ராஜி விஷயத்தால் இருவீட்டுக்குள் வெடிக்கும் கலவரம், கோமதி சொன்ன வார்த்தை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 25/1/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சக்திவேல் வழக்கம் போல பாண்டியன் குடும்பத்தை மோசமாக பேசிக் கொண்டிருந்தார். முத்துவேல் போக முடியாது என்று மறுத்தார். இதனால் காந்திமதி எமோஷனலாக பேசி அவர்கள் இருவரையும் கோமதி வீட்டிற்கு சாப்பிட போக ஒத்துக் கொள்ள வைத்தார். அதற்குப்பின் இந்த தகவலை பழனி, கோமதியிடம் சொன்னார். இதை கேட்டு கோமதி தலைக்கால் புரியாமல் சந்தோஷத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருந்தார்.

கோமதி தடபுடலாக கறிவிருந்தை சமைத்துக் கொண்டிருந்தார். வீட்டில் எல்லோருமே கோமதிக்கு உதவி செய்தார்கள். இன்னொரு பக்கம் சக்திவேல், மீண்டும் எல்லோரும் ஒன்றாக சேரப் போகிறீர்களா? என்று நக்கல் அடித்தார். முத்துவேல், அம்மாவின் ஆசைக்காகத்தான் நான் ஒத்துக்கொண்டேன். போய் சாப்பிட்டு வந்துவிடலாம், மற்றபடி வேறு ஒன்றும் இல்லை என்றார். சக்திவேல், யாரும் சேர்ந்து விடக்கூடாது. ஏதாவது செய்து சண்டையை பெரிசாக்கணும் என்று யோசித்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அதற்குப்பின் காந்திமதி வீட்டில் எல்லோருமே பாண்டியன் வீட்டிற்கு வந்தார்கள். சந்தோஷத்தில் கோமதி துள்ளி குதிக்கிறார். பின் கோமதி தன் அண்ணன்களை அன்பாக உபசரித்து உட்கார வைத்து பேசி இருந்தார். வழக்கம்போல சக்திவேல் நக்கல் அடித்துக் கொண்டிருந்தார். பின் கோமதி, ஏன் வீட்டிற்கு வரவில்லை என்று கேட்டார். அதற்கு சுகன்யா, என் கணவரை வீட்டு பக்கமே வரக்கூடாது என்று துரத்திவிட்டால், நான் எப்படி வருவேன் என்று நாரதர் வேலையை செய்ய ஆரம்பித்தார். இதனால் கோமதியின் முகம் மாறுகிறது.

சீரியல் ட்ராக்:

கோமதி, சுகன்யா பேசியதற்கு கோபப்படாமல் அவரை அழைத்துக் கொண்டு உள்ளே போனார். சக்திவேல் ஏதாவது பிரச்சனையை செய்ய வேண்டும் என்று நக்கலாகவே பாண்டியன் குடும்பத்திடம் பேசிக் கொண்டிருந்தார். ஆனால், முத்துவேல் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே அமர்ந்து சாப்பிட்டார்கள். ஆனால், இது சக்திவேலுக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை.

https://www.youtube.com/watch?v=Yt8ceh1-ecM

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சக்திவேல், உண்மை தெரிந்த உடன் ராஜியை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து இருக்கணும். இந்த கேடுகெட்டவன் அவளை திருமணம் செய்திருக்கக் கூடாது. ராஜு வழியாக சொத்து வரலாம் என்று பார்த்துதான் அவன் திட்டம் போட்டு கல்யாணம் செய்து இருக்கிறான் என்று மோசமாக பேசுகிறார். கோமதி, நான் தான் திருமணம் செய்து வைத்தேன் என்று உண்மையை உடைத்து விடுகிறார். இதை கேட்டு பாண்டியன் ஷாக் ஆகிறார். முத்துவேல், என் மகளுக்கு திருமணம் செய்து வைக்க நீ யார்? என்று திட்டி விட்டு முத்துவேல் குடும்பம் கிளம்புகிறது. பின் கோமதி தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறார். பாண்டியன், கணவன் மனைவிக்குள் விரிசல் ஏற்பட்டால் அதை ஒட்ட முடியாது என்று கோபமாக பேசுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full