பழனியை அவமானப்படுத்தும் மாணிக்கம், முத்துவேல் சொன்ன வார்த்தை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மீனா, வீட்டை விட்டு வெளியே போக எடுத்த முடிவு செந்தில் தான். அவர் வெளியே போய் கஷ்டப்பட்டால் தான் உங்களுடைய அருமை புரியும் என்றார். அதற்கு பாண்டியன், எப்போதும் உனக்காக நாங்கள் சப்போர்ட் செய்வோம் என்று ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் செந்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது கோமதியை பார்த்து ட்ராமா செய்கிறாய் என்று செந்தில் சொல்வதால் அவர் ரொம்பவே உடைந்து போய் செந்திலை திட்டி விட்டார்.
நேற்று எபிசோட்டில் செந்தில், மீனாவின் அப்பா- அம்மாவை சந்தித்து குவாட்டரசுக்கு செல்வதைப் பற்றி பேசினார். அதற்கு மீனாவின் அப்பா, உங்கள் வீட்டில் சம்மதித்தார்களா? மீனா ஒத்துக் கொண்டார்களா? என்றார். அதற்கு செந்தில், மீனாவிற்கு முழு மனது இல்லை. இருந்தாலும் எனக்காக வருகிறேன் என்று ஒத்துக் கொண்டார். ஆனால், எங்கள் வீட்டில் பேசிவிட்டேன். அவர்கள் எதுவும் சொல்லவில்லை. நாளை பால் காய்ச்சப் போகிறேன். நீங்களும் வந்து விடனும் என்று சொல்வதால் மீனாவின் அப்பா- அம்மா சந்தோஷப்பட்டார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இன்னொரு பக்கம் சுகன்யா, சக்திவேல் வீட்டிற்கு சென்று மீனா-செந்தில் இருவரும் தனியாக போவதை பற்றி சொன்னார். அப்போது வீட்டில் உள்ள எல்லோருக்குமே ஷாக்காக இருந்தாலும் சக்திவேல் ரொம்ப சந்தோஷப்பட்டார். பின் அப்பத்தாவின் 75வது பிறந்தநாள் வருவதால் அதை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று முத்துவேல் சொன்னார். இன்னொரு பக்கம் கடையில் தங்கமயில், முட்டையை மடித்து தருவதாக சொல்லி தெரியாமல் விழித்து நின்றார். அந்த சமயம் வந்த மாணிக்கம், முட்டையை நான் மடிக்கிறேன் என்று வாங்கி உடைத்து விட்டார். இதை பார்த்து சரவணனுக்கு பயங்கர கோபம் வந்தது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சரவணன், உங்களுக்கு தெரியாத வேலை எல்லாம் எதற்காக செய்கிறீர்கள் என்று கோவப்படுகிறார். உடனே மாணிக்கம், முட்டை ஓடு லேசாக இருந்தது என்று ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். தங்கமயில், அந்த இடத்தை சுத்தம் செய்ய போகிறார். உடனே மாணிக்கம், பழனி பழனிவேல் செய்து விடுவார். நீ அமைதியாக இரு என்று சொல்வதால் சரவணனுக்கு இன்னும் கோபம் ஆகிறது. ஆனால், பழனி எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின் நிறைய ஆர்டர் இருப்பதால் சரவணன் கிளம்ப போகிறார். மாணிக்கம், பழனி செய்யட்டும் என்று அவரை ஒரு வேலைக்காரர் போல சொல்கிறார். இதெல்லாம் பார்த்து சரவணனுக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. இன்னொரு பக்கம் கதிர் டிராவல்ஸ்க்கு பாண்டியன் செல்கிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது அவர் டிராவல்சை பற்றி எல்லாம் விசாரிக்கிறார். இன்னொரு பக்கம் சக்திவேல் வீட்டிற்கு பழனி சென்று இருக்கிறார். அப்போது முத்துவேல், புதிதாக மளிகை கடை ஆரம்பித்து தருகிறோம். அதை பார்த்துக்கொள் என்று சொல்கிறார்கள். பழனிவேல் ஷாக்கில் அதெல்லாம் வேண்டாம் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய அப்பா-அம்மாவை பார்க்க சென்றிருக்கிறார். அப்போது அவர்கள் புது வீட்டிற்கு போவதை பற்றி பேசுகிறார்கள். ஆனால், வழக்கம் போல மீனா அதில் விருப்பம் இல்லாத போலவே பேசுகிறார். இருந்தாலும் அவருடைய அப்பா- அம்மா கேட்கவில்லை. செந்திலைப் போலவே அவர்களும் மீனாவை கட்டாயப்படுத்துகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.