குமார்-சக்திவேலை புரட்டி எடுக்கும் பாண்டியன் குடும்பம், கொந்தளிக்கும் காந்திமதி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
சக்திவேல்-குமாரை வெளுத்து வாங்கும் கோமதி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன், சரவணன் தன்னுடைய குழந்தையை பற்றி கூட கவலை இல்லாமல் இருக்கிறான். அது நம்ம வீட்டு வாரிசு. நீ தங்கமயிலின் வீட்டிற்கு சென்று கொஞ்சம் பணத்தை கொடுத்து விட்டு வா என்றார். கோமதியும் தங்கமயில் வீட்டிற்கு போனார். ஆனால், தங்கமயில் அங்கு இல்லை. பாக்கியம் தான் இருந்தார். வழக்கம்போல பாக்கியம், பாண்டியன் குடும்பத்தை குறை சொல்லிக் கொண்டிருந்தார். கோமதி பெரிதாக கண்டுகொள்ளாமல் பணத்தை டேபிள் மீது வைத்து விட்டு அங்கிருந்து சென்றார். கோமதி ஆட்டோவில் ஏறி செல்வதை தங்கமயில் பார்த்து விட்டார்.
கோமதி கொடுத்த பணத்தை தங்கமயில் மீண்டும் கோமதி இடமே கொடுத்து விட்டார். இதை பார்த்து சரவணன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் காந்திமதியிடம் கதிர்-ராஜி இருவரும் முத்துவேல் உடைய உடல்நிலை பற்றி விசாரித்தார்கள். காந்திமதியுமே கதிர் செய்த உதவியை பற்றி பேசி ரொம்பவே பெருமைப்பட்டார். இதை எல்லாம் பார்த்து சக்திவேல் கோபப்பட்டார். அதற்கு பின் வீட்டு செலவு அதிகமாவதால் செந்தில் புலம்பினார். மீனா, செலவை பார்த்து பண்ணனும். உங்க இஷ்டத்துக்கு செய்தால் இப்படி தான் நடக்கும் என்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
சரவணனை பார்த்து மயில் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றார். உடனே சரவணன், ரொம்ப ஓவராக நடிக்காதே. எங்கள் அம்மா பணத்தை கொடுத்தால் எதற்கு திருப்பி கொடுக்கிறாய்? அது உனக்காக கொடுக்கவில்லை. குழந்தைக்காக கொடுத்தது என்று கோபமாக பேசி இருந்தார். தங்கமயில், அதுதான் உங்கள் குழந்தை இல்லையே, எதற்காக பணம் கொடுக்கணும் என்றார். சரவணன், குழந்தை பிறந்த உடனே உன்னுடன் விடமாட்டேன். என்னுடைய வீட்டிற்கு எடுத்து வந்து வளர்ப்பேன் என்றெல்லாம் சவால் விட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஹாஸ்பிடலில் கண்விழித்த முத்துவேல், தன்னை தள்ளிவிட்டது குமார் தான் என்றும் கதிருக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று உண்மையை சொல்லி விடுகிறார். இதைக் கேட்டு சக்திவேல் பதறிப் போகிறார். பின் போலீஸுமே கதிர் மீது தவறில்லை என்று புரிந்து கொண்டு கதிரை விடுதலை செய்து விடுகிறார்கள். பாண்டியன் குடும்பம் சந்தோஷப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் தனியாக இருந்த குமாரை சக்திவேல் அடி வெழுத்து வாங்குகிறார். ஒரு கட்டத்தில் குமார் உண்மையை சொல்லி விடுகிறார். இருந்தாலும் சக்திவேல், குமார் செய்ததை நினைத்து கோபப்படுகிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்கு பின் கதிரை வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள். கோமதி, ராஜி இருவரும் அழுகிறார்கள். அந்த சமயம் பார்த்து சக்திவேல், குமாரை அழைத்து வருகிறார். குமாரை பார்த்து கோமதி கொந்தளிக்கிறார். மொத்த பாண்டியன் குடும்பமே குமாரின் மீது சீறுகிறார்கள். சக்திவேல் எவ்வளவு தடுத்தும் பார்க்கிறார். இருந்தாலும் யாரும் கேட்கவில்லை. குமார்- சக்திவேலை வெளுத்து வாங்குகிறார்கள். அதற்குப்பின் அப்பத்தா, சக்தி வேலையும் குமாரையும் திட்டிக் கொண்டிருக்கிறார்.