பணத்தை ரெடி பண்ண போராடும் கதிர்-செந்தில், பாண்டியனுக்கு தெரிய வருமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் கதிர், ராஜியை வெளியே அழைத்துச் செல்ல போனார். அப்போது கோமதி, எதற்கு? என்று கேட்டார். கதிர் ஏதேதோ காரணங்களை சொல்லி ராஜியை அழைத்துக் கொண்டு போனார். பின் ராஜியை அகாடமியில் சேர்த்து விட்டார் கதிர். அப்போது கதிர், எப்படியாவது ராஜி எஸ் ஐ ஆக வேண்டும். நீங்கள் தான் துணையாக இருக்க வேண்டும் என்று சொன்னார். உடனே அகாடமி பொறுப்பாளர், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார். பின் ராஜி, பீஸ் எப்படி கட்டினாய்? என்று கேட்டார். கதிர், நான் பார்த்துக் கொள்கிறேன். நீ தைரியமாக படி என்றார். அதற்கு பின் பாண்டியன், நீ அரிசியை எதற்காக கொடுமைப்படுத்துகிறாய்? அவளை நல்லபடியாக நடத்து.
இத்தனை வருடத்தில் முத்துவேல் என்னை பார்த்துக் கூட பேசியதில்லை. தன் மகளுக்காக மனம் உடைந்து பேசுகிறார் என்று சொன்னார். கதிர், நான் எதுவுமே செய்யவில்லை என்று சொல்லியுமே பாண்டியன் நம்பவில்லை கதிரை தான் திட்டி இருந்தார். பின் இதைப்பற்றி கதிர், ராஜிடம் பேசி இருந்தார். அப்போது ராஜி, நான் தான் குமாரை சந்தித்து பேசினேன். ஆனால், குமார் நான் சொல்வதை கேட்கவில்லை. அதற்கு பிறகு என்னுடைய அப்பாவை சந்தித்து நீங்கள் அரசியை ஒழுங்காக பார்த்துக் கொண்டால் என்னையும் அந்த வீட்டில் நன்றாக பார்த்துக் கொள்வார்கள். இல்லை என்றால் நான் கஷ்டப்பட வேண்டி இருக்கும் என்று சொன்னேன். அதனால்தான் அவர் அப்படி பேசி இருக்கிறார் என்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் மீனா- செந்தில் இருவருமே பணத்தைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள். அப்போது செந்தில், வேலை கிடைத்த உடனே நான் உண்மையை அப்பாவிடம் சொல்லி விடுகிறேன். நீ எதைப் பற்றியும் யோசிக்காதே என்று சொன்னார். அதற்கு மீனா, எனக்கு ஏதோ பிரச்சனையில் மாட்டியது போலவே தோன்றுகிறது என்றார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து அரசிக்கு மாப்பிள்ளை பார்த்த வீட்டில் இருந்து அவருடைய அம்மா- அப்பா வருகிறார்கள். அவர்கள் சரியாக முகம் கொடுத்து கூட பாண்டியனிடம் பேசவில்லை. கேவலமாக பாண்டியன் குடும்பத்தை பற்றி பேசி இருந்தார்கள்.
நேற்று எபிசோட்:
பின் அவர்கள், இந்த திருமணத்திற்காக நாங்கள் பத்து லட்சம் செலவு செய்து இருக்கிறோம். நீங்கள் தான் கொடுக்கணும் என்று சொன்னார். இதை கேட்டவுடன் கோமதி, பாண்டியன் ஷாக் ஆனார்கள். மற்றவர்கள் எடுத்துச் சொல்லியுமே மாப்பிள்ளையின் அம்மா, அப்பா இருவரும் கேட்கவில்லை. எங்கள் பணத்தை எடுத்து வையுங்கள் என்று ரொம்ப காரராக பேசி இருந்தார்கள். அதனால் பாண்டியன், நான் பணத்தை சீக்கிரமாகவே கொடுத்து விடுகிறேன் என்று சொன்னார். பின் பாண்டியன், செந்திலிடம் பணத்தை பேங்கில் இருந்து எடுத்து வர சொன்னார். மீனா- செந்தில் இருவருக்குமே என்ன செய்வதென்று புரியவில்லை. பயத்தில் செந்தில் புலம்பி கொண்டிருந்தார். பின் கடையில் செந்தில்- கதிர் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் செந்தில், அப்பா கொடுத்த பணத்தை கொண்டு போய் மீனா அப்பாவிடம் கவர்மெண்ட் வேலைக்காக கொடுத்து விட்டேன். பணம் பேங்கில் போடவில்லை என்று சொல்கிறார். இதைக் கேட்டவுடன் கதிர் ஷாக் ஆகிறார். செந்தில், என்ன செய்வது என்றே புரியவில்லை. அப்பாவிடம் நான் மாட்டிக் கொண்டேன் என்று ரொம்பவே பதறுகிறார். உடனே கதிர், ஏதாவது செய்யலாம் தைரியமா இருங்கள். நாம் அத்தை இடம் பேசலாம் என்று இருவருமே மாப்பிள்ளையின் அம்மாவிடம் பேச போகிறார்கள். ஆனால், அவர்கள் வீட்டில் இல்லை. உடனே கதிர் போன் செய்து பேசுகிறார். ஆனால், அவர் என்ன சொல்ல வருகிறார் என்று கூட கேட்காமல் திட்டி போனை வைத்து விடுகிறார். இதனால் செந்திலுக்கு இன்னும் பயம் அதிகமாகின்றது.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் போன் செந்திலுக்கு போன் செய்த மீனா, உங்கள் அத்தை ஒத்துக் கொள்வார் என்று எப்படி நினைத்தீர்கள். தேவையில்லாமல் பிரச்சனையில் மாட்டிக் கொண்டீர்கள். தயவு செய்து ஏதாவது செய்யுங்கள் என்று சொல்கிறார். பின் பாண்டியனும் செந்திலுக்கு போன் செய்கிறார். அப்போது பாண்டியன், பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சீக்கிரம் வா என்று சொல்கிறார். உண்மையை சொல்ல முடியாமல் கதிர்- செந்தில் இருவருமே தவிக்கிறார்கள். இன்னொரு பக்கம் தங்கமயில், சரவணனை பார்க்க அவர் வேலை செய்யும் இடத்திற்கு போகிறார். சரவணன், எதற்காக இங்கே வந்தாய்? வீட்டிற்கு கிளம்பு என்று சொல்கிறார். தங்கமயில், எனக்கு அல்வா சாப்பிட வேண்டும் என்று இருக்கிறது. எனக்கு நீங்களே வந்து வாங்கி கொடுங்கள் என்று சொல்கிறார். சரவணன் வேறு வழியில்லாமல் அமைதியாக கிளம்புகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது