர், ராஜியின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்டு ரசித்துக்கொண்டிருந்தார். அப்போது ராஜி கையில் அடிபட்டு விடுவதால் கதிர் ரொம்பவே துடித்து போனார். பின் இருவரும் ஒருவரை ஒருவர் காதலாக பார்த்துக் கொண்டார்கள்.
ராஜி-கதிர் இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு ரசித்தார்கள். பின் இருவரும் இன்ஸ்டியூஷனுக்கு செல்வதற்கு தயாரானார்கள். அதற்குப்பின் இன்ஸ்டியூட்டிக்கு கிளம்பி ராஜி கிளாஸ் அட்டென்ட் பண்ணுகிறார். இன்னொரு பக்கம் கோமதி, தன் கணவர் தன்னை கவனிக்க வேண்டும் என்பதற்காக உடம்பு சரியில்லாதது போல் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால், பாண்டியன் அதை கண்டுகொள்ளவே இல்லை. பின் அரசி, இதெல்லாம் வேலைக்காகாது வேற ஏதாவது யோசியுங்கள் என்று தன் அம்மாவை திட்டினார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இன்னொரு பக்கம் கிளாஸ் முடிந்துவிட்டு ராஜி- கதிர் இருவரும் கிளம்பி வந்து கொண்டிருந்தார்கள். அப்போது இருவருமே ரொம்ப அன்பாகவும் பாசமாகவும் வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டு வந்தார்கள்.
புதிதான காதல் ஜோடிகள் போல் நடந்து கொண்டார்கள். இன்னொரு பக்கம் மீனா வேலைக்கு தயாராகி கிளம்பினார். அப்போது செந்தில், இன்றும் எனக்கு சமைக்கவில்லையா என்று வம்பு இழுத்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கதிர், ராஜியின் வகுப்பு முடியும் வரை வெளியே காத்துக் கொண்டிருக்கிறார். பின் ராஜி வந்தவுடன் இருவரும் கிளம்பி சாப்பிட செல்கிறார்கள். அப்போது ராஜிக்கு பிடித்த சாப்பாடு எல்லாம் கதிர் வாங்கித் தந்து இருவரும் சந்தோஷமாக பேசிக்கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் பாண்டியனிடம் மன்னிப்பு கேட்பதற்காக கோமதி கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார். பின் இதைப் பற்றி வீட்டுக்கு வந்த மீனாவிடம் அரசி சொல்கிறார். மீனா, நல்ல ஒரு காதல் கவிதை எழுதிக் கொடுங்கள். மாமாவின் மனது மாறிவிடும் என்றெல்லாம் சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
கோமதியும் சூப்பராக ஒரு லெட்டரை எழுதி முடித்து விடுகிறார். அதை தன் கணவரிடம் கொடுப்பதற்காக கிளம்புகிறார். அப்போது வெளியில் தன் அண்ணன்களை பார்த்த கோமதி, உங்களுடன் நான் ஒன்றாக சேரனும் நினைத்தது என் தவறுதான். உங்களால் தான் என் கணவர் என்னிடம் பேசவில்லை. உங்கள் உறவே தேவையில்லை என்று சண்டை போட்டு விட்டு செல்கிறார். முத்துவேல் பெரிதாக எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விடுகிறார். அதற்குப்பின் கோமதி, பாண்டியனை சந்திக்க கடைக்கு செல்கிறார்.