பிரச்சனையில் சிக்கி கொண்டு தவிக்கும் ராஜி, காப்பாற்றினாரா கதிர்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் டான்ஸ் போட்டியில் நடுவராக இருக்கும் ஒருவர், ராஜி உடன் சேர்ந்து நடனம் ஆட, அது பிடிக்காமல் ராஜி அங்கிருந்து வெளியே வந்து விட்டார். ராஜி என்ன செய்வது என்று புரியாமல் பயந்து கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து போன் செய்த கதிர், ஒன்னும் பிரச்சனை இல்லையா? என்று கேட்டார். அதற்கு ராஜி, எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். ராஜியை நினைத்து கதிர் ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் தங்கமயிலைபார்ப்பதற்காக அவருடைய அம்மா வீட்டிற்கு வந்திருந்தார்.
அப்போது தங்கமயில், சொத்தை வித்து இரண்டு பங்காக செந்தில், கதிருக்கு கொடுக்கும் விஷயத்தை பற்றி சொன்னார். இதைக் கேட்டவுடன் தங்கமயில் அம்மா கோபப்பட்டு பேசி இருந்தார். இதையெல்லாம் பார்த்த சுகன்யாவும், தங்கமயிலுக்கு சாதகமாக பேசி இருந்தார். பின் தங்கமயிலின் அம்மா, தேவையில்லாத ஐடியாவை கொடுத்தார்கள். இன்னொரு பக்கம் ராஜி, பயத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்போது போட்டியில் கலந்து கொண்ட சிலர் அவருக்கு ஆறுதல் சொன்னார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் ராஜியை வேறொரு நபருடன் சேர்ந்து நடனமாட சொன்னார்கள். ஆனால், ராஜிக்கு விருப்பமே இல்லை. அதுவும் ஒரு கிளாமரான பாட்டுக்கு இருவரையும் ஆட சொன்னார்கள். ராஜி தனியாக தள்ளி போய் நின்றார். இதையெல்லாம் பார்த்த அந்த நடுவர்கள் ராஜியை திட்டி நாங்கள் சொல்வது போல் தான் நீ நடனமாட வேண்டும் என்று மிரட்டினார்கள். இதனால் ராஜி வேதனையில் ரூமுக்கு சென்று விட்டார். அப்போது அங்கு வந்த ஒரு பெண், உனக்கு பணம் வேண்டும் என்றால் அவர்கள் சொல்வதைப் போல அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள் என்றார்.
நேற்று எபிசோட்:
அதற்கு ராஜி முடியாது என்றார். இன்னொரு பக்கம் பாண்டியனுக்கு கால் வழி என்பதால் அவரை அரசி பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டார். இன்னொரு பக்கம் கோமதியை கோவிலுக்கு அப்பத்தா வர சொன்னார். பின் கோவிலில் அப்பத்தா, குமார் நிலைமையை பற்றி எடுத்து சொல்லி கேஸை வாபஸ் வாங்க சொன்னார். உடனே கோமதி கோபப்பட்டு தன் அம்மாவை திட்டினார். இருந்தாலும் விடாமல் அப்பத்தா, குமார் கேஸை பற்றி தான் பேசி கொண்டு இருந்தார். கடைசியில் ராஜி, ஹோட்டலை விட்டு கிளம்ப பார்த்தார். அந்த சமயம் பார்த்து நடுவர்கள் அங்கு வந்து விட்டார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜியை போகவிடாமல் அந்த நடுவர்கள் எல்லோருமே அவரை ரூமில் அடைத்து வைத்தார்கள். எவ்வளவோ கத்தி கதறி அழுதும் அவர்கள் கேட்கவில்லை. பின் அந்த நடுவர்கள், பணத்தை 10 லட்சம் கொடு இல்லையென்றால் நாங்கள் சொல்வதை செய் என்று மிரட்டுகிறார்கள். அந்த சமயம் பார்த்து சரியாக கதிர் வந்து விடுகிறார். ஒவ்வொரு ரூமாக கதிர், ராஜியை தேடுகிறார். உடனே ராஜியின் வாயை மூடுகிறார்கள். இருந்தாலுமே கதிர் என்று ராஜி கத்துகிறார். அதைக் கேட்டவுடன் கதிர்
அந்த ரூமிற்கு வந்து கதவை உடைத்து ராஜியை காப்பாற்றுகிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது ராஜி, இவர்கள் நல்லவர்களே கிடையாது, கெட்டவர்கள் தெரியாமல் வந்து விட்டேன். என்னை மன்னித்துவிடு என்று ரொம்ப எமோஷனலாக அழுகிறார். கதிர், ராஜி நிலைமையை புரிந்து கொண்டு அங்கிருந்த ஆட்களை எல்லாம் அடித்து போட்டு அங்கிருந்து அழைத்து வருகிறார். இன்னொரு பக்கம் குமாரின் கேஸ் விஷயமாக கோமதி, பாண்டியனிடம் பேசுகிறார். அதற்குள் பாண்டியன் கோமதியை திட்டுவதால் பயந்து கொண்டு உண்மை எதுவும் சொல்லாமல் சென்று விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.