நடுரோட்டிலே பழனியை அவமானப்படுத்தும் கோமதி, சமையலில் மீனா செய்யும் அட்ராசிட்டி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 2/12/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மீனாவை பார்க்க அவருடைய அப்பா, அம்மா இருவரும் வந்திருந்தார்கள். அப்போது மீனா, வீட்டில் சமைக்காத இருப்பதை தெரிந்த அவருடைய அம்மா, எப்படி செய்யனும், என்னென்ன பண்ணனும் எல்லாம் சொன்னார். ஆனால், மீனா அதை பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை. அதற்குப்பின் கோமதி, சரவணன்-தங்கமயில் சண்டை போட்டதை பற்றி பாண்டியனிடம் சொன்னார். பாண்டியன், அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்பதை கண்டுபிடிக்கணும். சீக்கிரமாகவே இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுகிறேன் என்றார்.

மீனா, கஷ்டப்பட்டு தனக்கு தெரிந்ததை வைத்து சமைத்தார். செந்திலுமே அவருக்கு உதவி செய்தார். ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு சமையல் வரவில்லை. இருந்தாலும் இன்னொரு பக்கம் தன் கடையில் வந்த வரவு செலவு கணக்குகளை எல்லாம் சுகன்யா, குமாருடன் சேர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். இதை பார்த்து சக்திவேலுக்கு சந்தோசமாக இருக்கிறது. பின் சுகன்யா, நாங்கள் இது பாண்டியனுடைய இன்னொரு பிரான்ச் என்று சொல்லி இருக்கிறோம். அப்போதுதான் கடையின் வியாபாரம் இன்னும் அதிகமாகும். எப்படியும் பாண்டியனுக்கு இன்று வியாபாரம் குறைந்திருக்கும் .

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

எங்களுக்கு நல்ல லாபம் கிடைத்திருக்கிறது என்றார். இன்னொரு பக்கம் ராஜி, கதிர் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ராஜி, தன் அப்பாவின் மீது இருந்த கோபத்தில் பைக்கை கீழே தள்ளி விட்டு உள்ளே சென்று விட்டார். ஆனால் உண்மை தெரியாமல் முத்துவேல், கதிரை திட்டிவிட்டு அங்கு இருந்து சென்றார். அதற்குப்பின் வெளியே வந்த சரவணன் இடம் கதிர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கதிர், உங்களுக்கு என்னதான் பிரச்சனை? எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் என்றார். சரவணன், நான் நிம்மதியாகவே இல்லை, என்னால் எதுவும் வெளியில் சொல்ல முடியவில்லை என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா, மும்முரமாக சமைத்துக் கொண்டிருக்கிறார். வேறு வழியில்லாமல் செந்தில் உதவி செய்து கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் கதிர்- ராஜி இருவரும் கிரவுண்டுக்கு சென்று பிராக்டிஸ் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கதிர், சரவணன் சோகமாக இருக்கும் விஷயத்தை பற்றி சொல்கிறார். உடனே ராஜி, தங்கமயில் நகை மறைத்த விஷயத்தை சொல்ல வருகிறார். இருந்தாலும் அமைதியாகிறார். இன்னொரு பக்கம் அரசி, செடிக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருப்பதை பார்த்த குமார் வேண்டுமென்றே வம்பு இழுக்கிறார்.

சீரியல் ட்ராக்:

இதையெல்லாம் பார்த்த அப்பத்தா, குமாரை திட்டி அறிவுரை சொல்கிறார். அதற்குப்பின் மீனாவிற்கு போன் செய்து கோமதி விசாரிக்கிறார். அதற்குப்பின் கோமதி, அரசி இருவரும் கோயிலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வழியாக வந்த பழனி, கோமதி இடம் பேசப்போகிறார். கோபத்தில் கோமதி, பழனியை மோசமாக திட்டுகிறார். இருந்தாலுமே பழனி, தன் தரப்பு நியாயத்தை சொல்லி புரிய வைக்க பார்க்கிறார். ஆனால், கோமதி கேட்கவே இல்லை திட்டிவிட்டு அங்கிருந்து செல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full