சந்தோசமாக ட்ரிப்பை என்ஜாய் பண்ணும் மீனா-மலர் குடும்பம், சோகத்தில் கதிர் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 13/5/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பஸ் ஒரு இடத்தில் நின்று கொண்டிருக்கும் போது அங்கு கதிர் இளநீர் குடித்து கொண்டு இருந்தார். அதை ராஜி பார்த்து விட்டார். கதிரை பார்த்தவுடன் ராஜி, மீனாவிடம் சொன்னார். ஆனால், மீனா நம்பவில்லை. அதோடு கதிர், ராஜியை பார்க்கவில்லை. உடனே பஸ் எடுத்து விட்டார்கள். ராஜி, கதிரை பற்றி யோசித்துக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் முத்துவேல் ஆபரேஷன் நினைத்து ரொம்பவே பயந்து கொண்டிருந்தார். கதிர் அவருக்கு ஆறுதல் சொல்லுகிறார்.

தீம் பார்கில் கோமதி குடும்பம், மலரின் குடும்பம் வந்து விட்டார்கள். எல்லோருமே ஜாலியாக விளையாட போகலாம் என்று நினைத்தார்கள். அப்போது மலரின் மாமனார், மாமியார் இருவரும் எல்லோரும் சென்று விட்டால் எங்களுக்கு தேவையானதை யார் செய்வார்கள் என்றார்கள். இதனால் மலர், பாக்கியராஜ் இருவருமே அங்கே இருந்து விட்டார்கள். மற்றவர்கள் மட்டும் போய் விளையாட போனார்கள். பின் மலருக்கு மாற்றி மாற்றி மாமனார்-மாமியார் இருவரும் வேலை வைத்துக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் பார்த்து கோமதிக்கு கடுப்பானது. இருந்தாலும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அப்போது வந்த மதி, உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் வீட்டிலேயே இருக்க வேண்டியதுதானே, எதற்கு இவர்களையும் கஷ்டப்படுத்துகிறீர்கள் என்று எதிர்த்து பேசி இருந்தார். இதனால் கோபப்பட்டு மலரின் மாமனார், மாமியார் இருவரும் மதியை திட்டினார்கள். ஒரு கட்டத்தில் கோமதி, மதி பேசுவது சரிதான். எதற்காக இப்படி வேலை வாங்குகிறீர்கள் என்றார். கோபத்தில் மலரின் மாமனார்-மாமியார், கோமதியை அவமரியாதையாக பேசி விட்டார். இதனால் கோமதி ரொம்பவே மனமடைந்து விட்டார். அந்த சமயம் பார்த்து செந்தில் அங்கு வந்தார். செந்தில் இடம் நடந்ததை எல்லாம் கோமதி சொன்னார். பின் மீனா-செந்தில், மலரின் மாமனாரிடம் சண்டை வாங்கினார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோமதி குடும்பத்தில் மீனா- செந்தில் இருவரும் மலரின் மாமனார் மாமியாரிடம் பயங்கரமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் கோமதி, நான் அவர்கள் வீட்டு விசயத்தில் தலையிட்டு இருக்கக் கூடாது. என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்கிறார். உடனே மலர் மாமனார், மாமியாரும் நானும் கோபத்தில் பேசி விட்டேன் என்று சொல்லி சமாதானம் ஆகி விடுகிறார்கள். பின் எல்லோருமே சேர்ந்து ஒன்றாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் மலருக்கு அவருடைய மாமியார் வேலை வைத்துக் கொண்டே இருந்தார்.

சீரியல் ட்ராக்:

இதை கவனித்த சுரேஷ், தன்னுடைய அப்பா- அம்மாவை ஒரு அறையில் ஓய்வு எடுக்க சொல்லி அனுப்பி வைக்கிறார். பின் எல்லா ஜோடிகளுமே ஜாலியாக அந்த பார்க்கில் உள்ள எல்லா விளையாட்டிலும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். கோமதியும் அதை பார்த்து சந்தோஷப்படுகிறார். ராஜி, கதிருக்கு போன் செய்து விசாரிக்கிறார். கதிர் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். ராஜி, நீ சென்னையில் தானே இருக்கிறாய் என்று சொல்கிறார். கதிர், இல்லை என்று சொல்கிறார். அதற்குப்பின் அங்கு பாட்டு போட்டி நடக்கிறது. அதில் கோமதி கலந்து கொண்டு சூப்பராக பாடுகிறார். பின் மலரும் பாடுவதற்காக மேடை ஏறுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full