குமாரின் வாழ்க்கைக்காக போராடும் மாரி, ராஜி என்ன செய்ய போகிறார்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கிச்சனில் கோமதி, தங்கமயில், சுகன்யா மூவருமே சமைத்துக் கொண்டிருந்தார்கள். மீனா வேலைக்கு நேரம் ஆகிறது என்று கிளம்புவதால் சுகன்யா வழக்கம் போல் வம்பு இழுத்து மீனாவை பேசி இருந்தார். இதனால் மீனாவும் பதிலடி கொடுத்தார். அதற்குப்பின் பாண்டியன் கீழே விழுந்ததால் அவருக்கு அடிபட்டு இருந்தது. இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே பதறினார்கள். அந்த சமயம் பார்த்து வந்த மீனாவின் அப்பா, அம்மா, மாப்பிள்ளைக்கு வேலை கிடைத்ததால் குலதெய்வ கோயிலுக்கு போகணும் என்று சொன்னார்கள்.
அப்போது சுகன்யா, செந்திலுக்கு மீனா தான் லோன் போட்டு பணம் தந்தார் என்பதை சொன்னார். இதைக் கேட்டு மீனாவின் அப்பா, அம்மா இருவரும் கோபித்து கொண்டு சென்றார்கள். இதனால் கோமதி, சுகன்யாவை திட்டினார். பின் கோபத்தில் மீனா, சுகன்யாவை பார்த்து என் விஷயத்தில் நீங்கள் தலையிட தேவையில்லை. உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று திட்டி விட்டு சென்றார். இன்னொரு பக்கம் ராஜி, குமாரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ராஜி, கதிர் பற்றியும் கதிர் தனக்காக செய்வது எல்லாம் சொன்னார். இதனால் குமார் மனம் மாறுவது போல காண்பித்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் தங்கமயில், சுகன்யா பேசியது தவறு என்பது போல சொன்னார். உடனே சுகன்யா, நான் எதார்த்தமாகத்தான் சொன்னேன் என்று சமாளித்தார். அதற்குப்பின் ராஜி, குமாரை சந்தித்து பேசி விஷயத்தை சொன்னார். ஆனால், அரசி இதை பற்றி பெரிதாக கண்டு கொள்ளவில்லை. பின் குமார், அரசியிடம் மன்னிப்பு கேட்ட விஷயத்தை சொல்லாமல் ராஜி மறைத்தார். அதற்கு பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், நமக்கு சொந்தமான வயலை விற்று மீனா வாங்கிய கடனையும், கதிர் டிராவல்ஸ் வைப்பதற்கும் பணத்தை இரண்டாக பங்கிட்டு கொடுக்கலாம் என்று சொன்னார். இதை கேட்ட உடன் தங்கமயில் முகம் மாறுகிறது.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் மீனாவின் அம்மா, இவ்வளவு நடந்தும் எங்களிடம் எதுவுமே சொல்லவில்லை. உனக்கு அந்த வீடுதான் பெருசா என்றெல்லாம் கேட்டார். அதற்கு மீனா, செந்திலை இந்த மாதிரி கட்டாயப்படுத்தி பணம் வாங்க வைத்தது அப்பா தான். அவர் யாருக்கும் தெரியாமல் பணத்தை எடுத்துக் கொடுத்தார். அதை சமாளிக்க லோன் வாங்கினேன் என்று நடந்ததை சொன்னார். அதற்குப்பின் ரூமில் தங்கமயில், அந்த வயல் சொத்து ஐந்து பேருக்கும் சமம். அதை எப்படி ரெண்டு பங்காக போட முடியும்? என்று கேட்டார். உடனே கோபத்தில் சரவணன், அது எங்களுடைய அப்பாவும் கஷ்டப்பட்டு வாங்கியது. அது யாருக்கு கொடுக்கணும், எப்போ கொடுக்கணும் என்று அவருக்கு தெரியும். உன் வேலையை மட்டும் பார் என்று திட்டினார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கதிர்-ராஜி இருவருமே கிரவுண்டில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்த குமார், தான் தவறாக புரிந்து கொண்டதை நினைத்து வருத்தப்படுகிறார். இது ஒரு பக்கம் சக்திவேல், தன்னுடைய மகனுக்கு மீண்டும் திருமணம் செய்து வைப்பதற்காக பேசுகிறார். அதற்கு முத்துவேல், இந்த சமயத்தில் வேண்டாம். அவன் இந்த கேசில் இருந்து விடுபடட்டும் என்று சொல்கிறார். உடனே சக்திவேல் கோபப்பட்டு தன்னுடைய அண்ணனிடம் சண்டை போடுகிறார்.
சீரியல் ட்ராக்:
முத்துவேலுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. பின் சுகன்யா, சக்திவேல் வீட்டில் நடந்ததை ராஜியிடம் சொல்லி சொல்கிறார். அதற்குப் பிறகு குமாரின் அம்மா மாரி கோயிலுக்கு வர சொன்னதால் ராஜியிமே கிளம்பி கோவிலுக்கு போகிறார். அங்கு மாரி, என் மகன் செய்தது தவறுதான். தயவுசெய்து அவனை மன்னித்துவிடு. உனக்காக தான் அவன் அப்படி செய்து விட்டான். என் மகனை விட்டு என்னால் இருக்க முடியாது. தயவு செய்து உன் மாமியார் வீட்டில் எடுத்து சொல்லி என் மகன் மீது போட்ட கேசை வாபஸ் வாங்க சொல்லு என்று கெஞ்சி அழுகிறார். ராஜிக்கு ஒன்றுமே புரியவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது