கோர்ட்டில் தங்கமயில் சொன்ன வார்த்தையால் ஆடிப்போன சரவணன் - பரபரப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் முத்துவேல், நம்முடைய அம்மா வீட்டிற்கு வந்துவிட்டார். தேவையில்லாமல் எதையும் பேச வேண்டாம் என்றார். சக்திவேல், மாப்பிள்ளை மீது ரொம்பவே அண்ணன் கரிசனம் பட்டார். எப்படியாவது இவர்களை சேர விடக்கூடாது பிரிக்க வேண்டும் என்று தன் மகனிடம் திட்டம் போட்டுக் கொண்டிருந்தார். அதற்குப்பின் கோர்ட்டில் விவாகரத்து கேஸ் நடப்பதால் கோமதி- பாண்டியன் இருவரும் சரவணனிடம் பேசி இருந்தார்கள். பாண்டியன், எதுவாக இருந்தாலும் யோசித்து முடிவு எடு, அவசரப்படாதே என்றார். சரவணன், அதை எதையுமே கண்டு கொள்ளவில்லை அமைதியாக இருந்தார்.
காந்திமதி, கதிரை தப்பா நினைக்காதே. அவன் தெரியாமல் பேசிவிட்டார் என்றார். முத்துவேல், எனக்காக தான் கதிர் அப்படி நடந்து கொண்டான். நான் எல்லோரிடமும் அவமானப்பட்டதால் தான் கதிர் உங்களை இங்கு அனுப்பி வைத்தார் என்றார். இதை கேட்டு காந்திமதிக்கு சந்தோஷமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில் எல்லோருமே சரவணன் விவாகரத்து விஷயமாக பேசிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால், தங்கமயில் மீண்டும் வீட்டிற்கு வர வேண்டாம் என்பது போலவே பேசிக் கொண்டிருந்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இன்னொரு பக்கம் பாக்கியம், நீ குழந்தையை காரணமாக வைத்து விவாகரத்து வேண்டாம் என்று சொல். எப்படியாவது இந்த வாய்ப்பை விட்டு விடாதே என்று தங்கமயிலிடம் சொன்னார். அதற்குப்பின் கோவிலில் சரவணன்- அஞ்சலி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அஞ்சலி, நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வு தான் எனக்கு வேண்டும் என்று எமோஷனலாக பேசி இருந்தார். சரவணன், என்ன நடந்தாலும் நான் இனிமேல் தங்க மயிலுடன் சேர்ந்து வரமாட்டேன். ஒருமுறை உன்னை ரொம்ப காயப்படுத்தி விட்டேன். இனிமேலும் உன்னை காயப்படுத்த மாட்டேன். நான் உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று மீண்டும் மீண்டும் உத்தரவாதம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் சரவணன், கோமதி இருவரும் கோர்ட்டுக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். அப்போது கோமதி, விவாகரத்து விஷயத்தை கொஞ்சம் யோசித்து முடிவெடு, அவசரப்படாதே என்று சொல்கிறார். சரவணன், முடிவெடுத்து விட்டேன். தங்கமயில் உடன் என்னால் இனி சேர்ந்து வாழ முடியாது. குழந்தையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார். கோமதியால் எதுவுமே பேச முடியவில்லை. பின் கோர்ட்டில் சரவணனிடம் பாக்கியம், உன்னை சும்மா விடமாட்டேன் என்று வழக்கம்போல சண்டை வாங்கிக் கொண்டிருக்கிறார். அதற்குப்பின் கோர்ட்டில் சரவணன்- தங்கமயில் விவாகரத்து வழக்கு நடக்கிறது.
சீரியல் ட்ராக்:
வழக்கம் போல சரவணன், எனக்கு தங்கமயில் உடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை. விவாகரத்து கொடுத்து விடுங்கள் என்று சொல்கிறார். பின் தங்கமயில் இடம் நீதிபதி விசாரிக்கிறார். அப்போது தங்கமயில், தன் வீட்டார் செய்த எல்லா தவறுகளையும் சொல்லி வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டு எனக்கும் விவாகரத்து கொடுத்து விடுங்கள். இனி நாங்கள் சேர்ந்து வாழ்வதில் விருப்பமில்லை என்று சொல்கிறார். இதைக் கேட்டு பாக்கியம் கோர்ட்டிலேயே கத்துகிறார். கோமதிக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அதற்குப்பின் நீதிபதியும் வேறொரு தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்து விடுகிறார். பின் வீட்டிற்கு வந்த சரவணன், கோர்ட்டில் நடந்ததை சொல்லி தங்கமயிலை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்.