சரவணன் செய்த வேலையை பார்த்து ஷாக் ஆனா மீனா, தங்கமயிலுக்கு கிடைத்த வேலை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 20/2/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மீனா, தங்கமயிலுக்கு தைரியம் கொடுத்துவிட்டு கிளம்பினார். இன்னொரு பக்கம் கதிர், ராஜிக்கு பீஸ் கட்டி கோச்சிங் சென்டரில் சேர்த்து விட்டார். இன்னொரு பக்கம் முத்துவேல், குமாருக்கு நான் நல்ல பெண் பார்த்துவிட்டேன். நல்ல சம்மந்தம். சீக்கிரத்தில் கல்யாணத்தை முடித்து விடலாம் என்றார். இதனால் வீட்டில் உள்ள எல்லாருமே சந்தோஷப்பட்டார்கள். அதுக்கு பின் செந்திலை சந்தித்த மீனா நடந்ததை எல்லாம் சொன்னார். இருந்தாலும் செந்தில், தங்கமயில் விஷயத்தில் தலையிடாதே என்று அறிவுரை சொன்னார்.

செந்தில், மீனா இருவரும் பாண்டியன் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது கோமதி, கதிர் லட்ச கணக்கில் செலவு செய்து ராஜிக்கு பீஸ் கட்டிய விஷயத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது மீனா, தங்கமயில் பெயரை எடுத்தவுடன் கோமதி கோபப்பட்டார். இதனால் செந்தில், மீனாவை திட்டி அமைதியாக இருக்க சொன்னார். அதற்குப்பின் மீனா, ராஜியை பார்த்து பேசி இருந்தார். அப்போது ராஜி, கதிர் தனக்காக செய்த விஷயங்களும், தாங்கள் கணவன்- மனைவியாக வாழ தொடங்கிய விஷயத்தைப் பற்றி எல்லாம் சொன்னார். இதனால் மீனா ரொம்ப சந்தோஷப்பட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பின் கிச்சனில் இதை பற்றி மீனா, கோமதியிடம் சொல்ல, ராஜி வெட்கப்பட்டார். இன்னொரு பக்கம் தங்கமயில் தன்னுடைய தோழிகளுக்கு போன் செய்து வேலை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். பாக்கியம் வழக்கம் போல தங்கமயிலை திட்டியும் கடுமையாக பேசிக் கொண்டும் இருந்தார். இருந்தாலும் தங்கமயில் மணமுடையாமல் வேலை தேடி போன் செய்து கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் போன் செய்த அஞ்சலி, தங்கமயிலை பற்றி கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். உடனே சரவணன், தங்கமயில் ஏமாற்றிய விஷயம், கோர்ட்டில் விவாகரத்து நடக்கும் விஷயம் என எல்லாத்தையும் சொல்லி விட்டார். இதனால் அஞ்சலி ஷாக் ஆனார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சரவணன்- அஞ்சலி இருவரும் கோயிலில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சரவணன், தங்கமயில் விஷயத்தை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து கோவிலுக்கு மீனா வருகிறார். அங்கு மீனா, தன்னுடைய தோழியை சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மீனாவின் தோழி, என் மாமியாரை பார்த்துக் கொள்ள ஆள் ஒருவர் வேண்டும். யாராவது இருந்தால் ஏற்பாடு செய்ய என்கிறார். உடனே மீனா, தங்கமயிலை பற்றி தான் யோசிக்கிறார். அப்போது சரவணன்- அஞ்சலி இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து மீனா ஷாக் ஆகிறார். அவர்களிடம் எதுவும் பேசாமல் அமைதியாக கிளம்பி வந்து விடுகிறார் மீனா.

சீரியல் ட்ராக்:

பின் தங்கமயில் இடம் வேலையைப் பற்றி மீனா சொல்கிறார். பின் மீனா- தங்கமயில் இருவரும் தோழியின் வீட்டிற்கு சென்று விடுகிறார்கள். அப்போது மீனாவின் தோழி, என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை. அவர்களால் சுத்தமாக நடக்க முடியாது. அவர்களுக்கு எல்லா வேலையையும் நீங்கள் தான் செய்யணும் என்கிறார். இதைக் கேட்டு மீனாவிற்கு கஷ்டமாக இருக்கிறது. மீனா, இந்த வேலை வேண்டாம் என்று சொன்னாலும் தங்கமயில் கேட்கவில்லை. முழு மனதோடு அந்த வேலையை செய்ய ஒத்துக்கொள்கிறார்.
இன்னொரு பக்கம் கோமதி கையில் சூடான காபி கொட்டி விடுகிறது. வலி தாங்க முடியாமல் கோமதி கத்துகிறார். ஆனால் பாண்டியன் அதை நடிப்பு என்று திட்டி விட்டு செல்கிறார். இதனால் கோமதி ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full