தங்கமயில் குடும்பத்தை அசிங்கப்படுத்திய கோமதி-குழலி, பாண்டியன் என்ன சொல்ல போகிறார்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 11/12/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ராஜி-கதிர் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கதிர், சரவணன்நிலைமையை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அதற்கு ராஜி, தங்கமயில் கொண்டு வந்திருக்கும் நகைகளும் போலி தான். ஆனால், வீட்டில் யாருக்குமே தெரியாது. இந்த விஷயம் எனக்கும் மீனா அக்காவிற்கும் தான் தெரியும் என்றார். இதை கேட்டு கதிருக்கு இன்னும் ஷாக் ஆனது. அதற்குப் பிறகு வீட்டில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அதற்குப் பின் கதிர்- ராஜி இருவருமே கிளம்பி செந்தில்- மீனா வீட்டிற்கு போனார்கள்.

சரவணன், தங்கமயிலை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். வழக்கம் போல செந்தில், தன்னுடைய தந்தையை தான் குறை சொல்லிக் கொண்டிருந்தார். பின் அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் எல்லோருமே குழம்பிப் போய் இருந்தார்கள். கோமதி, தங்க மயிலை திட்டிக்கொண்டு இருந்தார். அந்த சமயம் பார்த்து வெளியே வந்த தங்கமயில், பாண்டியன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க போனார். உடனே பாண்டியன் தன்னுடைய காலை நகர்த்திக் கொண்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

தங்கமயில் தான் செய்த தவறுக்காக எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு கதறி அழுதார். ஆனால், வீட்டில் யாருமே மன்னிப்பதாக இல்லை. கோமதி, தங்கமயில் செய்த துரோகத்திற்காக கொந்தளித்தார். சரவணன் எதுவும் பேசாமல் அமைதியாக தான் இருந்தார். பின் பாண்டியன், தங்கமயிலின் அப்பா, அம்மாவிற்கு ஃபோன் செய்து வீட்டிற்கு வர சொன்னார். என்ன நடக்குமோ என்ற பயத்தில் தங்கமயில் அழுது கொண்டு இருந்தார். அந்த சமயம் பார்த்து சரவணன் அக்கா வீட்டிற்கு வந்தார். அவர் தங்கமயிலையும் அவருடைய குடும்பத்தையும் திட்டிக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன் மகள் குழலி, தங்கமயில் அவருடைய குடும்பத்தையும் ரொம்ப மோசமாக வெளுத்து வாங்குகிறார். கோமதியும் திட்டிக் கொண்டிருக்கிறார். பாண்டியன் எவ்வளவு சொல்லியுமே இருவரும் கேட்கவில்லை. தங்க மயிலால் எதுவுமே பேச முடியவில்லை. ரொம்பவே உடைந்து போய் இருக்கிறார். அந்த சமயம் பார்த்து தங்கமயிலின் அப்பா, அம்மா இருவரும் வந்து விடுகிறார்கள். உடனே கோமதி, குழலி இருவருமே சேர்ந்து தங்கமயிலின் அப்பா அம்மாவை மோசமாக பேசுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அவர்களுக்கு உண்மை புரியாமல், என்ன நடந்தது என்று தங்கமயில் இடம் விசாரிக்கிறார்கள். அப்போது
கோமதி, உங்கள் மகள் 12 ஆம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறாள். அவள் என் மகனை விட இரண்டு வயது பெரியவள் எல்லா உண்மையும் தெரிந்து விட்டது. இவ்வளவு கேவலமான ஜென்மங்களா நீங்கள்? என்று சொல்கிறார். இதைக்கேட்டு தங்கமயிலின் அப்பா-அம்மா இருவருமே ஷாக்காகி இருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full