மதி-சுரேஷை சேர்த்து வைக்க மீனா செய்த வேலை, அழகே அழகு - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மெகா சங்கமம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ராஜி தேர்வு எழுத செல்வதால் எல்லோரிடமும் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு சென்றார். பின் சுரேஷ் தான் ராஜியை அழைத்துக்கொண்டு சென்றார். போகும் வழியில் கதிர் போன் செய்ததால் ராஜி டென்ஷனாக இருந்தார். ராஜிக்கு போன் செய்த கதிர் வாழ்த்துக்கள் சொல்லி வைத்து போனை வைத்து விட்டார். ராஜிக்கு இன்னும் கோபம் வருகிறது. சுரேஷ், ராஜியை சமாதானம் செய்து தேர்வு எழுத அனுப்பி வைத்தார். இன்னொரு பக்கம் மீனா, மதி இருவருமே ஜாலியாக தங்களுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டு சென்றார்கள்.
இன்னொரு பக்கம் முத்துவேல் அக்கவுண்டில் இருந்து கதிரின் அக்கவுண்டுக்கு 10 லட்சம் ரூபாய் பணம்
சென்றிருப்பதை அறிந்த சக்திவேல் கோபப்பட்டு குமாரிடம் புலம்பி கொண்டிருந்தார். குமார், பாண்டியன் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று சொன்னதால் பெரியப்பா இந்த பணத்தை போட்டு இருக்கலாம் என்றார். சக்திவேல், எதுவாக இருந்தாலும் அண்ணன் வரட்டும், கவனித்துக் கொள்கிறேன் என்றார். அதற்குப்பின் மலரின் வீட்டில் பாக்கியராஜ் வெளியே போகலாம் என்றார். மலரின் மாமியார், மாமனார் வேண்டாம் என்று மறுத்தார்கள். கோமதி கேட்டுக் கொண்டதால் வெளியில் செல்ல ஒத்துக்கொண்டார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
சுரேஷ், மீனா,ராஜி எல்லோருமே ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். பின் எல்லோருமே கிளம்பி தங்கராஜ் வீட்டிற்கு போகிறார்கள். தங்கராஜ் வழக்கம் போல தன்னைப் பற்றி ரொம்பவே பந்தாவாக பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். கோமதிக்கு கடுப்பானாலும் வெளியில் காண்பித்துக் கொள்ளாமல் அமைதியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் முத்துவேல் வியாபாரம் விஷயமாக வெளியூர் கிளம்புவதாக சொல்கிறார். உடனே சக்திவேல், என்ன வியாபாரம்? எங்களிடம் என்ன மறைக்கிறீர்கள்? நிறைய பணம் பரிமாற்றம் நடக்கிறது.
சீரியல் ப்ரோமோ:
உண்மையை சொல்லுங்கள். அந்த கதிருடன் உங்களுக்கு என்ன பழக்கம்? என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. முத்துவேல், உண்மையை சொல்ல முடியாமல் நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. நான் வந்து எல்லா பற்றியும் பேசுகிறேன் என்று சொல்கிறார். இருந்தாலும் சக்திவேல் தன் அண்ணன் மீது அதிகமாக கோபப்படுகிறார். முத்துவேல் கிளம்பி கதிர் சொன்ன இடத்திற்கு சென்று விடுகிறார். கதிர், முத்துவேல் இருவரும் காரில் ஏறி செல்கிறார்கள். இதை சக்திவேல் குமார் ஒளிந்து நின்று பார்க்கிறார்கள். இவர்கள் பார்த்ததை கதிர் பார்த்து விடுகிறார்.
https://www.youtube.com/watch?v=ORuBxlH0QTw
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சுரேஷ் பசிக்கிறது என்று கேட்கிறார். மீனா, மதியை சாப்பாடு செய்து தர சொல்லி கேட்கிறார். பின் மதி- சுரேஷ் இருவரும் கிச்சனுக்கு போகிறார்கள். அப்போது மீனா, இருவரும் கொஞ்ச நேரம் தனியாக இருந்தால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வார்கள் என்று சொல்கிறார். மதியும் சுரேஷுக்காக சமைத்து கொடுக்கிறார்