கோமதி செய்த வேலையால் மலர் ஹாப்பி அண்ணாச்சி , உண்மை சொன்னாரா கதிர்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 18/5/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இருவரையும் பேசாதீர்கள். அப்படியே அவர் பணம் கொடுத்திருந்தாலும் அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்றார். இன்னொரு பக்கம் டூர் போனதை பற்றி ரேவதியிடம் மலர் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தங்கராஜை பற்றி கிண்டல் அடித்து ரேவதி பேசி இருந்தார். இது எல்லாம் கவனித்த தங்கராஜ் பயங்கரமாக கோவப்பட்டு ரேவதி இடம் சண்டை போட்டார்.

தங்கராஜ்- ரேவதி இருவரையும் கோமதி சாப்பிட வீட்டிற்கு அழைத்திருந்தார். தடபுடலாக கோமதி விருந்து ஏற்பாடு செய்தார். எல்லா மருமகள்களுமே கோமதிக்கு உதவி செய்தார்கள். அதை பார்த்து மலரின் மாமியாருக்கு கோபம் தான் வருகிறது. சாப்பாடு ரெடியான உடன் எல்லோருக்குமே கோமதி பரிமாறுகிறார். அதை சாப்பிட்டு பார்த்து தங்கராஜ் வாயடைத்து போனார். மலரின் மாமனார், மாமியார் இருவருமே சமையலை பாராட்டினார்கள். ரொம்ப அருமையாக இருக்கிறது என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள். கோமதிக்கு சந்தோஷமாக இருந்தது. அதற்குப்பின் வேலை எல்லாம் முடித்துவிட்டு கோமதி மருமகள்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அந்த சமயம் பார்த்து கரண்ட் ஆஃப் ஆகிவிடுகிறது. இதனால் எல்லோருமே ஜாலியாக கதை பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது வெளியே இருந்த தங்கராஜ், வீட்டில் சிரிக்கும் சத்தத்தை கேட்டு உள்ளே வந்தார். அப்போது ஆண்களை விட பெண்கள்தான் சிறந்தவர்கள் என்பது போல கோமதி, மதி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இதை கேட்டு தங்கராஜிக்கு கோபம் வருகிறது. பின் தங்கராஜ், நீங்கள் எப்படி ஆண்களை கேவலமாக பேசலாம் என்று வழக்கம்போல தன்னுடைய ஆணாதிக்கத்தை காண்பித்தார். வீட்டில் உள்ள பெண்கள் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார்கள். இதை எல்லாம் பார்த்து கோமதிக்கு கோபம் தான் வருகிறது.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்று எபிசோட்டில் கோமதி, மலர், ராஜி எல்லோருமே சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வாக்கிங் போவதை பற்றி கோமதி பேசுகிறார். மலரின் மாமியார், என்னால் முடியாது என்று சொல்கிறார். பின் மலர், மீனா இருவரும் கிச்சனில் சமைக்க போகிறார்கள். மதி, மலரின் மாமனார் மாமியார் எல்லோருமே நடக்க செல்கிறார்கள். அதற்குப்பின் மலர் மாமனார், மாமியார் வந்தவுடன் மலர் சிட்டுக்குருவியாக வேலை செய்து கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் ராஜி, கதிரை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதனால் கோமதி, கதிருக்கு போன் செய்து விசாரிக்கிறார். அப்போது கதிர், எனக்கு ரொம்ப நெருக்கமானவருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் தான் சென்னைக்கு ஹாஸ்பிடல் வந்திருக்கிறேன். ஆனால், இதை சொன்னால் ராஜி நேரில் வருகிறேன் என்று சொல்வாள். அதனால் தான் உண்மையை சொல்லவில்லை என்கிறார். அதற்குப்பின் மலரின் மாமியார் குலதெய்வ கோவிலுக்கு போவதற்காக மதி வீட்டில் சொல்கிறார். கோமதி, மலரின் அம்மாவையும் கூப்பிடுங்கள் என்று கட்டாயப்படுத்தி போன் பேச வைக்கிறார். விருப்பம் இல்லாமல் மாமியாரும் மலர் உடைய அம்மாவை அழைக்கிறார். இதையெல்லாம் பார்த்து மலருக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பின் கோமதியை கட்டி அணைத்து எமோஷனலாக மலர் நன்றி சொல்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full