பாண்டியன் மனதை மாற்ற கோமதியின் புது ட்ராமா, காதல் பறவைகளாக சுற்றும் ராஜி-கதிர், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கதிர், ஐபிஎஸ் ஆக வேண்டும் என்றால் கோச்சிங் சென்டர் போக வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்கிறேன் என்றார். ராஜி, பணம் நிறையாகும். அது வேண்டாம் என்றார். கதிர், அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் மீனா வேலையை முடித்து வரும் வரை தங்கமயில் காத்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த மீனா, எதற்காக இப்படி செய்கிறீர்கள்? என்றார். தங்கமயில் ரொம்ப எமோஷனலாக அழுது பேசி மன்னிப்பு கேட்டார். இருந்தாலும் மீனா எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார்.
அதற்குப்பின் ராஜி- கதிர் இருவரும் சென்னை அகாடமியில் சேர்வதற்கான விவரங்களை எல்லாம் கேட்டார்கள். அதோடு இரண்டு நாள் ட்ரைனிங் போவதற்கு சென்னை போக இருப்பதால் வீட்டில் பேசலாம் என்று கதிர்-ராஜி இருவரும் முடிவு எடுத்தார்கள். அதற்குப்பின் பாண்டியனிடம் சென்னை இன்ஸ்டிடியூட்டில் சேர்வதை பற்றி ராஜி சொன்னார். பாண்டியன் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் இருவரையும் சென்னைக்கு போயிட்டு வர சொன்னார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
ராஜி-கதிர் இருவரும் சென்னைக்கு கிளம்பினார்கள். போகும் வழியில் ராஜிக்கு தேவையான எல்லா தேவைகளையும் கதிர் செய்து தந்தார். பின் இருவரும் சென்னைக்கு சென்று விட்டார்கள். அங்கு ஒரு ஹோட்டலில் இருவரும் தங்கினார்கள். கதிர், ராஜியின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்டு ரசித்துக்கொண்டிருந்தார். அப்போது ராஜி கையில் அடிபட்டு விடுவதால் கதிர் ரொம்பவே துடித்து போனார். பின் இருவரும் ஒருவரை ஒருவர் காதலாக பார்த்துக் கொண்டார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜி-கதிர் இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு ரசிக்கிறார்கள். பின் இருவரும் இன்ஸ்டியூஷனுக்கு செல்வதற்கு தயாராகிறார்கள். அதற்குப்பின் இன்ஸ்டியூட்டிக்கு கிளம்பி ராஜி கிளாஸ் அட்டென்ட் பண்ணுகிறார். இன்னொரு பக்கம் கோமதி, தன் கணவர் தன்னை கவனிக்க வேண்டும் என்பதற்காக உடம்பு சரியில்லாதது போல் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால், பாண்டியன் அதை கண்டுகொள்ளவே இல்லை. பின் அரசி, இதெல்லாம் வேலைக்காகாது வேற ஏதாவது யோசியுங்கள் என்று தன் அம்மாவை திட்டுகிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் கிளாஸ் முடிந்துவிட்டு ராஜி- கதிர் இருவரும் கிளம்பி வந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது இருவருமே ரொம்ப அன்பாகவும் பாசமாகவும் வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டு வருகிறார்கள்.
புதிதான காதல் ஜோடிகள் போல் நடந்து கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் மீனா வேலைக்கு தயாராகி கிளம்புகிறார். அப்போது செந்தில், இன்றும் எனக்கு சமைக்கவில்லையா என்று வம்பு இழுக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது.