பொய் சொல்ல தங்கமயிலை கட்டாயப்படுத்தும் பாக்கியா, கோமதி நிலை என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் போலீஸ், அரசி-ராஜி மட்டும் வீட்டிற்கு அழைத்துப் போகலாம். மற்றவர்கள் இங்கு இருக்கட்டும். எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விடுகிறார். இதை கேட்டு சரவணன் கோபப்படுகிறார். கோமதி ரொம்ப எமோஷனலாக கதறி அழுகிறார். பாண்டியன் குடும்பமே வேதனையில் உடைந்து கிடக்கிறது.
பாண்டியன் வீட்டில் எல்லோரையுமே சிறையில் அடைக்கப் போவதாக போலீஸ் சொன்னார். வீட்டில் உள்ள எல்லோருமே பதறினார்கள். கோமதி ரொம்பவே அழுதார். பாண்டியன் மனம் உடைந்து விட்டார். அதற்குப்பின் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஜெயிலுக்கு பாண்டியன் குடும்பத்தை அழைத்து போனார்கள். வேதனையில் ராஜி, அரசி, மீனா தங்களுடைய வீட்டிற்கு வந்தார்கள். முத்துவேல்- சக்திவேல் இருவரும் பகையை மறந்து பாண்டியன் வீட்டிற்குள் வந்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
வேதனையில் இருக்கும் அரசி, ராஜிக்கு முத்துவேல் ஆறுதல் சொல்லிவிட்டு தங்களுடைய வீட்டிற்கு அழைத்தார்கள். ராஜி- அரசி வர மறுக்கிறார்கள். பின் அப்பத்தா அவர்களுக்கு துணையாக அங்கேயே இருப்பதாக முத்துவேல், சக்திவேல் எதுவும் பேசாமல் ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பி இருந்தார். இன்னொரு பக்கம் தனித்தனி செல்லில் பாண்டியன் குடும்பத்தின் ஆட்களை போட்டு இருந்தார்கள். கோமதி தன்னுடைய கணவன் மகன்களை நினைத்து அழுதழுது அவருக்கு நெஞ்சு வலி வந்து விட்டது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அழுது கொண்டிருந்ததால் கோமதி மயங்கி கீழே விழுந்து கிடக்கிறார். இன்னொரு பக்கம் அரசி, ராஜி, மீனா மூவருமே எல்லோரையும் நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பழனி அவர்களுக்கு சாப்பாடு கொண்டு வந்து ஏதோ சொல்லி சாப்பிட வைக்கிறார். இன்னொரு பக்கம் கோமதி மயங்கி கீழே விழுந்து கிடப்பதை பார்த்து போலீஸ் அவரை உடனடியாக ஹாஸ்பிடலில் சேர்த்து விடுகிறார்கள். அப்போது டாக்டர், சாப்பிடாமல் இருந்ததால் தான் மயக்கம் வந்தது என்று சொன்னதால் போலீஸ் கோமதிக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து சாப்பிட வைக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் தங்கமயில், தான் தவறு செய்து விட்டோமா? என்று வேதனையில் புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியா-மாணிக்கம் இருவருமே நீ எந்த தவறும் செய்யவில்லை. இது கடைசி பொய். இதுதான் உன் வாழ்க்கையை காப்பாற்றும் என்றெல்லாம் சொல்லி தங்கமயிலின் மூளையை செலவு செய்கிறார்கள். அந்த சமயம் பார்த்து பாக்கியா, சொன்ன வக்கீல் வீட்டிற்கு வந்து தங்கமயிலிடம் பொய் சொல்ல வேண்டும் என்கிறார். பாக்கியாவுமே தங்கமயிலிடம் கட்டாயப்படுத்தி பொய் சொல்ல வைக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.