மீனா கேட்கும் கேள்வியால் திணறும் செந்தில், வெளிவருமா ஊழல் உண்மை? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

மீனா கேட்கும் கேள்வியால் திணறும் செந்தில், வெளிவருமா உண்மை?

By subhashini · 24/6/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன், அஞ்சலியிடமும் அவருடைய பெற்றோர்களிடமும் மன்னிப்பு கேட்டார். அப்போது சரவணன், தன்னுடைய வாழ்க்கையில் நடந்ததை பற்றியும் அஞ்சலியை சந்தித்த விதத்தை எல்லாம் சொல்லி எமோஷனலாக பேசி இருந்தார். அதைக் கேட்டு அஞ்சலி அழுதார். இன்னொரு பக்கம் செந்தில் தான் வாங்கிய லஞ்சப் பணத்தை பீரோவில் வைத்து கொண்டிருந்தார். அதை மீனா கவனித்து விட்டார். மீனா, என்ன பணம்? எப்படி வந்தது? என்றெல்லாம் கேட்டார். செந்தில் ஏதேதோ சொல்லி அங்கிருந்து கிளம்பி விட்டார்.

பழனி, சுகன்யா இருவரும் கோமதி வீட்டுக்கு வந்திருந்தார்கள். அப்போது கோமதி, சரவணன் நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு பேசி இருந்தார். பழனியும் ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய கணவர் லஞ்சம் வாங்குகிறாரா? அந்த பணம் எப்படி வந்தது? என்று நினைத்து கவலையில் இருக்கிறார். என்ன செய்வது என்று புரியாமல் மீனா தவித்தார். இன்னொரு பக்கம் செந்தில், தன்னுடைய மாமனார் ரவியை சந்தித்து வீட்டில் நடந்ததை எல்லாம் சொன்னார். அதற்கு ரவி, அதெல்லாம் ஒன்றும் இல்லை.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நீங்கள் 10 லட்சம் கட்டிய லஞ்சத்தை எப்படி எடுக்க முடியும். பணத்தை வீட்டில் வைக்காதீர்கள். என்னிடம் கொண்டு வந்து கொடுங்கள். அதை பொருளாகவும் மனையாகவும் வாங்கிவிடலாம் என்றெல்லாம் சொன்னார். செந்திலுமே அந்த பணத்தை வீட்டிற்கு சென்று எடுத்து வந்து ரவி இடம் கொடுத்து விட்டார். ரவி, இனிமேல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் கதிர், ராஜி இருவரும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது கதிர், சரவணனின் நிலைமையை நினைத்து எமோஷனலாக பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பழனி, சரவணன்- தங்கமயில் வாழ்க்கையை பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது குமார், எனக்கு திருமணம் ஆகவில்லை என்று யாராவது பேசுறீங்களா? என்னுடன் யாருமே வீட்டில் பேசவில்லை என்று சொன்னார். இதனால் பழனி கோபத்தில் குமாரை திட்டி விடுகிறார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு சென்றால் மீனா கேள்வி கேட்பார் என்று செந்தில் தாமதமாக தான் செல்கிறார். இருந்தாலும் மீனா, செந்தில் இடம் அந்த பணத்தை பற்றி பேச வேண்டும் என்று விழித்து கொண்டிருக்கிறார். மீனா, அந்த பணம் எப்படி வந்தது? லஞ்சம் வாங்கினீர்களா? உண்மையை சொல்லுங்கள்.

சீரியல் ட்ராக்:

லஞ்சம் வாங்கினால் வேலை போய்விடும் என்றெல்லாம் சொல்கிறார். செந்தில், அது நான் சேர்த்து வைத்த பணம். அதை நான் என் நண்பனிடம் கடனாக கொடுத்துவிட்டேன் என்றெல்லாம் சமாளித்து விட்டு தூங்க செல்கிறார். மறுநாள் காலையில் மீண்டும் மீனா, அந்த பணத்தைப் பற்றியே துருவி துருவி கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் கொந்தளித்த செந்தில், எனக்கு லஞ்சம் வாங்கினால் வேலை போய்விடும் என்று தெரியும். அது லஞ்ச பணம் இல்லை. நான் சேர்த்து வைத்த பணம் என்று பேசுகிறார். இருந்தாலும் மீனாவிற்கு செந்தில் சொல்வதில் நம்பிக்கையே இல்லை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full