சந்தோஷத்தில் கோமதி, சண்டையை கிளப்ப நினைக்கும் சுகன்யா, சக்திவேல் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 24/1/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோமதி, நான் இங்கு வந்தது தவறு தான். என்னை மன்னித்து விடுங்கள் என்று அழுது கொண்டே வெளியே வந்தார். இதை பார்த்த பாண்டியன் கோபப்பட்டு என்ன நடந்தது என்று விசாரித்தார். அப்போது கோமதி, தன் அண்ணன்கள் சொன்னதை சொல்லாமல் நான் சாப்பிட அவர்களை வீட்டிற்கு அழைத்தேன் என்று மட்டும் சொல்லி விட்டார். இதனால் பாண்டியன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் காந்திமதி, கோமதி வீட்டிற்கு சாப்பிட போக சொல்லி தன் மகன்களிடம் கெஞ்சி இருந்தார்.

சக்திவேல் வழக்கம் போல பாண்டியன் குடும்பத்தை மோசமாக பேசிக் கொண்டிருந்தார். முத்துவேல் போக முடியாது என்று மறுத்தார். இதனால் காந்திமதி எமோஷனலாக பேசி அவர்கள் இருவரையும் கோமதி வீட்டிற்கு சாப்பிட போக ஒத்துக் கொள்ள வைத்தார். அதற்குப்பின் இந்த தகவலை பழனி, கோமதியிடம் சொன்னார். இதை கேட்டு கோமதி தலைக்கால் புரியாமல் சந்தோஷத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

கோமதி தடபுடலாக கறிவிருந்தை சமைத்துக் கொண்டிருந்தார். வீட்டில் எல்லோருமே கோமதிக்கு உதவி செய்தார்கள். இன்னொரு பக்கம் சக்திவேல், மீண்டும் எல்லோரும் ஒன்றாக சேரப் போகிறீர்களா? என்று நக்கல் அடித்தார். முத்துவேல், அம்மாவின் ஆசைக்காகத்தான் நான் ஒத்துக்கொண்டேன். போய் சாப்பிட்டு வந்துவிடலாம், மற்றபடி வேறு ஒன்றும் இல்லை என்றார். சக்திவேல், யாரும் சேர்ந்து விடக்கூடாது. ஏதாவது செய்து சண்டையை பெருசாக்கணும் என்று யோசித்தார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் காந்திமதி வீட்டில் எல்லோருமே பாண்டியன் வீட்டிற்கு வந்தார்கள். சந்தோஷத்தில் கோமதி துள்ளி குதிக்கிறார். பின் கோமதி தன் அண்ணன்களை அன்பாக உபசரித்து உட்கார வைத்து பேசி இருந்தார். வழக்கம்போல சக்திவேல் நக்கல் அடித்துக் கொண்டிருந்தார். பின் கோமதி, ஏன் வீட்டிற்கு வரவில்லை என்று கேட்டார். அதற்கு சுகன்யா, என் கணவரை வீட்டு பக்கமே வரக்கூடாது என்று துரத்திவிட்டால், நான் எப்படி வருவேன் என்று நாரதர் வேலையை செய்ய ஆரம்பித்தார். இதனால் கோமதியின் முகம் மாறுகிறது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில் கோமதி, சுகன்யா பேசியதற்கு கோபப்படாமல் அவரை அழைத்துக் கொண்டு உள்ளே போகிறார். சக்திவேல் ஏதாவது பிரச்சனையை செய்ய வேண்டும் என்று நக்கலாகவே பாண்டியன் குடும்பத்திடம் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், முத்துவேல் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே அமர்ந்து சாப்பிடுகிறார்கள். ஆனால், இது சக்திவேலுக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை.

behindtalkies AMP · Quick view
View full