கோமதியிடம் வீண் வம்புக்கு சென்ற பாக்கியம், உண்மையை சொன்னாரா தங்கமயில்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 13/3/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் வீட்டிற்கு மீனாவின் அப்பா ரவி, அம்மா எல்லோருமே வந்துவிட்டார்கள். ரவி, எதற்கு பயப்படுகிறீர்கள்? தைரியமாகிருங்கள். இதெல்லாம் ஒரு தப்பு கிடையாது. நடைமுறையில் நடக்கும் விஷயம் தான் என்றெல்லாம் சொல்லி செந்திலை சமாதானம் செய்தார். இன்னொரு பக்கம் ராஜி தன்னுடைய போலீஸ் கனவை நிறைவேற்ற கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார். கதிரும் அவருக்கு சப்போர்ட்டாக இருந்தார்.

மீனா, தங்கமயிலுக்கு போன் செய்து கோவிலுக்கு வர சொன்னார். பின் தங்கமயில் தயாராகி கிளம்பும்போது பாக்கியமும் ரெடியாகி வந்தார். தங்கமயில், வேண்டாம் என்று சொல்லியுமே பாக்கியம் கேட்கவில்லை. அவருடன் கோயிலுக்கு வந்தார். இன்னொரு பக்கம் மீனா, கோமதியை அழைத்துக்கொண்டு கோயிலுக்கு வந்தார். பின் மீனா, பாக்கியம்- தங்க மயிலை தனியாக சந்தித்து பேசி இருந்தார். மயிலை உண்மையை கோமதியிடம் பேச சொன்னார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

தங்கமயில் தன்னுடைய அம்மாவை வெளியே நிறுத்திவிட்டு மீனாவுடன் கோயிலுக்குள் சென்றார். தங்க மயிலை பார்த்தவுடன் கோமதிக்கு பயங்கர கோபம் வருகிறது. தங்க மயிலிடம் கோமதி சண்டை போட்டார். மீனா எவ்வளவு எடுத்து சொல்லி புரிய வைத்தார். ஆனால், கோமதி கேட்கவில்லை. தங்கமயில் எதுவும் பேச முடியாமல் அமைதியாக நிற்கிறார். அந்த சமயம் வந்த பாக்கியம், கோமதியின் குடும்பத்தை மோசமாக பேசி இருந்தார். இதனால் கோமதிக்கு பயங்கர கோபம் வருகிறது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோமதி, தங்கமயிலை திட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது வந்த பாக்கியம் பிரச்சனையை இன்னும் பெரிதாக மாற்றுகிறார். பாக்கியம், கோமதிக்கு பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதனால் கொந்தளித்த கோமதி, மீனாவையும் திட்டிவிட்டு செல்கிறார். ஒரு கட்டத்தில் தங்கமயில், யாரும் எனக்காக எதுவும் செய்ய வேண்டாம். என் குழந்தையை நான் பார்த்துக் கொள்கிறேன்
தயவுசெய்து நீ அமைதியாக இரு அம்மா. பிரச்சனையை இன்னும் பெரிதாக்காதே என்று அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் காந்திமதி, கோமதியிடம் பேச சொல்லி பாண்டியனுக்கு அறிவுரை சொல்கிறார். ஆனால், பாண்டியன் அதை கண்டு கொள்ளவே இல்லை. பின் காந்திமதி, அரசி இடம் குமாரை திருமணம் செய்து கொள்வதை பற்றி பேசுகிறார். பயந்துபோன அரசி, இது என் அப்பாவிற்கு தெரிந்தால் கொன்னு போட்டு விடுவார். குமாரை திருமணம் செய்து கொள்வது என்பது நடக்காத விஷயம் என்று சொல்கிறார். அதற்குப்பின் மீனா-செந்தில் இருவரும் சந்தோஷமாக சேர்ந்து சமைத்து சாப்பிடுகிறார்கள். அந்த சமயம் பார்த்து தங்கமயில் போன் செய்கிறார். செந்திலுக்கு தெரியாமல் மீனா போன் பேசுகிறார். அப்போது தங்கமயில், மீனாவிடம் மன்னிப்பு கேட்டு என்னுடைய குழந்தைக்காக நான் யாரிடமும் நிற்கவில்லை என்று எமோஷனலாக பேசுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full