பாண்டியனை வெறுப்பேற்ற கோமதி செய்யும் வேலை, காதலை சொன்ன குமார் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மீனாவின் தோழி, என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை. அவர்களால் சுத்தமாக நடக்க முடியாது. அவர்களுக்கு எல்லா வேலையையும் நீங்கள் தான் செய்யணும் என்றார். இதைக் கேட்டு மீனாவிற்கு கஷ்டமாக இருக்கிறது. மீனா, இந்த வேலை வேண்டாம் என்று சொன்னாலும் தங்கமயில் கேட்கவில்லை. முழு மனதோடு அந்த வேலையை செய்ய ஒத்துக்கொண்டார். இன்னொரு பக்கம் கோமதி கையில் சூடான காபி கொட்டி விட்டது. வலி தாங்க முடியாமல் கோமதி கத்தினார். ஆனால் பாண்டியன் அதை நடிப்பு என்று திட்டி விட்டு சென்றார். இதனால் கோமதி ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார்.
அரசி, மீனாவிற்கு போன் செய்து கோமதிக்கு நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னார். மீனா, கோமதியை பார்க்க வீட்டிற்கு வந்து விட்டார். அப்போது மீனா, நீங்கள் இனிமேல் மாமாவிற்காக எதுவும் செய்யாதீர்கள். அவர் உங்கள் பின்னாடி வர மாதிரி பண்ணுங்கள். தயவு செய்து எதையும் நினைத்து வருத்தப்படாதீர்கள் என்று ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் குமாரின் வீட்டிற்கு பெண் வீட்டார் வந்திருந்தார்கள். அவர்களுக்கு மாப்பிள்ளை பிடித்து விட்டதால் திருமணத்தை சீக்கிரமாக நடத்தலாம் என்றார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இரண்டு வீடுமே தட்டை மாத்திக்கொண்டு கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். ஆனால், இந்த கல்யாணத்தில் குமாருக்கு விருப்பமே இல்லை. இன்னொரு பக்கம் தங்கமயில் வேலையெல்லாம் முடித்துவிட்டு தன்னுடைய வீட்டுக்கு வந்தார். அப்போது வேலை பார்க்கும் விஷயத்தைப் பற்றி பாக்கியத்திடம் சொன்னார். ஆனால், பாக்கியம் வழக்கம் போல தங்க மயில் மனதை காயப்படுத்தும் மாதிரி பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டிற்கு வந்தார். கோமதி, பாண்டியனை கவனிக்காமல் தன்னுடைய பிள்ளைகளுக்கு மட்டும் பார்த்து பார்த்து கவனித்தார். இதை பார்த்து பாண்டியனுக்கு கோபம் வந்தது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அரசி வெளியே இருப்பதை பார்த்து குமார் எமோஷனல் ஆகிறார். அப்போது அப்பத்தா, தேவையில்லாத யோசனை வேண்டாம் என்கிறார். அப்போது குமார், நான் அரசியை கடத்தி சென்றது தவறுதான். இருந்தாலும் அரசியை தான் நான் காதலிக்கிறேன். ஆனால், அந்த கல்யாணம் நடக்காது. என் மனதில் அரசி மட்டும்தான் இருக்கிறார் என்று சொல்லி விடுகிறார். அப்பத்தாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் கோமதி தன்னுடைய பிள்ளைகளுக்கு மட்டும் எல்லா வேலையும் செய்து கொண்டிருக்கிறார். பாண்டியன் வந்து நின்றுமே கோமதி டீ கொடுக்கவில்லை, சாப்பாடு கொடுக்கவில்லை. அதனால் பாண்டியன் பயங்கரமாக கோபப்படுகிறார். ராஜி, அரசி வேலை செய்ய வந்தாலுமே கோமதி திட்டி அவர்களை தடுத்து விடுகிறார். பின் சரவணன் தன் அப்பாவிற்காக டீ போட்டு கொடுக்கிறார். ஆனால், அதை வாயில் கூட குடிக்க முடியவில்லை. பாண்டியன் கிளம்பி விடுகிறார். இதையெல்லாம் பார்த்து கோமதிக்கு கஷ்டமாக இருந்தாலும் தன் கணவர் தன்னிடம் பேச வேண்டும் என்று செய்து கொண்டிருக்கிறார்.