சுகன்யாவின் சகுனி வேலையால் மாட்டிக்கொண்ட பழனி, மீனா சொன்ன வார்த்தை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 1/11/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில், குழந்தை கலைந்ததிலிருந்து நான் பொய் சொல்கிறேன் என்றார். பணத்தை நானும் என் அப்பாவும் தான் எடுத்தோம் என்றெல்லாம் உங்கள் பையன் என் மீது வீண்பழி போட்டார். என்னால் இந்த வீட்டில் இனிமேல் இருக்க முடியாது என்று எல்லா பழியையும் சரவணன் பக்கம் திருப்பி விட்டார். உண்மை என்னவென்று தெரியாமல் கோமதி, பாண்டியன் இருவருமே சரவணனை திட்டி தங்கமயிலை உள்ளே போக சொன்னார்கள்.

பின் சரவணன், நீ இவ்வளவு மோசமானவள் என்று எனக்கு தெரியாது என்று தங்கமயிலை திட்டி விட்டு சென்றார். ராஜி, கதிர் இருவருமே டிராவல்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது கதிர், பழனியை ட்ராவல்சை பார்த்துக்க சொல்லிவிட்டு ராஜியை அழைத்துக் கொண்டு வெளியே போனார். முதலில் துணி கடைக்கு சென்று ராஜிக்கு தேவையான துணிகளை எல்லாம் கதிர் வாங்கி தந்தார். அதற்குப்பின் இருவரும் ஹோட்டலுக்கு போனார்கள். பின் தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்த கதிர், சாப்பாடு வேண்டாம் என்றார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

கோமதி, இருவரும் வெளியில் சென்று இருப்பதை நினைத்து சந்தோஷப்பட்டார். பின் இதைப்பற்றி சுகன்யா கேள்வி கேட்டார். அதற்கு கோமதி, வெளியில் சாப்பிட்டு சந்தோஷமாக இருக்கட்டும் என்று சொன்னார். பின் சுகன்யா- தங்கமயில் இருவருமே பொறாமைப்பட்டு வயிறு எறிகிறார்கள். தங்க மயிலுக்கு ஆத்திரம் அடக்கவே முடியவில்லை. வார்த்தைகளால் சுகன்யாவிடம் கொட்டி விட்டார். அதற்குப்பின் ஷாப்பிங் எல்லாம் முடித்துவிட்டு கதிர்-ராஜி இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிட்டார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா வழக்கம் போல எந்த சாப்பாடும் செய்யவில்லை. அந்த சமயம் பார்த்து மீனாவின் அப்பா, அம்மா இருவருமே வந்துவிடுகிறார்கள். என்னதான் நினைத்திருக்கிறாய் என்று அவர் அம்மா கேட்கிறார். அதற்கு மீனா, நான் சீக்கிரமாகவே என் மாமியார் வீட்டுக்கு சென்று விடுவேன் என்று சொல்வதால் மீனாவின் அம்மாவிற்கு பயங்கர கோபம் வருகிறது. இன்னொரு பக்கம் செந்தில், என்ன பிரச்சனை நடந்தாலும் இந்த வீட்டை விட்டு நான் போக மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். அதற்குப்பின் பழனி- சுகன்யா இருவருமே முத்துவேல் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். அப்போது சுகன்யா, பணம் காணவில்லை என்று பாண்டியன் திட்டிய விஷயத்தை எல்லாம் சொன்னவுடன் சக்திவேல் பயங்கரமாக கோபப்பட்டு சண்டை போடுகிறார்.

சீரியல் ட்ராக்:

காந்திமதி பழனிக்கு ஒரு மளிகை கடையை ஆரம்பித்துக் கொடுங்கள் என்று சொல்வதால் சுகன்யா ரொம்ப சந்தோஷப்படுகிறார். அதற்கு பின் ராஜிசி -அரசி இருவருமே ரோட்டில் வந்து கொண்டிருக்கும் போது குமார் மன்னிப்பு கேட்கிறார். ஆனால், அரசி கோபப்பட்டு திட்டி அனுப்பி விடுகிறார். அதற்குப்பின் வீட்டிற்கு மீனா வந்திருக்கிறார். ராஜி, கோமதி எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். பின் கோமதி, வீட்டில் தங்க சொல்கிறார். அந்த சமயம் பார்த்து செந்தில் போன் செய்து சீக்கிரமாக வீட்டிற்கு வந்து சமைத்து விடு என்று சொல்கிறார். இதனால் மீனா, நான் இங்கேயே தங்கி விட்டு வரச் சொல்லி செந்தில் சம்மதம் சொல்லிவிட்டார் என்று பொய் சொல்கிறார். அரசி- ராஜி இருவரும் சந்தோஷப்படுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full