மனம் மாறும் ராஜி, காதலை ஏற்றுக்கொள்ளவாரா கதிர்?பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 2/2/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் ராஜி, போலீஸ் தேர்வு எழுதினால் என்ன பிரச்சனை வருமோ? என்று மீண்டும் பயந்து கொண்டிருந்தார். உடனே கதிர் அவருக்கு அறிவுரை சொல்லி சப்போர்ட்டாக இருந்தார். இன்னொரு பக்கம் தங்கமயில், பள்ளியில் சர்டிபிகேட் கொடுக்க சொன்னதை பற்றி சரவணன் இடம் பேசி இருந்தார். ஆனால், சரவணன் எதையும் பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை. பின் அதிகாலையில் ராஜி-கதிர் இருவருமே கிரவுண்டில் ஓடிக்கொண்டிருந்தார். இதை பார்த்த பாண்டியனுக்கு பயங்கர கோபம் வந்து வீட்டில் சொன்னார். அப்போது கதிர்-ராஜி வந்தார்கள்.

பாண்டியன், ராஜி போலீஸ் வேலைக்கு போகக்கூடாது என்று சண்டை போட்டார். அதற்கு கதிர், எதுவாக இருந்தாலும் என்னிடம் பேசுங்கள். இதற்கும் ராஜிக்கும் சம்பந்தமில்லை. அவள் விருப்பப்படி போலீஸ் ஆகுவார். அதற்கு நான் உறுதுணையாக நிற்பேன் என்று பாண்டியனை எதிர்த்து பேசி இருந்தார்.
நேற்று எபிசோட்டில் கதிர், நண்பனின் திருமணத்திற்கு சென்னை போவதாக வீட்டில் சொன்னார். இதைக் கேட்டவுடன் கோபத்தில் பாண்டியன் சண்டை போட்டார். உண்மையில் கதிர், ராஜியின் தேர்வுக்காக தான் சென்னை போகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இதனால் பாண்டியன்-கதிர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் தான் அதிகமானது. இன்னொரு பக்கம் மீனா வேலை செய்யும் இடத்திற்கு வந்த ராஜியின் சித்தப்பா, தனக்கு தெரிந்த அதிகாரியின் மூலம் பிரச்சனையை முடிக்க பார்த்தார். மீனா, எதுவாக இருந்தாலும் சட்டப்படிதான் செய்வேன். என்னால் யாருக்கும் சலுகை செய்ய முடியாது என்று அதிகாரியை திட்டி விட்டார். இதனால் ராஜியின் சித்தப்பா மீனாவின் மீது கோபப்பட்டார். கடைசியில் கதிர்- ராஜி இருவருமே சென்னைக்கு கிளம்பினார்கள்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் கதிர் - ராஜி இருவருமே பாண்டியனிடம் சொல்லாமல் சென்னைக்கு கிளம்பி விட்டார்கள். இதனால் வீட்டில் என்ன கலவரம் வருமோ? என்ற பயத்தில் கோமதி இருந்தார். அந்த சமயம் பார்த்து பாண்டியன் வீட்டிற்கு வந்தார். அவர் எல்லோரையும் வரவைத்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது கதிர்-ராஜி வீட்டில் இல்லாததை அறிந்து பாண்டியன் விசாரித்தார்கள். அதற்கு கோமதி, இருவரும் சென்னை கிளம்பி விட்டார்கள் என்று சொன்னவுடன் கோபப்பட்டார்.

சீரியல் ட்ராக்:

ஆத்திரத்தில் பாண்டியன், அவரவர்கள் முடிவெடுப்பதற்கு இந்த வீட்டில் எதற்கு நான் இருக்கனும் என்றெல்லாம் கத்தி இருந்தார். அப்போது மீனா, ராஜி சித்தப்பா ஆஃபீஸ் வந்து மிரட்டியதை பாண்டியனிடம் சொன்னார். உடனே செந்தில் கோபப்பட்டு அவரிடம் சண்டைக்கு போக பார்த்தார். ஆனால், பாண்டியன் தடுத்து நிறுத்தி இதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் கதிர்- ராஜி இருவரும் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்கள். அப்போது ராஜி, பொய் சொல்லி போவதை நினைத்து வருத்தப்பட்டார். ஆனால், கதிர் அவருக்கு ஆறுதல் சொல்லி சப்போர்ட்டாக பேசி இருந்தார்.

https://www.youtube.com/watch?v=rYrbxWHgn54

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சென்னைக்கு கதிர்- ராஜி இருவரும் சென்று விடுவார்கள். அங்கு ஹோட்டலில் கதிர், தன்னிடம் பணம் குறைவாக இருப்பதால் ராஜிக்கு மட்டும் பிரியாணி வாங்கி தந்து தன்னுடைய சாப்பாடு செலவை குறைத்துக் கொள்கிறார். இதையெல்லாம் நினைத்து ராஜி பீல் செய்கிறார். பின் இருவரும் பீச்சுக்கு செல்கிறார்கள். அங்கு ராஜி, கதிரை பற்றி தெரிந்து கொள்ள பேசுகிறார். அப்போது கதிர், என்னை சுற்றி இருப்பவர்கள் சந்தோஷமாக இருப்பதை பார்ப்பது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்னவுடன் அவர் மீது ஒரு தனி பாசமும் அன்பும் ராஜிவிற்கு வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full