ராஜியை நடுரோட்டிலே திட்டிய கதிர், பயந்து ஓடும் சுகன்யா - விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 22/8/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் மீனா, தங்கமயிலுக்கு ஆறுதல் சொன்னார். வீட்டில் உள்ள எல்லோருமே குழந்தை நினைத்து ரொம்பவே எமோஷனலாக அழுது பேசிக்கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் பாண்டியன், தங்கமயிலுக்கு அறிவுரை சொன்னார். இருந்தாலுமே சரவணன்-தங்கமயில் மனமுடைந்து அழுது கொண்டே இருந்தார். இன்னொரு பக்கம் இந்த விஷயத்தை சுகன்யா, குமார் வீட்டில் சொன்னார். இதை கேட்டு சக்திவேல் ரொம்பவே சந்தோஷமாக இருந்தார்.
சரவணன் வீட்டிற்கு வரவில்லை என்று கோமதி கவலையில் இருந்தார்.

பின் வீட்டிற்கு வந்த சரவணன் இடம் செந்தில், கதிர் இருவரும் ஆறுதலாக பேசி இருந்தார்கள். பின் ரூமிற்கு சென்ற சரவணனிடம் தங்கமயில் ரொம்ப எமோஷனலாக அழுது பேசி இருந்தார். கோபத்தில் சரவணன், நீ பொய் பேசுவது என்ன புதுசா? குழந்தை விஷயத்தில் கூட என்னை பொய் சொல்லி ஏமாற்றி விட்டாயே. உன்னை நான் மன்னிக்கவே மாட்டேன். இனி நீ யாரோ நான் யாரோ என்று ரொம்ப மோசமாக திட்டி இருந்தார். இதையெல்லாம் கேட்டு உடைந்து போன தங்கமயில் எவ்வளவோ எடுத்து சொல்லி புரிய வைத்தார். ஆனால், சரவணன் கேட்கவே இல்லை.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் வீட்டில் தங்கமயில் எதார்த்தமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது கோமதி, நீ வெளியில் போகாதே, குழந்தையை பற்றி கேட்டு கஷ்டப்படுத்துவார்கள் என்றார். இன்னொரு பக்கம் குமார் திண்ணையில் படுத்து கொண்டிருந்தார். இதை பார்த்த குமாரின் குடும்பத்தினர் ரொம்பவே கஷ்டப்படுகிறார்கள். இது எல்லாம் பார்த்த அரசிக்குமே சங்கடமாக இருந்தது. பின் குமாரை சந்தித்த அரசி, நீ தேவை இல்லாமல் பழிவாங்கும் எண்ணத்தை விடு. நான் நன்றாக தான் இருக்கிறேன். என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள். நீ இப்படி இருப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்றெல்லாம் பேசி இருந்தார்.

நேற்று எபிசோட்:

இதைக் கேட்ட சக்திவேல், ராஜியை திட்டி என் மகன் மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்க சொல் என்று அனுப்பி விட்டார். அதற்குப்பின் தங்கமயில், தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று நடந்ததை சொன்னார் . இதைக் கேட்ட தங்கமயில் அம்மா, நீ தான் உன் கணவனை கைக்குள் வைக்க வேண்டும். தயவு செய்து இங்கு வந்து விடாதே என்று சொல்வதால் ரொம்ப வேதனையில் தங்கமயில் அழுதார். பின் தங்கமயில், சரவணன் போன் எடுக்கவில்லை என்று கடைக்குப் போனார். பின் சரவணன், தங்கமயில் திட்டி அங்கிருந்து அனுப்பி விட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சரவணன் திட்டியதால் வேதனையில் அழுது கொண்டு தங்கமயில் வீட்டிற்கு வந்து விடுகிறார். வீட்டில் அதை பெரிதாக காண்பிக்காமல் நார்மலாக தங்கமயில் பேசுகிறார். ஆனால், கோமதி கர்ப்பம் இல்லாத விஷயத்தை குத்தி காண்பது போல பேசுவதால் தங்கமயிலுக்கு இன்னும் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் டியூஷன் நடத்தும் இடத்தில் கதிரின் லோன் விஷயமாக ராஜி பேசுகிறார். அவர்களுமே உதவி செய்வதாக சொல்கிறார்கள். அதேபோல் கதிரின் நண்பர்களிடமும் லோன் விசயமாக ராஜி பேசுகிறார். பின் ராஜி-கதிர் இருவருமே வந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது லோன் விஷயத்தைப் பற்றி ராஜி சொல்கிறார். கோபத்தில் கதிர், நீ எனக்காக எங்கும் அலைய வேண்டாம்.

சீரியல் ட்ராக்:

யாரிடமும் உதவி கேட்காதே. என்னுடைய வேலையை எனக்கு பார்க்க தெரியும். நீ உன்னுடைய வேலையை மட்டும் பாரு என்று கோபமாக பேசுகிறார். இதனால் கோபப்பட்ட ராஜி, இனிமேல் நான் உன் விஷயத்தில் தலையிட மாட்டேன் என்று சொல்கிறார். அதற்கு பின் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு பழனி-சுகன்யா இருவருமே பைக்கில் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது டிராபிக் அதிகமாகுவதால் ஒரு இடத்தில் பழனி நிற்கிறார். அந்த இடத்தில் தான் சுகன்யாவின் முன்னாள் கணவன் நின்று கொண்டிருக்கிறார். அவரை பார்த்தவுடன் பயந்து போன சுகன்யா, இங்கிருந்து வண்டியை எடுங்கள் எடுங்கள் என்று பழனி இடம் செல்கிறார். பழனிக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால், சுகன்யா சொல்வதால் வண்டியை அங்கிருந்து எடுத்து சென்று விடுகிறார் பழனி. இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full