தங்கமயிலின் ட்ராமாவால் சரவணனை வெளுத்து வாங்கும் பாண்டியன்,கோமதி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 28/11/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன், நீயும் உன் குடும்பமும் ஏமாற்றியதை விடவா அவர்கள் செய்துவிட்டார்கள் என்று வழக்கம் போல தங்கமயில் திட்டிக் கொண்டிருந்தார். சீக்கிரத்திலேயே நீ மாட்டப் போகிறாய் தயாராக இரு என்று சொல்லிவிட்டு சென்றார். இன்னொரு பக்கம் ராஜி-கதிர் இருவரும் அவுட்டிங் சென்று இருந்தார்கள். ஒவ்வொரு கடைக்காக கதிரை அழைத்துக் கொண்டு ராஜி போனார். இன்னொரு பக்கம் செந்தில்- மீனா இருவரும் ரொம்ப நாள் கழித்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

கதிர்-ராஜி இருவருமே வீட்டிற்கு வந்தார்கள். சரவணன் தனியாக வெளியே படுத்திருப்பதை பார்த்து கதிருக்கு சந்தேகம் வந்தது. பின் இதைப்பற்றி கதிர், ராஜியிடம் சொன்னார். மறுநாள் காலையில் வீட்டில் எல்லோருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பாண்டியன் ஞாபகம் மறதியில் பழனியின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டார். பின் சரவணன், மாமா அவருடைய கடையில் இருப்பார் என்று சொன்னவுடன் பாண்டியனுக்கு அப்பதான் நினைவுக்கு வந்தது. உடனே தங்கமயில், கடையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் எதை பற்றியும் கவலைப்படாதீர்கள் என்றெல்லாம் ஆறுதல் சொன்னார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இன்னொரு பக்கம் செந்தில் தூங்கிக் கொண்டே இருந்தார். சமைக்க உதவி செய்ய மீனா எவ்வளவு கேட்டுமே செந்தில் எழவில்லை, தூங்கிக் கொண்டே இருந்தார். அதற்குப்பின் தங்கமயில் ஏதோ நினைத்துக் கொண்டிருந்தார். ராஜி-அரசி இருவரும் கூப்பிட்டும் அவர் திரும்பி பார்க்கவில்லை. பின் ராஜி, என்ன பிரச்சனை என்று விசாரித்தார். இப்போது தங்கமயில் எமோஷனலாக அழுது கொண்டு கர்ப்பமான விஷயத்தில் பொய் சொன்னேன் என்று மட்டும் சொன்னார். மற்ற எந்த விஷயத்தையும் சொல்லவில்லை. சரவணன் கஷ்டப்படுத்தி கொடுமைப்படுத்துகிறார் என்பது போலவே பேசிக் கொண்டிருந்தார். இதை கேட்டு கோமதிக்கு பயங்கர கடுப்பானது.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் செந்தில் வழக்கம் போல் தாமதமாக எழுந்துவிட்டு சாப்பாடு ஆகிவிட்டதா? என்று கேட்டவுடன் வழக்கம்போல் மீனா ருத்ர தாண்டவம் ஆடுகிறார். பின் செந்தில், மீனாவை சமாதானம் செய்து ஹோட்டலில் சாப்பாடு வாங்கிக் கொள்ளலாம் என்கிறார். இன்னொரு பக்கம் தங்கமயில், சரவணன் தன் மீது பாசம் இல்லாமல் கோபத்தை காண்பிக்கிறார் என்று சொல்கிறார். உடனே சரவணன், உண்மையை சொல்ல வரும்போது கோமதி, தங்கமயில் இடம் அன்பாக இரு என்று தன் மகனை தான் திட்டுகிறார். இன்னொரு பக்கம் ஒரு பெண், வண்டி வாடகைக்கு வேண்டும். அதுவும் கதிர் தான் ஓட்ட வேண்டும் என்று சொல்வதால் ராஜிக்கு பயங்கர கடுப்பாகிறது.

சீரியல் ட்ராக்:

பின் இதைப்பற்றி ராஜி, கதிரிடம் விசாரிக்கிறார். அப்போது கதிர், அவருடைய தாத்தா வயதானவர். நான் வண்டி ஓட்டினால் தான் அவர் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறார் என்றவுடன் ராஜி அமைதியாகி விடுகிறார். அதற்குப்பின் சரவணன் கடையில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது பாண்டியனுக்கு போன் செய்த தங்கமயில், அவர் போனை எடுக்கவில்லை. என்னிடம் ரொம்ப கோபமாக இருக்கிறார் என்று ஒன்றுக்கு இரண்டாக மீண்டும் தங்கமயில் ஏற்றி வருகிறார். இதனால் கோபப்பட்ட பாண்டியன், உண்மை தெரியாமல் சரவணனை திட்டிக் கொண்டிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full