கோமதிக்காக மீனா கொடுத்த பரிசு, பாண்டியன் சொன்ன வார்த்தை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சக்திவேல் வீட்டிற்கு பழனி சென்று இருந்தார். அப்போது முத்துவேல், புதிதாக மளிகை கடை ஆரம்பித்து தருகிறோம். அதை பார்த்துக்கொள் என்று சொன்னார்கள். பழனிவேல் ஷாக்கில் அதெல்லாம் வேண்டாம் என்றார். இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய அப்பா-அம்மாவை பார்க்க சென்றிருந்தார். அப்போது அவர்கள் புது வீட்டிற்கு போவதை பற்றி பேசி இருந்தார்கள். ஆனால், வழக்கம் போல மீனா அதில் விருப்பம் இல்லாத போலவே பேசி இருந்தார். இருந்தாலும் அவருடைய அப்பா- அம்மா கேட்கவில்லை. செந்திலைப் போலவே அவர்களும் மீனாவை கட்டாயப்படுத்தினார்கள்.
நேற்று எபிசோட்டில் பழனி, கடை எதுவும் வேண்டாம். நான் பாண்டியன் கடையிலேயே வேலை செய்கிறேன் என்றார். உடனே முத்து வீட்டில் உள்ள எல்லோருமே தனியாக கடை வைத்து சம்பாதிக்க பாரு. அதில் ஒன்றும் தப்பு இல்லை என்று சொன்னார்கள். அப்பத்தா, கோமதி- பாண்டியன் எதுவும் கோபப்பட மாட்டார்கள். நான் சொல்லிக் கொள்கிறேன். நீ கடையை பார்த்துக் கொள் என்றெல்லாம் சொல்வதால் பழனி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் புது வீட்டில் பால் காய்ச்ச போவதால் தேவையான பொருட்களை எல்லாம் கோமதி வாங்கி வந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அதற்கு பின் சுகன்யா, பழனி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சுகன்யா, நாமும் தனிகுடுத்தனும் போகலாம். உங்கள் அண்ணாவைத் தரும் கடையை பார்த்துக் கொள்ளுங்கள். இங்கு யாரும் உங்களை மதிக்கவில்லை. உங்களிடம் ஒரு ரூபாய் கூட பணம் இல்லை என்று எல்லாம் சொல்வதால் பழனி மனம் மாறுகிறது. பின் பழனி, கடையில் மாணிக்கம் சொன்னது எல்லாம் யோசித்துப் பார்த்தார். இன்னொரு பக்கம் பால் காய்ச்சும் போது வீட்டில் வருபவர்களுக்கு சாப்பாடு வாங்கி தருவதற்கு பணம் வேண்டும் என்று மீனாவிடம் சொன்னார். மீனா, எதுவாக இருந்தாலும் நீங்கள் தான் பார்த்துக் கொள்ளணும் என்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அப்பத்தா, கோமதி குடும்பத்தையும் குமாரின் கல்யாணத்தையும் நினைத்து ரொம்ப எமோஷனலாக அழுது பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு குமார், ஆறுதல் சொல்லி இருக்கிறார். இன்னொரு பக்கம் புது வீட்டிற்கு பால் காய்ச்சுவதற்காக எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது மீனா, பாண்டியனை புது வீட்டுக்கு கூப்பிடுகிறார்கள். அப்போது பாண்டியன், நான் வரவில்லை. நீங்களே போய் எல்லாம் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் மீனா, தன்னுடைய மாமியாருக்கு தங்க வளையலை பரிசாக கொடுக்கிறார். அதை பார்த்து செந்திலுக்கு கடுப்பாகிறது. கோமதி ரொம்ப எமோஷனலாக அழுகிறார். மீனாவிற்கு வீட்டை விட்டு பிரிந்து செல்ல மனமே இல்லை. எல்லோரையும் நினைத்து கவலைப்படுகிறார். அதற்குப்பின் புது வீட்டிற்கு எல்லோரும் சென்று விடுகிறார்கள். பால் காய்ச்சுவதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். பாண்டியன் மட்டும் வரவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது