சக்திவேலின் கேவலமான புத்திக்கு மாரி கொடுத்த பதிலடி, முத்துவேல் நிலைமை? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 15/5/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சுரேஷ், தன்னுடைய அப்பா- அம்மாவை ஒரு அறையில் ஓய்வு எடுக்க சொல்லி அனுப்பி வைத்தார். பின் எல்லா ஜோடிகளுமே ஜாலியாக அந்த பார்க்கில் உள்ள எல்லா விளையாட்டிலும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். கோமதியும் அதை பார்த்து சந்தோஷப்பட்டார். ராஜி, கதிருக்கு போன் செய்து விசாரித்தார். கதிர் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். ராஜி, நீ சென்னையில் தானே இருக்கிறாய் என்று சொல்கிறார். கதிர், இல்லை என்றார். அதற்குப்பின் அங்கு பாட்டு போட்டி நடக்கிறது. அதில் கோமதி கலந்து கொண்டு சூப்பராக பாடினார். பின் மலரும் பாடுவதற்காக மேடை ஏறினார்.

மலர் பாடி கொண்டிருப்பதை அவருடைய மாமியார் பார்த்து விட்டார். என்ன நடக்குமோ என்று மலர் பயந்து கொண்டிருந்தார். மலர் மாமியார், கோவமாக எல்லோரையும் திட்டிக் கொண்டிருந்தார். சுரேஷ் ஏதேதோ சொல்லி சமாளித்தார். மலரின் மாமியார் வீட்டுக்கு கிளம்பலாம் என்றார். பாக்யராஜ், பீச்சுக்கு மட்டும் போகலாம் என்றார். அதற்குப்பின் மலரின் மாமியார் மாமனார் இருவரும் பஸ்ஸில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் எல்லோருமே பீச்சில் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் முத்துவேல் ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து சென்றார்கள்.

சீரியல் ட்ராக்:

கதிர், அதை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டார் . பின் மலர் குடும்பம் எல்லோருமே விளையாடி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார்கள். வழக்கம்போல மாமியார், மலரை வேலை வாங்கிக் கொண்டிருந்தார். அதை பார்த்து கோமதி கடுப்பாகி எழுந்து சென்றார். இன்னொரு பக்கம் கதிர் மாத்திரை வாங்குவதற்காக வெளியே வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு பைகாரன் அவர் மீது மோதி கீழே விழுதார். இதனால் அந்த பைக் காரனுக்கும் கதிருக்கும் இடையே சண்டை நடக்கிறது. அந்த இடத்திற்கு வந்த சுரேஷ், கதிருக்கு சப்போர்ட் செய்து பேசி அவரை அனுப்பி வைத்தார். ராஜியின் கணவர் தான் கதிர் என்று சுரேஷுக்கு தெரியாது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மலர் வீட்டில் எல்லோருமே ஜாலியாக பேசி கார்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நல்லவேளை அந்த நேரத்தில் மலரின் மாமியார் இல்லை. அதனால் எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் முத்துவேலுக்கு நல்லபடியாக ஆபரேஷன் முடிந்து விடுகிறது. இருந்தாலும் இன்னும் சில ஆபரேஷன்கள் இருப்பதால் முத்துவேல் கொஞ்சம் பயப்படுகிறார். கதிர், அவருக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்கிறார். பின் முத்துவேல்- கதிர் இருவருமே தங்களுடைய குடும்பங்களை பற்றி பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு சந்தோஷப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் சக்திவேல், கதிர்- முத்துவேலை பற்றி தவறாக பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:

அதோடு கதிருக்கு அண்ணன் பணம் அனுப்பி இருக்கிறார். என்ன நடக்கிறது? என்று ஒன்றுக்கு இரண்டாக பேசுகிறார். இதனால் கோபப்பட்ட மாரி, என்னுடைய கணவரைப் பற்றியும் தெரியும் கதிரை பற்றியும் தெரியும். நீங்கள் தேவையில்லாமல் இருவரையும் பேசாதீர்கள். அப்படியே அவர் பணம் கொடுத்திருந்தாலும் அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்கிறார். கோமதி எல்லா மருமகளுடன் சேர்ந்து உதவி செய்து கொண்டு இருக்கிறார். அதை பார்த்து வழக்கம் போல மலரின் மாமியார் கோபப்படுகிறார். இன்னொரு பக்கம் டூர் போனதை பற்றி ரேவதியிடம் மலர் போனில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது தங்கராஜை பற்றி கிண்டல் அடித்து ரேவதி பேசுகிறார். இது எல்லாம் கவனித்த தங்கராஜ் பயங்கரமாக கோவப்பட்டு ரேவதி இடம் சண்டை போடுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full