கதிர் சொன்ன வார்த்தையால் உடைந்து போகும் ராஜி, மயிலின் இறுதி முடிவு - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 30/4/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோவிலில் சரவணன்- அஞ்சலி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அஞ்சலி, நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வு தான் எனக்கு வேண்டும் என்று எமோஷனலாக பேசி இருந்தார். சரவணன், என்ன நடந்தாலும் நான் இனிமேல் தங்க மயிலுடன் சேர்ந்து வரமாட்டேன். ஒருமுறை உன்னை ரொம்ப காயப்படுத்தி விட்டேன். இனிமேலும் உன்னை காயப்படுத்த மாட்டேன். நான் உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று மீண்டும் மீண்டும் உத்தரவாதம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

சரவணன், கோமதி இருவரும் கோர்ட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்கள். அப்போது கோமதி, விவாகரத்து விஷயத்தை கொஞ்சம் யோசித்து முடிவெடு, அவசரப்படாதே என்றார். சரவணன், முடிவெடுத்து விட்டேன். தங்கமயில் உடன் என்னால் இனி சேர்ந்து வாழ முடியாது. குழந்தையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். கோமதியால் எதுவுமே பேச முடியவில்லை. பின் கோர்ட்டில் சரவணனிடம் பாக்கியம், உன்னை சும்மா விடமாட்டேன் என்று வழக்கம்போல சண்டை வாங்கிக் கொண்டிருந்தார். அதற்குப்பின் கோர்ட்டில் சரவணன்- தங்கமயில் விவாகரத்து வழக்கு நடக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

வழக்கம் போல சரவணன், எனக்கு தங்கமயில் உடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை. விவாகரத்து கொடுத்து விடுங்கள் என்றார். பின் தங்கமயில் இடம் நீதிபதி விசாரித்தார். அப்போது தங்கமயில், தன் வீட்டார் செய்த எல்லா தவறுகளையும் சொல்லி வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டு எனக்கும் விவாகரத்து கொடுத்து விடுங்கள். இனி நாங்கள் சேர்ந்து வாழ்வதில் விருப்பமில்லை என்றார். இதைக் கேட்டு பாக்கியம் கோர்ட்டிலேயே கத்துகிறார். கோமதிக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அதற்குப்பின் நீதிபதியும் வேறொரு தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்து விட்டார். பின் வீட்டிற்கு வந்த சரவணன், கோர்ட்டில் நடந்ததை சொல்லி தங்கமயிலை குறை சொல்லிக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோர்ட்டில் தங்கமயில் பேசிய விஷயத்தை வீட்டில் தன் கணவரிடம் சொல்லி பாக்யம் ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் தங்கமயில், என்னையும் என் குழந்தையும் பார்த்துக் கொள்ள தெரியும். உங்களையும் நான் கைவிட மாட்டேன். நாங்கள் சேர்ந்து வாழ்வதில் எனக்கு விருப்பமில்லை என்று சொல்கிறார். பாக்கியத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. இன்னொரு பக்கம் மீனா, வேலை காரணமாக சென்னைக்கு ட்ரெய்னிங் போவதாக செந்திலிடம் சொல்லி ரொம்பவே சந்தோஷப்படுகிறார். மீனா கிளம்புவதால் செந்தில் கொஞ்சம் வருத்தப்பட்டாலும் உள்ளுக்குள் சந்தோஷப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் ராஜி, தேர்வு சென்னையில் நடைபெற இருப்பதால் கதிரை அழைக்கிறார். கதிர் எனும் முக்கியமான வாடகை இருக்கிறது. என்னால் வர முடியாது. நீயே போயிட்டு வா என்று சொல்கிறார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் வருகிறது. ஒரு கட்டத்தில் ராஜி, என்னை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்கிறார். பின் வீட்டில் இதைப் பற்றி ராஜி சொல்கிறார். கோமதி, கதிரை திட்டிக் கொண்டிருக்கிறார். அதற்குப்பின் மீனா சென்னை கிளம்பும் விஷயத்தை அறிந்த கோமதி சொல்கிறார். ராஜி ரொம்பவே சந்தோஷப்படுகிறார். அதற்கு பின் தான் தேர்வெழுத செல்வதால் ராஜி தன்னுடைய அப்பா அம்மா இருவரிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு செல்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full