மெகா சங்கமம் : சந்தோமாக அவுட்டிங் செல்லும் கோமதி- மலர் குடும்பம், கலகலப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 10/5/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சுரேஷ், மீனா,ராஜி எல்லோருமே ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்கள். பின் எல்லோருமே கிளம்பி தங்கராஜ் வீட்டிற்கு போனார்கள். தங்கராஜ் வழக்கம் போல தன்னைப் பற்றி ரொம்பவே பந்தாவாக பெருமையாக பேசிக் கொண்டிருந்தார். கோமதிக்கு கடுப்பானாலும் வெளியில் காண்பித்துக் கொள்ளாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் முத்துவேல் வியாபாரம் விஷயமாக வெளியூர் கிளம்புவதாக சொன்னார். உடனே சக்திவேல், என்ன வியாபாரம்? எங்களிடம் என்ன மறைக்கிறீர்கள்? நிறைய பணம் பரிமாற்றம் நடக்கிறது.

உண்மையை சொல்லுங்கள். அந்த கதிருடன் உங்களுக்கு என்ன பழக்கம்? என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டார். யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. முத்துவேல், உண்மையை சொல்ல முடியாமல் நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. நான் வந்து எல்லா பற்றியும் பேசுகிறேன் என்றார். இருந்தாலும் சக்திவேல் தன் அண்ணன் மீது அதிகமாக கோபப்பட்டார். முத்துவேல் கிளம்பி கதிர் சொன்ன இடத்திற்கு சென்று விட்டார். கதிர், முத்துவேல் இருவரும் காரில் ஏறி சென்றார்கள். இதை சக்திவேல் குமார் ஒளிந்து நின்று பார்த்தார்கள். இவர்கள் பார்த்ததை கதிர் பார்த்து விட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

மலரின் மாமியார், மாமனார் இருவருமே வெளியே செல்வதற்கு வரமாட்டேன் என்றார்கள். ஒரு வழியாக கோமதி, மீனா எல்லோருமே பேசி அவர்களை வெளியே செல்ல ஒத்துக் கொள்ள வைத்தார்கள். அதற்குப்பின் மீனா, மதி,மலர், ராஜி ஆகிய நான்கு பேரும் ஜாலியாக தங்களுடைய காதல் கதைகளை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த சுரேஷ், சாப்பாடு சாப்பாடு செய்து தரச் சொல்லி மலரிடம் கேட்டார். உடனே மீனா, மதியை சமைத்து தர சொன்னார். மதி எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட்டார்.

சீரியல் ட்ராக்:

பின் சுரேஷுக்காக மதி சமைத்துக் கொடுத்தார். சுரேஷும் ஆச்சரியத்துடனே சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வந்த மலரின் மாமியார், மதி வேலை செய்வதை வியந்து போய் பாராட்டினார். இருந்தாலும் மதி அதை கண்டுகொள்ளாமல் அங்கிருந்து சென்று விட்டார். இன்னொரு பக்கம் ஆபரேஷன் நினைத்து முத்துவேல் ரொம்பவே பயந்து கொண்டிருந்தார். கதிர் அவருக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார். அதற்குப்பின் இருவரும் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்பினார்கள்.

https://www.youtube.com/watch?v=odm2B0kathE

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அழகுமதி குடும்பத்தினரும் கோமதி குடும்பத்தினரும் வெளியே சுற்றுலா செல்கிறார்கள். அங்கு செந்திலுமே வந்துவிடுகிறார். எல்லோருமே ஜோடி ஜோடியாக சந்தோஷமாக இருக்கிறார்கள். எப்படியாவது மதி, சுரேஷை சேர்த்து வைக்க வேண்டும் என்று கோமதி- மீனா எல்லாம் மீனா திட்டம் போடுகிறார்கள். மதி- சுரேஷ் இருவருமே சேர்ந்து போட்டோ எல்லாம் எடுத்துக் கொள்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full