குமாரின் நிச்சயதார்த்தில் நடந்த கலவரம், மீனா கேட்ட கேள்வியால் ஆடிப்போன சரவணன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 26/2/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் காந்திமதி, கோயிலுக்கு போனார். அங்கு பெண் வீட்டாரை காந்திமதி வர வைத்தார். அப்போது காந்திமதி, குமார்- அரசி விஷயத்தை பற்றி சொல்கிறார். அதுமட்டுமில்லாமல் குமார் இன்னும் அரசியை காதலிப்பதாகவும் அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கப் போவதாகவும் சொன்னார். இதைக் கேட்டு பெண் வீட்டார் ஷாக் ஆனார்கள். பின் காந்திமதி, இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லி கேட்டார். அவர்கள் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்கள்.

வீட்டிற்கு வந்த பாண்டியன், தண்ணீர் வேண்டும் என்று கேட்டார். ஆனால் கோமதி கண்டுகொள்ளாமல் இருந்தார். பின் பாண்டியன் தண்ணீர் குடித்துவிட்டு சாப்பாடு எல்லாம் போட்டு சாப்பிட்டார். அதை பார்த்து கோமதி அமைதியாகவே இருந்தார். பாண்டியன் பயங்கரமாக கோமதி மீது கோபப்பட்டார். இன்னொரு பக்கம் கோவிலில் மீனா- தங்கமயில் இருவரும் பேசிக் கொண்டார்கள். தங்கமயில், வேலை செய்வதை பற்றி ரொம்ப சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அந்த சமயம் பார்த்து செந்தில் போன் செய்தார். மீனா, ஏதோ சொல்லி சமாளித்து விட்டார். பின் அஞ்சலி, சரவணனுக்கு ஃபோன் செய்து கோயிலுக்கு வர சொன்னார். பின் அஞ்சலி-சரவணன் இருவரும் மீனா- தங்கமயில் இருக்கும் கோவிலுக்கு வந்து விட்டார்கள். அஞ்சலி-சரவணன் இருவரும் ஒன்றாக இருப்பதை பார்த்து மீனா ஷாக் ஆனார். தங்கமயில், அவர்களை பார்க்கக்கூடாது என்பதற்காக ஏதேதோ காரணம் சொல்லி கோவிலை விட்டு மீனா அழைத்து சென்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன் வீட்டிற்கு வந்த பழனி, குமாருக்கு பெண் பார்த்து இருக்கிறார். குமாருக்கு திருமண ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார். இதை கேட்டு ராஜி சந்தோஷப்படுகிறார். ஆனால், பாண்டியன் அது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கோமதி, அவர்கள் வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் எனக்கு கவலை இல்லை என்று சொல்லி விடுகிறார். இன்னொரு பக்கம் முத்துவேல் வீட்டில் நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. வீட்டில் எல்லோருமே சந்தோசமாக இருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அப்போது வந்த பெண் வீட்டார் குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதா? என்று குமார்- அரசி விஷயத்தை பற்றி கேட்கிறார்கள். சக்திவேல் அப்படியெல்லாம் இல்லை என்று எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். இருந்தாலும் பெண் வீட்டார் கேட்கவில்லை. கடைசியில் இந்த திருமணம் வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்கள். குமார் உள்ளுக்குள் சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் மீனா, சரவணன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அஞ்சலி பற்றி மீனா விசாரிக்கிறார். அதற்கு சரவணன், அவர் என்னுடைய தோழி. என் கஷ்டத்தை எல்லாம் சொல்ல ஆள் தேவை இல்லையா? அப்படி ஏதாவது என் வாழ்க்கையைப் பற்றி நான் யோசிக்க நினைத்தாலும் தவறு கிடையாது. மயில் செய்த தப்புக்கு முன்னாடி இதெல்லாம் ஒன்றும் இல்லை என்கிறார். இதனால் மீனா ஷாக்கில் இருக்கிறார்

behindtalkies AMP · Quick view
View full