குமார் கேசை வாபஸ் வாங்க சொன்ன கோமதி, பாண்டியன் சொன்ன வார்த்தை-பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 12/9/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ராஜி, டான்ஸ் போட்டியில் நடந்ததை நினைத்து அழுது கொண்டிருந்தார். கதிர் அவருக்கு ஆறுதல் சொன்னார். அதற்குப்பின் ராஜி செய்த வேலைக்காக திட்டிய கதிர், இனி எனக்காக எதுவும் செய்யாதே என்றார். அதற்கு பின் ஒரு ஓட்டலில் கதிர்- ராஜி இருவரும் சாப்பிடுகிறார்கள். அப்போது கதிர், ராஜி பற்றி தன் மனதில் இருக்கும் எண்ணத்தை எல்லாம் அவருடைய கையை பிடித்து சொன்னார். இதைக் கேட்டு ராஜி எமோஷனலாக அழுதார். கிட்டத்தட்ட கதிர், ராஜியை காதலிக்கும் விஷயத்தை சொன்னார்.

அதற்குப்பின் இருவருமே வீட்டிற்கு சந்தோஷமாக வந்தார்கள். ராஜி- கதிர் இருவருமே வீட்டிற்கு கிளம்பி வந்தார்கள். அப்போது ராஜி, மீனாவிற்கு போன் செய்து வீட்டுக்கு வரும் விஷயத்தை மட்டும் சொன்னார். மீனாவுமே சரி என்றார். அதற்குப்பின் வீட்டில் ராஜி, கதிர் இருவரும் வந்ததை பார்த்து பாண்டியன் வீட்டில் எல்லோருமே ஷாக் ஆனார்கள். போட்டியில் வெற்றி பெற்றாயா? என்னாச்சு? என்றெல்லாம் மாற்றி மாற்றி கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள். ராஜி, அங்கு ஒரு பிரச்சனை? என்று சொல்ல வந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

உடனே கதிர் தடுத்து நிறுத்தி வீட்டில் எல்லோரையும் எதிர்த்து போனதால் அவளால் அங்கு ஒழுங்காக நடனமாட முடியவில்லை. மீண்டும் வீட்டிற்கு போகலாம் என்று வந்துவிட்டார் என்று ஏதோ ஒரு காரணங்களை சொல்லி சமாளித்தார். இதனால் கோமதி, இனிமேலாவது பெரியவர்கள் பேச்சை கேள் என்று திட்டி அனுப்பி விட்டார். பாண்டியன் எதுவுமே சொல்லவில்லை. அதற்குப்பின் ராஜி, மீனா- அரசியிடம் போட்டி நடக்கும் இடத்தில் நடந்த எல்லா விஷயத்தையும் சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் குமாரின் கேஸ் வருவதால் அவருடைய அம்மா, பெரியம்மா, பாட்டி எல்லோருமே வேதனையில் இருக்கிறார்கள். மாரி, குமாரை நினைத்து ரொம்பவே எமோஷனல் ஆக அழுகிறார். இதனால் வடிவு, ராஜியை சந்தித்து கேஸை வாபஸ் வாங்க சொல்கிறார். பின் இதை பற்றி ராஜி, மீனாவிடம் சொல்லி வருத்தப்படுகிறார். இன்னொரு பக்கம் அப்பத்தா, கோமதியை சந்தித்து குமார் கேஸை வாபஸ் வாங்க சொல்லி ரொம்ப எமோஷனலாக கதறி அழுகிறார். பின் ராஜி- மீனா இருவருமே சேர்ந்து பாண்டியனிடம் கேஸ் வாபஸ் வாங்குவதை பற்றி பேசப்போகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அப்போது கோமதி, குமார் மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்க சொல்லி தைரியமாக பாண்டியனிடம் பேசுகிறார். இதனால் கோபப்பட்ட பாண்டியன் முடியாது என்று கோமதியை திட்டுகிறார். இதனால் கோமதி, தன் அண்ணன் குடும்பத்தை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு பேசுகிறார். ஆனால், பாண்டியன் மனம் மாறவே இல்லை. மறுநாள் காலையில் கோர்ட்டுக்கு குமார் கிளம்புகிறார். அப்போது குமார் வீட்டில் உள்ள எல்லோருமே குமாரை நினைத்து கதறி அழுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full