கோர்ட்டில் நடக்கும் குமார் கேஸ், அரசி சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியான சக்திவேல் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியனுக்கு கால் வழி என்பதால் அவரை அரசி பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டார். இன்னொரு பக்கம் கோமதியை கோவிலுக்கு அப்பத்தா வர சொன்னார். பின் கோவிலில் அப்பத்தா, குமார் நிலைமையை பற்றி எடுத்து சொல்லி கேஸை வாபஸ் வாங்க சொன்னார். உடனே கோமதி கோபப்பட்டு தன் அம்மாவை திட்டினார். இருந்தாலும் விடாமல் அப்பத்தா, குமார் கேஸை பற்றி தான் பேசி கொண்டு இருந்தார். கடைசியில் ராஜி, ஹோட்டலை விட்டு கிளம்ப பார்த்தார். அந்த சமயம் பார்த்து நடுவர்கள் அங்கு வந்து விட்டார்கள்.
ராஜியை போகவிடாமல் அந்த நடுவர்கள் எல்லோருமே அவரை ரூமில் அடைத்து வைத்தார்கள். ராஜி எவ்வளவோ கத்தி கதறி அழுதும் அவர்கள் கேட்கவில்லை. பின் அந்த நடுவர்கள், பணத்தை 10 லட்சம் கொடு இல்லையென்றால் நாங்கள் சொல்வதை செய் என்று மிரட்டினார்கள். அந்த சமயம் பார்த்து சரியாக கதிர் வந்து விட்டார். ஒவ்வொரு ரூமாக கதிர், ராஜியை தேடினார். உடனே ராஜியின் வாயை மூடினார்கள். இருந்தாலுமே கதிர் என்று ராஜி கத்தினார். அதைக் கேட்டவுடன் கதிர்
அந்த ரூமிற்கு வந்து கதவை உடைத்து ராஜியை காப்பாற்றினார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அப்போது ராஜி, இவர்கள் நல்லவர்களே கிடையாது, கெட்டவர்கள் தெரியாமல் வந்து விட்டேன். என்னை மன்னித்துவிடு என்று ரொம்ப எமோஷனலாக அழுதார். கதிர், ராஜி நிலைமையை புரிந்து கொண்டு அங்கிருந்த ஆட்களை எல்லாம் அடித்து போட்டு அங்கிருந்து அழைத்து வந்தார். இன்னொரு பக்கம் குமாரின் கேஸ் விஷயமாக கோமதி, பாண்டியனிடம் பேசினார். அதற்குள் பாண்டியன் திட்டுவதால் பயந்து கொண்டு உண்மை எதுவும் சொல்லாமல் கோமதி சென்று விட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜி, டான்ஸ் போட்டியில் நடந்ததை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். கதிர் அவருக்கு ஆறுதல் சொல்கிறார். அதற்குப்பின் ராஜி செய்த வேலைக்காக திட்டிய கதிர், இனி எனக்காக எதுவும் செய்யாதே என்று சொல்கிறார். அதற்கு பின் ஒரு ஓட்டலில் கதிர்- ராஜி இருவரும் சாப்பிடுகிறார்கள். அப்போது கதிர், ராஜி பற்றி தன் மனதில் இருக்கும் எண்ணத்தை எல்லாம் அவருடைய கையை பிடித்து சொல்கிறார். இதைக் கேட்டு ராஜி எமோஷனலாக அழுகிறார். கிட்டத்தட்ட கதிர், ராஜியை காதலிக்கும் விஷயத்தை சொல்கிறார். அதற்குப்பின் இருவருமே வீட்டிற்கு சந்தோஷமாக வருகிறார்கள்.
https://www.youtube.com/watch?v=fBLD2XD9Fxo
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் கோர்ட்டில் குமார்-அரசி கேஸ் நடக்கிறது. அப்போது குமார், அரசி சொன்னது எல்லாமே உண்மைதான். நான் செய்தது தவறு. அதற்கு என்ன தண்டனை கொடுத்தாலும் பரவாயில்லை என்று வருத்தப்பட்டு பேசுகிறார். இதைக் கேட்ட அரசி, எனக்கு நடந்தது பெரிய துயரமான விஷயம் தான். தப்பு செய்தவன் தப்பை ஒத்துக் கொள்ளணும் என்று நினைத்தேன். அது நடந்து விட்டது. அதுக்காக நான் இந்த கேசை வாபஸ் வாங்குகிறேன் என்று சொல்கிறார். இதைக் கேட்டவுடன் கோமதி, பாண்டியன், சக்திவேல், குமார் எல்லோருமே ஷாக் ஆகிறார்கள்.