மீண்டும் அரசியை தனியாக சந்தித்து பேசும் குமார், பாண்டியனுக்கு தெரிய வருமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 20/9/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன், நீயும் உன் குடும்பமும் செய்த வேலை எல்லாம் நான் வீட்டில் சொல்லட்டுமா? இன்னைக்கு பஞ்சாயத்து வைத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் சொல்வதால் தங்கமயில் எதுவும் சொல்லாமல் அமைதியானார். அடுத்த நாள் காலையில் பாண்டியன் வீட்டிற்கு மீனா அப்பா- அம்மா வந்தார்கள். அப்போது பாண்டியன், மீனா செந்திலுக்காக பணம் கொடுத்து உதவி செய்ததை பற்றி ரொம்ப பெருமையாக பேசினார். உடனே மீனாவின் அப்பா, நக்கலாக பாண்டியனை குடும்பத்தை பேசினார்.

நேற்று எபிசோட்டில் பாண்டியன், லோன் போட்டு தந்த பத்து லட்சம் ரூபாய் செக்கை மீனாவிடம் கொடுத்தார். இதை பார்த்து மீனாவின் அப்பா, அம்மா எதுவும் சொல்லவில்லை. செந்தில் அமைதியாக இருந்தார். அதற்குப்பின் கதிரை அழைத்து டிராவல்ஸ் ஆரம்பிக்க பாண்டியன் பணம் கொடுத்தார். இதை எல்லாம் பார்த்து தங்கமயிலுக்கு கடுப்பானது. அதற்குப்பின் ராஜி- கதிர் இருவருமே டிராவல்ஸ் ஆரம்பிக்க இடத்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது சரவணன், தனக்கு தெரிந்த இடத்தை காண்பித்தார். அதைப் பார்த்த உடனே ராஜி-கதிர் இருவருக்குமே பிடித்து போனது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பின் டிராவல்ஸ் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்தார்கள். பின் கதிர் ஸ்வீட் கொடுத்து டிராவல்ஸ் ஆரம்பிக்கும் விஷயத்தைப் பற்றி சொன்னார். அதை கேட்டு கோமதி- பாண்டியன் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். இன்னொரு பக்கம் செந்தில், என்னுடைய அப்பா பணத்தை திருப்பி கொடுத்ததற்கு செலிப்ரேட் பண்ணலாம் என்றார். உடனே மீனா, பணத்தை கொடுக்கும் போது மாமா அதற்கு பதில் நிலத்தை வாங்கணும் என்று சொன்னாரே, அது நினைவில் இருக்கிறதா. சொந்தமாக நிலம் வாங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அப்பத்தா, அரசி எங்கே செல்கிறார்? என்று விசாரிக்கிறார். அதற்கு சுகன்யா, காலேஜ் திறந்து விட்டது. அதனால் தான் அரசியை விட குடும்பத்துடன் சென்றிருக்கிறார்கள் என்கிறார். இன்னொரு பக்கம் கல்லூரியில் பாண்டியன் அறிவுரை சொல்கிறார். தங்கமயில், கதிர் எல்லோருமே அரசிக்கு தைரியம் சொல்லி அனுப்புகிறார்கள். அரசி சந்தோஷமாக கல்லூரிக்கு செல்கிறார்.
இன்னொரு பக்கம் வீட்டில் செந்தில், பாண்டியன் மாறியதற்கு தான் காரணம் என்று தம்மட்டம் அடித்துக் கொள்கிறார். இதனால் கோமதி, செந்தில் வாயில் உப்பு அல்லி போடுகிறார்.

சீரியல் ட்ராக்:

பின் வீட்டில் எல்லோருமே சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் அரசியை பார்ப்பதற்காக குமார் கல்லூரிக்கு சென்று இருக்கிறார். குமாரை பார்த்து கோபத்தில் அரசி திட்டுகிறார். அப்போது குமார், எங்கு பார்த்தாலும் உன் ஞாபகமாகத்தான் இருக்கிறது. உனக்கு செய்த துரோகம் தான் என் கண்முன் வருகிறது. அந்த குற்ற உணர்ச்சியில் இருந்து வெளிவர நினைக்கிறேன் என்றெல்லாம் பேசுகிறார். அதற்கு அரசி, நீ என்னை விட்டாலே அதுவே போதும். தயவு செய்து இங்கிருந்து போ என்று எல்லாம் திட்டி விட்டு செல்கிறார். குமார் வேதனையில் அழுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full