மீனா பேச்சை கேட்டு கோமதி செய்யும் அட்ராசிட்டி, கொந்தளிக்கும் பாண்டியன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 22/2/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன், தங்கமயில் விஷயத்தை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து கோவிலுக்கு மீனா வந்தார். அங்கு மீனா, தன்னுடைய தோழியை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது மீனாவின் தோழி, என் மாமியாரை பார்த்துக் கொள்ள ஆள் ஒருவர் வேண்டும். யாராவது இருந்தால் ஏற்பாடு செய்ய என்றார். உடனே மீனா, தங்கமயிலை பற்றி தான் யோசித்தார். அப்போது சரவணன்- அஞ்சலி இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து மீனா ஷாக் ஆனார். அவர்களிடம் எதுவும் பேசாமல் அமைதியாக கிளம்பி வந்து விட்டார் மீனா.

பின் தங்கமயில் இடம் வேலையைப் பற்றி மீனா சொன்னார். பின் மீனா- தங்கமயில் இருவரும் தோழியின் வீட்டிற்கு சென்று விட்டார்கள். அப்போது மீனாவின் தோழி, என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை. அவர்களால் சுத்தமாக நடக்க முடியாது. அவர்களுக்கு எல்லா வேலையையும் நீங்கள் தான் செய்யணும் என்றார். இதைக் கேட்டு மீனாவிற்கு கஷ்டமாக இருக்கிறது. மீனா, இந்த வேலை வேண்டாம் என்று சொன்னாலும் தங்கமயில் கேட்கவில்லை. முழு மனதோடு அந்த வேலையை செய்ய ஒத்துக்கொண்டார்.
இன்னொரு பக்கம் கோமதி கையில் சூடான காபி கொட்டி விட்டது. வலி தாங்க முடியாமல் கோமதி கத்தினார். ஆனால் பாண்டியன் அதை நடிப்பு என்று திட்டி விட்டு சென்றார். இதனால் கோமதி ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அரசி, மீனாவிற்கு போன் செய்து கோமதிக்கு நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னார். மீனா, கோமதியை பார்க்க வீட்டிற்கு வந்து விட்டார். அப்போது மீனா, நீங்கள் இனிமேல் மாமாவிற்காக எதுவும் செய்யாதீர்கள். அவர் உங்கள் பின்னாடி வர மாதிரி பண்ணுங்கள். தயவு செய்து எதையும் நினைத்து வருத்தப்படாதீர்கள் என்று ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் குமாரின் வீட்டிற்கு பெண் வீட்டார் வந்திருந்தார்கள். அவர்களுக்கு மாப்பிள்ளை பிடித்து விட்டதால் திருமணத்தை சீக்கிரமாக நடத்தலாம் என்றார்கள்.

சீரியல் ட்ராக்:

இரண்டு வீடுமே தட்டை மாத்திக்கொண்டு கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். ஆனால், இந்த கல்யாணத்தில் குமாருக்கு விருப்பமே இல்லை. இன்னொரு பக்கம் தங்கமயில் வேலையெல்லாம் முடித்துவிட்டு தன்னுடைய வீட்டுக்கு வந்தார். அப்போது வேலை பார்க்கும் விஷயத்தைப் பற்றி பாக்கியத்திடம் சொன்னார். ஆனால், பாக்கியம் வழக்கம் போல தங்க மயில் மனதை காயப்படுத்தும் மாதிரி பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டிற்கு வந்தார். கோமதி, பாண்டியனை கவனிக்காமல் தன்னுடைய பிள்ளைகளுக்கு மட்டும் பார்த்து பார்த்து கவனித்தார். இதை பார்த்து பாண்டியனுக்கு கோபம் வந்தது.

https://www.youtube.com/watch?v=kSesa2RsXOo

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மீனா சொன்னது போல கோமதி, பாண்டியனை கண்டுக்காமல் அமைதியாக இருக்கிறார். பாண்டியன், தண்ணி வேணும் தண்ணி வேணும் என்று சொல்கிறார். இருந்தாலுமே கோமதி, கண்டுகொள்ளாமல் என்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார். பின் பாண்டியனே சாப்பாடு எடுத்து பரிமாறி சாப்பிடுகிறார். இருந்தாலும் கோமதி பேசவில்லை. அவரை தன் வழிக்கு கொண்டு வர கோமதி நினைக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full