பிரச்சனையில் சிக்கி தவிக்கும் ராஜி, காப்பற்றுவாரா கதிர்? விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் குமார், அரசியை சந்தித்து மன்னிப்பு கேட்டார். ஆனால், அரசி எதுவுமே பேசவில்லை. இதையெல்லாம் பார்த்த சரவணன் கோபப்பட்டு குமாரை அடித்து விட்டு அரசியை அங்கு இருந்து அழைத்து சென்றார். இன்னொரு பக்கம் வீட்டில் டான்ஸ் காம்பிடிஷனில் கலந்து கொள்வதைப் பற்றி ராஜி சொன்னார். ஆனால், வீட்டில் யாருமே ஒத்துக்கொள்ளவில்லை. டான்ஸ் காம்பிடிஷனுக்கு அனுப்பாவிட்டால் நான் சாப்பிட மாட்டேன் என்று உண்ணாவிரதம் இருந்தார் ராஜி.
இதனால் பாண்டியன் கோபப்பட்டு ராஜியை திட்டி உன்னுடைய முடிவு. நீ என்ன வேணாலும் செய்து கொள் என்று சென்றார். அதற்குப் பின் கதிர், ராஜியை தனியாக அழைத்து சென்று சொல்லி புரிய வைத்தார். ஆனால், ராஜி ஏற்றுக் கொள்வதாகவே இல்லை. மறுநாள் காலையில் ராஜி தயாராகி வந்தார். அதை பார்த்த பாண்டியன், டான்ஸ் போட்டி பற்றி பேசாதே என்றார். அதற்கு ராஜி, அதை பற்றி தான் பேச வந்தேன் என்றார்.
ராஜி, கண்டிப்பாக நான் டான்ஸ் போட்டியில் கலந்து கொள்வேன் அடம் பிடித்தார். வீட்டில் உள்ள எல்லோருமே எவ்வளவோ எடுத்து சொல்லியுமே ராஜி கேட்கவில்லை.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பாண்டியன், எதுவாக இருந்தாலும் உன் முடிவு என்று கிளம்பி விட்டார். உடனே ராஜி சென்னைக்கு கிளம்பி இருந்தார். பின் கதிர்-ராஜி இருவரும் செல்லும் வழியில் வாக்குவாதம் ஏற்பட்டதால் கதிர், ராஜியுடன் சென்னை செல்லவில்லை. கதிர் கோபத்தில் வீட்டுக்கு வந்து விட்டார். இதை அறிந்த பாண்டியன் திட்டினார். இன்னொரு பக்கம் ராஜி சென்னைக்கு சென்று காம்பிடிஷன் நடக்கும் இடத்தில் தன்னுடைய பெயரை கொடுத்து போட்டியில் கலந்து கொண்டார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் டான்ஸ் போட்டியில் நடுவராக இருக்கும் ஒருவர், ராஜி உடன் சேர்ந்து நடனம் ஆட, அது பிடிக்காமல் ராஜி அங்கிருந்து வெளியே வந்து விட்டார். ராஜி என்ன செய்வது என்று புரியாமல் பயந்து கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து போன் செய்த கதிர், ஒன்னும் பிரச்சனை இல்லையா? என்று கேட்டார். அதற்கு ராஜி, எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். ராஜியை நினைத்து கதிர் ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் தங்கமயிலைபார்ப்பதற்காக அவருடைய அம்மா வீட்டிற்கு வந்திருந்தார்.
சீரியல் ட்ராக்:
அப்போது தங்கமயில், சொத்தை வித்து இரண்டு பங்காக செந்தில், கதிருக்கு கொடுக்கும் விஷயத்தை பற்றி சொன்னார். இதைக் கேட்டவுடன் தங்கமயில் அம்மா கோபப்பட்டு பேசி இருந்தார். இதையெல்லாம் பார்த்த சுகன்யாவும், தங்கமயிலுக்கு சாதகமாக பேசி இருந்தார். பின் தங்கமயிலின் அம்மா, தேவையில்லாத ஐடியாவை கொடுத்தார்கள். இன்னொரு பக்கம் ராஜி, பயத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்போது போட்டியில் கலந்து கொண்ட சிலர் அவருக்கு ஆறுதல் சொன்னார்கள்.
https://www.youtube.com/watch?v=5Fa_-ZutfbM
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் டான்ஸ் காம்பிடிஷனில் நடப்பது பிடிக்காமல் ராஜி அங்கு இருந்து கிளம்பப் பார்க்கிறார். உடனே அந்த நடுவர்கள் ராஜியை வலு கட்டாயமாக ரூமிற்கு அழைத்து சென்று இங்கே தான் இருக்கணும். எங்களை மீறி இனி போக முடியாது என்று கட்டாயப்படுத்திறார்கள். அந்த நேரத்திற்கு கதிரும் வந்து விடுகிறார். ராஜி ரூமிற்குள் இருந்து காப்பாற்றுங்கள் என்று கத்திக் கொண்டிருக்கிறார். கதிர் கதவை வேகமாக உடைத்துக் கொண்டு உள்ளே செல்கிறார். அப்போது ராஜியிடம் தவறாக நடந்த நபர்களை எல்லாம் அடித்து போட்டுவிட்டு அங்கிருந்து அழைத்துக் கொண்டு வருகிறார். பின் ராஜி தான் செய்த தவறை உணர்ந்து கதிரிடம் மன்னிப்பு கேட்கிறார்.