தங்கமயிலின் நிலைமையை கண்டு பதறிப்போன கோமதி, சரவணன் எடுக்கும் முடிவு என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
தங்கமயிலின் நிலைமையை கண்டு பதறிப்போன கோமதி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன், பாண்டியன் இருவரும் கடையில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்து அஞ்சலியின் அப்பா, பாண்டியனிடம் பாக்கியம் வீட்டிற்கு வந்ததையும், சரவணன்-அஞ்சலி இருவரும் சந்திப்பதை பற்றி ரொம்ப மோசமாக பேசிய விஷயத்தை எல்லாம் சொல்லி வருத்தப்பட்டார். இனிமேல் உங்கள் பையன் என் மகளை சந்திக்கக்கூடாது என்றார். இதை கேட்டு ஆத்திரமடைந்த சரவணன் பைக்கை எடுத்துக் கொண்டு பாக்கியத்தின் வீட்டிற்கு கிளம்பினார். பாண்டியன் தடுத்துமே சரவணன் கேட்கவில்லை.
மயிலின் வீட்டிற்கு வந்த சரவணன் பயங்கரமாக கத்தினார். பாக்கியம், நான் சண்டை போட்டது எல்லாம் உன்னிடம் சொல்லிவிட்டாளா, என் மகளின் குடியை கெடுத்தவர் என்றெல்லாம் அஞ்சலியை மீண்டும் மீண்டும் ரொம்ப மோசமாக பேசி இருந்தார். சரவணன் எவ்வளவு சொல்லியுமே பாக்கியம் கேட்கவில்லை. தங்கமயிலும் தன் அம்மாவை திட்டினார். இருந்தாலும் பாக்கியம் சரவணன்-அஞ்சலி இருவரையும் சேர்த்து வைத்து ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதனால் கொந்தளித்த சரவணன் ஒரு கட்டத்தில் கல்லை தூக்கி பாக்யாவின் மண்டையில் போட போனார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அந்த சமயம் வந்த கதிர், சரவணனை தடுத்து அங்கிருந்து அழைத்து சென்றார். பின் தங்கமயில், என் பிரச்சினையை நான் பார்த்துக் கொள்கிறேன். தேவை இல்லாமல் யாரும் தலையிடாதீர்கள் என்று தன்னுடைய அப்பா, அம்மாவிடம் சண்டை போட்டார். இதனால் மயிலுக்கு உடல்நிலை சரியில்லாமல்
மயங்கி கீழே விழுந்து விட்டார். இன்னொரு பக்கம் சரவணன், நான் எந்த தவறும் செய்யவில்லை. நாங்கள் எதர்ச்சியாக தான் கோயிலில் பார்த்தோம். எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று கதிரிடம் சொல்லி ரொம்ப எமோஷனாக அழுதார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் தங்கமயில் மன அழுத்தம் அதிகமாக இருந்ததால் மயக்கம் போட்டு விழுந்திருக்கிறார். டாக்டர், தங்கமயிலுக்கு அதிக பிரஷர் கொடுக்கக் கூடாது. அவர் எதிரில் சண்டை எல்லாம் எதுவும் போடாதீர்கள் என்று சொல்கிறார். உடனே பாக்கியம் தன் மகளை கூட பார்க்காமல் நேராக பாண்டியன் வீட்டிற்கு செல்கிறார். அங்கு சரவணன் செய்த வேலையையும், தங்கமயில் உடல்நல முடியாமல் ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தைப் பற்றி எல்லாம் சொல்கிறார். இதைக் கேட்டு கோமதி, பாண்டியன் ஷாக் ஆகிறார்கள். இன்னொரு பக்கம் அஞ்சலியின் அப்பா, இனிமேல் நீ சரவணனை பார்க்க கூடாது பேசக்கூடாது என்று அஞ்சலி இடம் சத்தியமாகி கொள்கிறார்.
சீரியல் ட்ராக்:
அந்த சமயம் பார்த்து சரவணன், அஞ்சலிக்கு போன் செய்கிறார். ஆனால், அஞ்சலி போனை எடுக்கவில்லை. சரவணன் பலமுறை போன் செய்து கொண்டிருக்கிறார். பின் கோமதி-பாண்டியன் இருவரும் ஹாஸ்பிடலுக்கு வருகிறார்கள். அங்கு தங்கமயிலின் உடல்நலத்தை பற்றி விசாரித்து கவனமாக இருக்க சொல்கிறார்கள். வழக்கம்போல பாக்கியம் ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறார். பின் தங்கமயில் திட்டியதால் பாக்கியம் வெளியே சென்று விடுகிறார். தங்கமயில் தன்னுடைய மாமனாரிடம் மன்னிப்பு கேட்கிறார்