விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் தப்பித்து மீனாவிடம் மாட்டிய செந்தில் - பரபரப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் தப்பித்து மீனாவிடம் மாட்டிய செந்தில்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கார்த்திகேயன்-அரசி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அரசி, பாண்டியன் தான் தன்னுடைய அப்பா என்ற உண்மையை சொல்லி விட்டார். கார்த்திகேயன், என்னுடைய வியாபாரத்திற்கு உதவி செய்யுங்கள். உங்க அப்பாவிடம் சொல்லி பொருள்களை கடையில் வைக்க சொல்லுங்கள் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள். இதை கவனித்த குமார், அரசியிடம் சண்டை போட்டார். கார்த்திகேயனுக்கு ஒன்றும் தெரியவில்லை. அரசி, குமாரை திட்டி அங்கிருந்து அனுப்பி விட்டார்.
அதற்குப் பின் செந்தில் ஆபீஸில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அசிஸ்டன்ட் பாய் அவரிடம் லஞ்ச பணத்தை கொண்டு வந்து கொடுத்தார். செந்தில், இங்கு பணத்தை இடமில்லை. நீயே வைத்துக் கொள் என்றார். அந்த சமயம் பார்த்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வந்து விட்டார்கள். அவர்கள் ஆபீஸ் முழுக்க யாரெல்லாம் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று சோதனை செய்து கொண்டு இருந்தார்கள். பயத்தில் செந்தில் கை கால்கள் எல்லாம் நடுங்குகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
செந்தில், மாட்டிக் கொள்வோமா? என்று திரு திரு பயந்து கொண்டிருந்தார். பின் உயர் அதிகாரியையும், அங்கிருந்து சில அதிகாரிகளையும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்கு கைது செய்தார்கள். செந்தில் ஒரு வழியாக செந்தில் அதிலிருந்து தப்பித்து விட்டார். இருந்தாலுமே அந்த இடத்தில் மாட்டிக் கொண்டு இருந்தால் என்ன நடக்கும்? என்று யோசித்துப் பார்த்து செந்தில் பயப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வீட்டிற்கு வந்த குமார், அப்பத்தாவிடம் அரசி வேறொரு பையனுடன் பேசி இருக்கும் விஷயத்தை சொல்லி கதருகிறார். குமாரும் சத்தத்தை கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே வந்து விடுகிறார்கள். குமார், அரசியை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்றெல்லாம் கத்திக் கொண்டிருக்கிறார். முத்துவேல், பாண்டியனிடம் பொண்ணு கேட்க முடியாது என்று சொல்கிறார். சக்திவேல், பாண்டியன் மகளை விட நான் வசதியான வீட்டு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைப்பேன் என்று சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் காந்திமதி, நீ ஒழுங்காக நல்ல பையன் என்று பெயர் எடு. நான் அரசிடம் பேசி புரிய வைக்கிறேன் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் செந்தில் அலுவலகத்தில் வருமான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்திருக்கும் விஷயத்தை அறிந்து மீனா பதறி போய் ஆபீஸிற்கு வருகிறார். செந்தில் ரொம்பவே பயத்தில் இருப்பது அறிந்து மீனா ஆறுதல் சொல்கிறார். பின் செந்தில், மீனா இருவரும் வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். அப்போது மீனா, என்ன நடந்தது? எதற்காக பயப்படுகிறீர்கள்? நீங்க வீட்டில் வைத்த பணம் லஞ்ச பணமா? என்றெல்லாம் கேட்கிறார். செந்தில், வேறு வழி இல்லாமல் எல்லா உண்மையும் சொல்லி விடுகிறார். இதனால் கொந்தளித்த மீனா, செந்திலை திட்டி விட்டு அங்கிருந்து செல்கிறார்