ராஜியின் லட்சியத்திற்க்காக எல்லோரையும் எதிர்த்து நிற்கும் கதிர், பயத்தில் தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 18/1/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் பாண்டியன், பழனியை அவர் வீட்டிற்கு போக சொன்னார். ஆனால், பழனி முடியாது என்று மறுத்தார். உடனே கோபத்தில் பாண்டியன், பழனியை திட்டி விட்டார். வீட்டில் எல்லோருமே கண் கலங்கி பழனிக்கு சப்போர்ட் செய்தார்கள். ஆனால், பாண்டியன் யார் சொல்வதையும் கேட்கவில்லை. பின் மனம் இல்லாமல் பழனி அங்கிருந்து கிளம்பினார். தன் அண்ணன்கள் வீட்டிற்கு பழனி போனார். அப்போது அவருடைய அண்ணன்கள், பழனியை பார்த்து நக்கலாக பேசி இங்கேதான் இருக்கணும் கிளம்பக்கூடாது என்று சொன்னார்கள்.

பழனிக்கு மனதே இல்லை. அவருடைய நினைப்பு முழுவதுமே பாண்டியன் வீட்டின் மேல் தான் இருக்கிறது. அப்போது மாரி, பாண்டியனிடம் அப்பத்தா சொன்ன விஷயத்தை சொன்னவுடன் பழனி, ஷாக் ஆகி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். பழனிக்கு தன்னுடைய அண்ணன்கள் வீட்டில் இருக்க முடியாமல் பாண்டியன் வீட்டிற்கு வந்து விடுகிறார். பாண்டியனும் எதுவும் சொல்லாமல் ஏற்றுக்கொள்கிறார். வீட்டில் உள்ள எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள். நேற்று எபிசோட்டில் ப்ராக்டிஸ் செய்ய கதிர்- ராஜி இருவருமே கிரவுண்டுக்கு சென்று இருந்தார்கள். அங்கு பாண்டியன் கடை விஷயமாக ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அப்போது அவர், உங்கள் மருமகள் போலீஸாக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு தெரியாதா? என்று கேட்டவுடன் பாண்டியன் ஷாக் ஆனார். பின் இருவருமே கிரவுண்டில் பயிற்சி எடுத்திருப்பதை பார்த்து கோபப்பட்டு அங்கிருந்து பாண்டியன் கிளம்பி விட்டார். பின் அவர், வீட்டில் எல்லோரிடமும் நடந்ததை சொல்ல, என்ன செய்வது? என்று புரியாமல் எல்லோருமே அமைதியாக இருந்தார்கள். அந்த சமயம் பார்த்து கதிர்-ராஜி வீட்டிற்கு வந்தார்கள். அப்போது அவரிடம் நடந்ததை பாண்டியன் கேட்க, கதிர் உண்மை எல்லாம் சொன்னார்.

நேற்று எபிசோட்:

உடனே பாண்டியன், போலீஸ் வேலை தேவையில்லை. வேறு ஏதாவது வேலை செய் என்று சொன்னார். அதற்கு கதிர், முடியாது. அது ராஜியின் கனவு. நான் அவளுக்கு உறுதுணையாக நிற்பேன். யார் எது சொன்னாலும் கேட்க மாட்டேன் என்று தன்னுடைய தந்தையிடம் எதிர்த்து பேசி இருந்தார். பின் கதிர்- பாண்டியன் இருவருக்குமே வாக்குவாதம் முற்றியது. இதை எல்லாம் பார்த்த ராஜி, நான் போலீஸ் ஆகவில்லை என்று கதிரிடம் சொல்ல, அவர் கோபப்பட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கதிர், ராஜிக்கு எடுத்த சொல்லி புரிய வைக்கிறார். ராஜியும் தான் போலீசாகும் கனவில் உறுதியாக இருக்கிறார். அந்த சமயம் வந்த கோமதி, பாண்டியனுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார். உடனே கோபத்தில் கதிர், எனக்கு பிடிக்காத கல்யாணத்தை செய்து வைத்தாய். ராஜியின் கனவை அழிக்கப் பார்க்கிறாய். எங்களுடைய விருப்பத்தை யோசிக்க மாட்டீர்களா? என்று கேட்டவுடன் கோமதியால் எதுவுமே பேச முடியவில்லை. அங்கு இருந்து கிளம்பி விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

பின் ராஜி, கதிர் தனக்காக சப்போர்ட் செய்து பேசுவது எல்லாம் நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறார். இதை எல்லாம் பார்த்த மீனா, லவ் வந்துவிட்டதா? என்று கேட்க, ராஜி ஆமாம் என்கிறார். இன்னொரு பக்கம் பள்ளியில் தங்கமயில், பிள்ளைகளுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது தலைமை ஆசிரியர், டூப்ளிகேட் சர்டிபிகேட் கொடுக்க வேண்டும் என்று சொன்னவுடன் அவர் ரொம்பவே பயப்படுகிறார். பின் மீனா வேலை செய்யும் இடத்திற்கு அவருடைய அம்மா வந்திருக்கிறார். அவர் பொங்கல் சீராக பணத்தை கொடுத்து நகை வாங்க சொல்கிறார். ஆனால், மீனா வாங்கவே இல்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full